07-06-2003, 05:20 PM
அது சரி ஏன் இந்த குப்பைத் தொட்டியை கிளறி பெண்களை நாறடிக்கிறீர்கள்....பாவம் அவர்களுக்கு குடிக்க கூழும் இருக்க இடமும் கொடுத்திருந்தால் அதுகள் ஏன் ஏலம் போற அளவுக்கு போகுதுகள்...இதே இந்திய மண்ணில் 'பெண்ணியம்' என்றும் பெண் விடுதலை என்றும் மேடைகள் போட செலவு செய்யும் பணத்தை இப்படியான ஏழைப் பெண்களுக்கு செலவு செய்தால் அவர்கள் தாங்களே தங்களை பாதுகாத்து மானம் மரியாதையுடன் வாழ வழி கிடைத்திருக்குமே! அது செய்ய திராணி இல்லை கேவலங்களை பெண்களின் படத்தைப் போட்டு பப்பிளிசிற்றி தேடுவது எந்த நோக்கத்தில் சாமியார் என்ற வேடதாரிகளுக்கும் அவர்களை நம்பியே வாழும் பெண்களுக்கும் விளம்பரத்துக்கா! இவர்களின் கதையைப்பார்த்து இன்னும் பல நூறு ஏழைப் பெண்கள் இதே வழியில் செல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்! இதுதானா பெண் விழிப்புணர்த்து கைங்கரியம்...ஒரு பிரச்சனையை சொல்வது கெட்டித்தனமல்ல பிரச்சனைக்கான தீர்வின் வழிவகைகளையும் முன் வைப்பதே நாலு பேர் திருந்த அல்லது பிரச்சனையை தவிர்க்க வழி செய்யும்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

