07-06-2003, 03:23 PM
''தம்பி.. மீண்டும் ஆயுதத்தை தூக்கு..!''
பிரபாகரனுக்கு மக்கள் உத்தரவு!இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலி களுக்கும் இடையே நடந்துவந்த சமாதானப் பேச்சுக்கள் இப்போது மொத்தமாகச் சுணங்க ஆரம்பித்திருக் கின்றன.
சமாதானப் பேச்சில் முழு முயற்சியாக இருந்து வந்த நார்வே நாடும் என்ன செய்வதென்று புரியாமல் அமைதியாக வேடிக்கை பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
'இனி சமாதானம் என்பது எட்டாக்கனிதான்' என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் ஆரூடம் சொல்லுமளவுக்கு நிலைமை கீழே போய்விட்டது.
'ஒன்றரை ஆண்டு காலமாக அந்த இலங்கைத் தீவில் நிலவிவந்த அமைதிஇ எப்போது வேண்டு மானாலும் காணாமல் போகலாம். இலங்கை ராணுவமும் புலிகளும் துப்பாக்கிகளைத் துடைக்க ஆரம்பித்துவிட்டன‘ என்று செய்திகள் பறந்து வந்து உலகத்தமிழர்களிடையே கவலையை படரவிட்டுக் கொண்டிருக்கின்றன.
கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த 'பொங்கு தமிழ்' என்ற கலைநிகழ்ச்சி அதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துவிட்டது.
ஈழத்தமிழர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் இந்த 'பொங்குதமிழ்‘ கலைவிழா யாழ்ப்பாணம் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் திரண்டு நிற்க... கடந்தவாரம் படு கலகலப்பாக நடந்திருக்கிறது.
'பதினாறு ஆண்டுகளுக்கு முன் சுகுமலைக் காட்டில் பிரபாகரன் பேசியபோது திரண்ட கூட்டம்தான் பிரமாண்ட கூட்டமாக ஈழ சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. அதற்கு இணையான கூட்டம் இப்போது கூடியிருக்கிறது' என்று சொல்லுமளவுக்குக் கூட்டமாம்.
''எமது நிலம் எமக்கு வேண்டும்‘' என்ற கோஷத்துடன் நடந்த இந்த விழாவில் தமிழர் பகுதியில் இருக்கும் இலங்கை ராணுவத்தை வெளியேறச் சொல்லித்தான் பொதுமக்கள் ஆக்ரோஷமான கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். [/color]பகுதியை ராணுவம் வளைத்திருப்பது மாதிரி போடப்பட்டிருந்த ஒரு செட் காண்போரை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. ஒரு ஓலைக் குடிசையை ராணுவம் பாதுகாப்பது மாதிரியும் அந்தக் குடிசையை ஒரு பாம்பு சுற்றி வளைத்திருப்பது மாதிரியும் 'நிருத்து' என்ற பிழையான தமிழில் ஒரு பலகையும் கொண்டதாக இருந்த அந்த செட்டை(ராணுவத்தின் கட்டுப்பாட்டை) நிகழ்ச்சியின் முடிவில் தகர்ப்பது மாதிரி ஏற்பாடு. இதற்காக சிலரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள். ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களே நிகழ்ச்சி முடிந்ததும் மேடைக்கு ஓடிப்போய் ஆவேசக் கூச்சலுடன் அதைத் தகர்த்திருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் மட்டுமல்ல இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் செய்தித் தொடர்பாளர் சமன் அத்தாவுடஹெட்டியும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. மோகன்தாஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளர் இளம்பரிதி பேசிய பேச்சுதான் ஈழத்தமிழர்களது இன்றைய எண்ணத்தை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.
''தமிழர்களாகிய நாங்கள் எங்கள் வீட்டுக்குப் போகவேண்டும். நீங்கள் (ராணுவம்) உங்கள் வீட்டுக்குக் கிளம்புங்கள்...'' என்று தொடங்கிய இளம்பரிதி ''எங்களது மக்களுக்காகத்தான் எல்லா அவமானங்களையும் சகித்துக் கொண்டோம். ஆறு கட்டமாகப் பேச்சுவார்த்தைகள் நடந்த பிறகும் தமிழர்களின் மனிதாபிமானத் தேவைகள்கூட நிறைவேற்றப்படாததை ஆட்சேபிக்கிறோம்.
இதனால்தான் எங்கள் தலைவர் பேச்சுவார்த்தையைத் தற்காலிகமாக நிறுத்தினார். அதிகாரமுள்ள ஜனாதிபதி சந்திரிகாவுடன் நித்தமும் திண்டாடிக் கொண்டிருக்கும் பிரதமர் ரணிலுடன் அரசியல் தீர்வுகள் பற்றிப் பேசுவது சாத்தியமற்றது..'' என்று முடித்திருக்கிறார்.
''பரிதியின் பேச்சுக்குக் கூடியிருந்த கூட்டம் கொடுத்த வரவேற்பு இலங்கையில் மீண்டும் உள்நாட்டுப் போரைத் தொடங்கிவைக்கும் என்பதைத்தான் காட்டுகிறது‘‘ என்று சொல்லும் சர்வதேச அரசியல் நோக்கர்கள் இவர்கள் இன்னொரு ஆதாரத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
'' 'கிளிநொச்சி தமிழர் தேசியப் பேரவை..‘ 'முல்லைத்தீவு கடலோரப் பகுதி மக்கள் அமைப்பு..‘ ஆகிய அமைப்புகளின் சார்பில் பிரபாகரனுக்கு சமீபத்தில் மகஜர்கள் அனுப்பியிருக்கிறார்கள் அதில் 'தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் எம் தலைவனே! உங்கள் மௌனத்தைஇ அமைதியை பொறுமையை சிங்கள அரசுப் படைகள் புரிய மறந்தார்கள்.
