05-02-2004, 03:33 AM
கதிர்காமரின் கூற்று மேலோட்டமானதே தெளிவான நிலைப்பாடு தெரியவேண்டும்
புலிகள் தலைமையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தகவல்
சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் கடைசியாக ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் உற்சாகமளிக்கின்றன. என்றாலும், கதிர்காமர் இந்தக் கருத்துக்களை மேலோட்டமாக வெளியிட்டிருப்பதாகவே புலிகளின் தலைமை கருதுகின்றது. தெளிவானவகையில் - முறைப்படி - தங்கள் நிலைப்பாட்டை வெளியிட்டால் புதிய அரசுடன் பேச்சுக்களைத் தொடங்குவது பற்றிப் புலிகள் சாதகமாகப் பரிசீலிப்பர். விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் நேற்றிரவு இத்தகவலை வெளியிட்டன.
ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகளை ஏற்று, அவர்களோடு அரசு பேச்சு நடத்தும் என்று வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் இந்தியாவில் இருந்தபோது வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் தொடர்பாகக் கேட்ட போதே அந்த வட்டாரங்கள் இவ்வாறு தெரிவித்தன. புதிய அரசுடன் சமாதான முயற்சிகளை மீள ஆரம்பிக்க முன்னர் சில முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து அவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள விடுதலைப்புலிகள் விரும்புகின்றனர். அந்த விடயங்களை அவர்கள் ஏற்கனவே தெரியப்படுத்தியும் உள்ளனர். முன்னைய அரசுடன் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட சமயம் ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் புலிகளே என்பதை அந்த அரசு ஏற்ற நிலையிலேயே சமாதான முயற்சிகள் இடம்பெற்றன. அந்த நிலைப் பாட்டை இந்த அரசும் ஏற்றுக்கொள் கிறதா? கடந்த அரசு போன்று சமாதானப் பேச்சுக்களில் அரசுடன் விடுதலைப் புலிகளை சமபங்காளிகளாக அங்கீகரித்து, கௌரவத்துடனும், மதிப்புடனும் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தஅரசும் தயாரா? கடைசியாகப் பேச்சுக்களில் புலிகள் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனையை முன்வைத்திருந்தனர். அதற்கு தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையும் கிடைத்திருக்கின்றது. இலங்கை அரசு அதற்கு இணங்கவேண்டும் என்ற மக்களின் ஆணையை ஏற்றுச் செயற்பட இந்த அரசு தயாரா? இந்த மூன்று பிரதான விடயங்களிலும் புதிய அரசிடமிருந்து தெளிவான விளக்கங்களைப் பெற்று, அவற்றை நன்கு அலசி ஆராய்ந்த பின்னரே புலிகளின் தலைமை அடுத்தகட்டநகர்வுக்குச் செல்லும் என்றும் தற்போது கதிர்காமர் இந்த விடயங்கள்பற்றி மேலோட்டமாகக் கருத்து வெளியிட்டிருப் பதாகவே புலிகள் கருதுகின்றனர் என்றும் -அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பது தொடர்பாக அமைச்சர் கதிர்காமர் கடைசியாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், தெற்கில் கடும்போக்கு சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து அவருக்கு எதிராகக் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கக்கூடும் என்றும் புலிகள் கருதுகின்றனர். சந்திரிகாவின் அரசு சமாதான முயற்சி தொடர்பாக எடுக்கும் இது போன்ற நிலைப்பாடுகளை அவரது பங்காளிக் கட்சிகள் ஏற்றுக்கொள் ளுமா என்பதும், அவற்றின் ஆதர வில் ஊசலாடும் நாடாளுமன்ற பலத்தைக்கொண்டுள்ள அரசினால் அதன் நிலைப்பாடுகளைச் சரிவர அனுசரிக்க இயலுமா என்பதும் ஐயத்துக்குரியது என்ற கருத்தும் புலிகள் வட்டாரங்களில் உள்ளது. இதேவேளை, இந்தத் தடவை சமாதானப் பேச்சுக்கள் தொடர்பான சகல விடயங்களையும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே நேரடியாகக்கை யாள்வார் என்றும் புலிகளின் தலைமையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் சுட்டிக் காட்டின.
உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>