05-01-2004, 11:50 AM
[size=20][b]குத்து - சினிமா விமர்சனம்
[size=15]எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்மாறாகச் செய்யத் துடிக்கும்
தில்லான இளைஞன் குருமூர்த்தி.
தனது அப்பா, அந்த ஊருக்கே தாதா என்பது வெளியே தெரியாதபடி அடக்க ஒடுக்கமாக இருப்பவள்
அஞ்சலி.
குருவும், அஞ்சலியும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். நட்பு ரீதியாக பழகுகிறார்கள்.
கல்லூரி விழா மேடையில் இருவரும் ஒரு சேர ஆடிப்பாடுவதையும் கண்ட அடியாள் ஒருவன்,
குரு மூர்த்தியிடம் நீ அஞ்சலி கூட பழகக் கூடாது என்று கண்டிஷன் போட...
நான் அப்படித்தான் பழகுவேன். ஏன் காதலிக்கவும் செய்வேன் என்கிறார் குரு.
சொன்னது போலவே அஞ்சலியை காதலிக்கத் தொடங்குகிறான். அஞ்சலியும் குருவை மனதாரக்
காதலிக்கிறாள்.
விஷயம் அஞ்சலியின் தந்தையும் தாதாவுமான வீரபாகுவுக்கு தெரியவர ஆயுதங்களுடன்
அடியாட்களை அனுப்பி வைக்கிறார். அவர்களை அடித்து துவைத்து டிராக்டரில்
அள்ளிப் போட்டு அனுப்பி வைக்கிறான் குரு.
<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/miche%2Bkuttuimg1040414024_1_1.gif' border='0' alt='user posted image'>
மகளை பாதுகாக்க நினைக்கும் வீரமாகு அவளது தாத்தாவான அண்ணாமலையின் ஊருக்கு
அனுப்பி மறைத்து வைக்கிறான்.
அஞ்சலியை தேடிக் கண்டுபிடிக்கும் குரு, வீரபாகு மற்றும் அண்ணாமலையை எதிர்கொண்டு
அவளது கரம்பிடிக்கிறான் என்பது கதை.
குருவாக சிம்பு, அஞ்சலியாக புதுமுகம் ரம்யா, வீரபாகுவாக கலாபவன் மணி,
அண்ணாமலையாக கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளனர்.
சண்டைக் காட்களிலும், பாடல் காட்சிகளிலும் சிம்பு இந்தப் படத்தில் ரொம்ப விசேஷமாகத்
தெரிகிறார். ஊர் பேசுகிற மாதிரி இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பது தெளிவாகவே தெரிகிறது.
ஒரு விரலைக் காட்டி இது தாயம். ஜெயிப்பதற்கு மட்டும்தான் என்கிற டயலாக் இளைய
தலைமுறையினரை அசத்துகிறது. மற்றபடி நடிப்பில் வழக்கமான சிம்புதான்.
புதுமுகம் ரம்யா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அடுத்த கிரண். தாராளமாக இடை, முதுகை
காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளில் விதம், விதமான உடைகளோடு வந்து ரசிகர்களை
உசுப்பேற்றுகிறார்.
வீட்டுக்குள் புகுந்த சிம்புவை ஒரு முத்தம் கொடு என்று கேட்பதும், சிம்பு கண் முன்பே
உடை மாற்றுவதும் இன்ப கிளுகிளுப்பு ஏற்றுகிறது. கலாபவன் மணி இதற்கு முன்பு இல்லாத
அளவுக்கு கலக்கி இருக்கிறார். டென்ஷன் பேர்வழியாக புதிய கோணத்தில் நடித்திருக்கும
் கலாபவன்மணிக்கு "குத்து" மீண்டும் ஒரு திருப்புமுனை. கிளைமாக்ஸ் காட்சிகளில்
அடியாட்களிடம் அவர் நடந்து காண்பிக்கிற கட்டம் உச்சகட்டம்.
<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/miche%2Bkuttu.img1040414024_1_2~0.gif' border='0' alt='user posted image'>
இதேப்போல் கருணாசுக்கும் குத்து படம் ஒரு முக்கிய திருப்புமுனை. கல்லூரி மாணவி
ஒருத்தியிடம் காதல் கடிதம் கொடுத்து விட்டு அவருடன் தனி அறைக்கு சென்று அடி உதை
வாங்கியதை நண்பர்களிடம் சொல்லுகிற விதம் தியேட்டரில் சிரிப்பு வெடி வைத்தது போல்
வெடித்து சிதறுகிறது.
கோட்டா சீனிவாசராவ், இளவரசு, சுமன் ஷெட்டி, லிவிங்ஸ்டன், பெசன்ட் நகர் ரவி, மனோரமா,
ஐஸ்வர்யா, குயிலி சிறப்பான பாத்திரம். நிறைவான நடிப்பு.
மும்தாஜ், ரம்யா கிருஷ்ணன் தலா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். மும்தாஜ்
பின்தங்கி ஆடுகிறார்.
ஸ்ரீகாந்த்தேவா இசையில் நிபுணா பாடல் தவிர அனைத்தும் குத்தாட்ட பாடல்கள்.
குத்து குத்து, போட்டுத் தாக்கு பாடல்கள் ஜனரஞ்சகம். அருமையான பின்னணி இசை.
வி. பிரபாகரின் வசனங்கள் கைகொடுத்துள்ளன. நறுக்தெரித்தாற்போல் சுருக்கமான வசனங்கள்.
சூப்பர் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் கிராபிக்ஸ் யுக்திகளுடன் பிரம்மிக்க வைக்கின்றன.
வெங்கடேஷ் இயக்கி இருக்கிறார். அழகான பிலிம் மேக்கிங் என்றாலும் கதையில் புதுமை இல்லை.
யூத்தையும் காதலையும் எதிர்க்க முடியாது என்று சொல்லும் வெங்கடேஷ் சிம்புவுக்காக
மாணவர்கள் பெருவாரியாக திரள வேண்டிய அவசியம் பற்றி சொல்லவில்லை. இருந்தாலும் காதல்,
ஆடல், பாடல், பைட் என்று ஜனரஞ்சகத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பட்டி, தொட்டிகளில் எல்லாம்
பட்டையை கிளப்பலாம்.
குத்து - புதிய மொந்தையில் பழைய கள்ளு!
நன்றி - தமிழ் சினிமா
அன்புடன் மிச்சி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::