இதற்கு மேலும் நீங்கள் சிங்கள அரசிடம் நீதியும் நியாயமும் வேண்டி நிற்கக்கூடாது. லட்சியத்துக்காக உயிரைத் துச்சமாக மதிக்கும் பிள்ளைகளைத்தான் நாம் போருக்கு அனுப்பினோம். இனியும் அனுப்பிவைப்போம்' என்று ஆக்ரோஷத்துடன் அந்த அமைப்புக்கள் தங்களது எண்ணத்தை எழுதியிருக்கின்றன. இதுபோன்ற கடிங்கள் விடுதலைப்புலிகளின் தலைமையை உசுப்பிவிடலாம்...'' என்கிறார்கள்.
'இலங்கையில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளை இணைத்து அங்கே இடைக்கால நிர்வாகம் அமைத்து அதை நிர்வகிக்கும் பொறுப்பைத் தங்களிடம் தரவேண்டும்‘ என்பதுதான் புலிகளின் கோரிக்கை. இதைப் பிரதமர் ரணில் ஏற்றுக் கொண்டாலும் ஜனாதிபதி சந்திரிகா ஏற்கவில்லை.
இதனால்தான் 'சந்திரிகா ஜனாதிபதியாக இருக்கும் வரை பிரதமர் ரணில் எதுவும் செய்ய முடியாது. அரசியல் அதிகாரம் இல்லாத ரணில் அரசு சும்மா ஒப்புக்குக் கொடுக்கும் வாக்குறுதியை நம்பி நாம் எதுவும் செய்துவிடக்கூடாது...' என்று சொல்லி புலிகள் சமாதானப் பேச்சிலிருந்து விலகி நிற்கிறார்கள்.[/color]இப்படி விலகி நிற்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரண உதவிகள் பெறும் நன்கொடையாளர் மாநாடு சமீபத்தில் டோக்கியோவில் நடந்தது.
'சமாதானப் பேச்சு முடியும் தருணத்தில் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும்' என்பது முக்கிய நிபந்தனையாக அந்த மாநாட்டில் பேசப்பட்டதாம். இப்படியரு நிபந்தனை பற்றி மாநாட்டில் பேச்சு வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான் மாநாட்டையே புலிகள் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.
''நாங்கள் போர்நிறுத்தம் செய்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுவிட்டு அமைதியாக நிற்கிறோம். இதற்குமேல் எங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆயுதங்களை மொத்தமாக நாங்கள் இழக்க முடியாது. ஆயுதங்கள்தான் எமது பேரம் பேசும் வலு. எமது மக்களைப் பாதுகாக்கும் கருவியும் அவைதான்!'' என்று புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் சமாதான முயற்சியில் இருக்கும் நார்வே தரப்பிடம் கறாராகச் சொல்லி விட்டாராம்.
இந்த விஷயங்கள் இலங்கைப் பிரதமரின் முகத்தில் கவலை ரேகைகளை வெகுவாகப் படர விட்டிருக்கிறதாம்.
இடைக்கால நிர்வாகத்துக்குச் சாதகமான வாக்குறுதியைப் புலிகளுக்குக் கொடுத்துவிட்டு அதற்கு சந்திரிகாவின் ஒப்புதலை வாங்க முடியாமல் ரணில் விழித்துக் கொண்டிருக்கும் அதேசமயம்...
'சமாதானமாகப் போகிறோம்' என்று சொல்லி உலக நாடுகளிடம் நிவாரணப் பணம் வாங்கிவிட்டு மீண்டும் சண்டையைத் தொடங்கினால்... உலக நாடுகளின் பல்வேறு முனைகளிலிருந்தும் கண்டனக் கணைகள் வருமே‘ என்று இடி விழுந்தது போல உட்கார்ந்திருக்கிறார் ரணில்.
இவரைப் போலவே 1995-ல் சந்தோஷத்துடன் சமாதானக் கொடி பிடித்தவர்தான் சந்திரிகா. ஆனால் அந்தச் சமாதானப் பேச்சு ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை.
அந்தக் காயம் இன்னமும் ஆறாதவராக இருக்கும் சந்திரிகா ''புலிகள் சாத்தியமில்லாத கோரிக்கைகளை வைக்கிறார்கள். ஆயுதங்களை மீண்டும் கையிலெடுத்து எதிரிகளை ராணுவ உளவாளிகளை ஒழித்துக் கட்டுகிறார்கள். போர் எப்போது தொடங்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் அதற்கான யூகங்கள் உள்ளன...'' என்று இப்போது எச்சரிக்கத் தொடங்கி விட்டார் சந்திரிகா.
யாழ்ப்பாணத்தில் நடந்த 'பொங்கு தமிழ்' நிகழ்ச்சிப் பிரகடனமும் சந்திரிகாவின் இந்த எச்சரிக்கையும் ஈழத்தில் மீண்டும் ரத்தச் சிதறலுக்கு அடித்தளம் போட்டால்இ அது தமிழனின் துரதிர்ஷ்டம்தான்!
- ப. திருமாவேலன்[/color]
நன்றி ஜுனியர்விகடன்- 09.07.03