04-30-2004, 09:52 PM
<b>புலிகளின் ஆயுதங்களில் 42 வீதமானவை இராணுவ களஞ்சியங்களில் இருந்தவையே தெற்காசிய நட்புறவு சர்வதேச நிலைய நிறைவேற்று
பணிப்பாளர் அற்புதராசா </b>
(எஸ்.என்.ஆர்.பிள்ளை)
தமிழீழ விடுதலைப்புலிகளிடமுள்ள ஆயுதங்களில் 42 வீதமானவை இராணுவ களஞ்சியங்களில் இருந்த ஆயுதங்களே. இந்த ஆயுதங்கள் புலிகளிடம் எவ்வாறு சென்றது என்பது குறித்து இராணுவ விசாரணையும் நடத்தப்படவில்லை புலிகள் இயக்கத்திற்கு இராணுவ களஞ்சியத்தில் இருந்து ஆயுதங்கள் செல்லவில்லை என முன்பு கூறி இருக்க முடியும் ஆனால் அந்த நிலை தற்போது முற்றிலும் மாறியுள்ளது.
கருணாபுலிகள் இயக்க மோதலை அடுத்து புலிகள் இயக்கத்தின் ஆயுதங்கள் தாராளமாக சந்தைக்கு வந்துள்ளன. கொழும்பு வீதிகளில் சிறிய பெரிய ஆயுதங்கள் தாராளமாகக்கிடைக்கின்றன என தெற்காசிய நட்புறவு சர்வதேச நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜேம்ஸ் அற்புதராசா தெரிவித்தார்.
கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று காலை நடைபெற்ற ""சிறிய ஆயுதங்களும் அதன் பாவனையும்' என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். அற்புதராசா அங்கு தொடர்ந்து உரையாற்று கையில் அரசியல்வாதிகளை பாதுகாக்க ஆயுதங்கள் வழங்கப்பட்டால் பொது மக்களை பாதுகாப்பது யார்?
அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கென அவர்களது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களும் குற்றச் செயல்களுக்காக வாடகைக்கு விடப்படுகின்றன.
மாற்று அரசியல்வாதிகளுக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்த பொது மக்களை ஆயுத மயப்படுத்துவது சமூகத்தில் பெரும் கலவரங்களை ஏற்படுத்தும். இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பும் அதே வேளை அந்த நாடுகள் தமது நாட்டில் ஆயுத உற்பத்தியைபெரிதும் ஊக்குவித்து வருகின்றன. வர்த்தகத்திற்கும் தொழில் வாய்ப்பிற்கும் அரசாங்கங்கள் ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு சட்ட ரீதியாக வரும் ஆயுதங்கள் அங்கிருந்து சட்ட ரீதியற்ற முறையில் ஏனைய நாடுகளுக்கு செல்கின்றன.
ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவோர் அரசாங்கங்களுக்கும் அதே வேளை சம்பந்தப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி நடத்தும் குழுக்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே வகையான ஆயுதங்களை விற்பனை செய்கின்றனர். ஆயுத உற்பத்தி செய்யும் நாடுகள் தமது வர்த்தகத்திற்காக ஏனைய நாடுகளில் பிணக்குகளையும் உருவாக்கி வருகின்றன.
நேபாள நாட்டில் தேர்தல் வன்செயல்களை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக சட்டரீதியாக ஆயுதங்களை வைத்திருப்போர் தேர்தல் நடைபெறும் தினத்திற்கு இரண்டு வாரத்திற்கு முன் தமது ஆயுதங்ளை ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறையை கடுமையாக நடைமுறைப்படுத்துகின்றது.
இலங்கையில் தற்போது ஆயுதங்கள் இரவு விடுதிகள் மதுபான சாலைகள் களியாட்ட கிளப்புகளிலும் காணப்படுகின்றன. கடந்த பொதுத் தேர்தலின் போது இலங்கையில் வன் செயல்கள் நடைபெறவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே.
இலங்கையில் சுமார் 15 ஆயிரம் சிறிய ஆயுதங்கள் பாவனையில் உள்ளதாக ஊகிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் எத்தனையாயிரம் சிறிய ஆயுதங்கள் பாவனையில் உள்ளது என்ற சரியான கணக்கு யாருக்கும் தெரியாது. இலங்கையில் பாவனையில் உள்ள சிறிய ஆயுதங்களில் 50 வீதமானவை அரசியல் வாதிகளிடமும் அவர்களது ஆதரவாளர்களிடமே உள்ளது என்றார்.
வீரகேசரி