07-06-2003, 02:45 PM
அலை....... இதையும் போய் பாருங்கள்
....................ஏலம் விடப்பட்ட சமாசாரம் நம்மை உறுத்த அந்தப் பெண் சாமியாரை ஏலம் எடுத்த
முருகன்சாமியை சந்தித்தோம். பக்கத்திலேயே அந்த பெண்துறவி ஜெயா இருக்க
ரொம்ப காஷசூவலாக ஆரம்பித்தார் முருகன்சாமி.
<img src='http://www.vikatan.com/jv/2003/jul/09072003/p7a.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.vikatan.com/jv/2003/jul/09072003/p7.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.vikatan.com/jv/2003/jul/09072003/p7b.jpg' border='0' alt='user posted image'>
''அது ஒண்ணுமில்லை சாமி. இந்த ஜெயா சாமிய கூட இருந்த ராஜாராம் சாமி
கொடுமைப் படுத்தினான். அதுபத்தி என்கிட்ட சொல்லி அழுதுச்சு இந்த சாமி (ஜெயா). எங்கூட வந்துட சொன்னேன். ஆனா ஜெயா சாமியை விட்டுக்கொடுக்க அவன் மறுத்துட்டான். 'நான் ஜெயாவை ஏலம் விடுறேன். முடிஞ்சா ஏலத்துல எடுத் துக்கோ‘னு சொல்லிட்டான். அதான் ஏலத்துல எடுத்தேன்'' என சொல்லிக் கொண்டே தான் குடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை ஒரு சுண்டு சுண்டிவிட்டு மூக்கிலும் வாயிலும் புகையை விட்டார்.
ஜெயாவிடம் பேசினோம். ''அவன் (ராஜாராம்) பெரிய கஞ்சா குடிக்கி (கஞ்சா குடிப்பவர்). என்னைய போய் கஞ்சா வாங்கியாரச் சொல்வான். அதைக் குடிச்சிட்டு தொல்லை பண்ணுவான்..'' என்றவர் ''சாமியாரா வந்துட்டாலும்கூட பொம்பளைங்களுக்கு பாதுகாப்பு இல்லீங்க சாமீ...'' என சொல்லிவிட்டு மரத்தடி நிழலில் சாய்ந்தார்.
இப்படி ஒரு சாமியார் டூ இன்னொரு சாமியாருக்கு ஏலம் விடப்பட்ட ஜெயா போலவேஇ பல சாமியார்களுக்கு நிரந்தர அடிமைகளாக பெண் சிஷ்யகோடிகள் உண்டு.
எங்காவது ஊர் ஊராகப் போய் ஒரு நிழலான இடத்தைப் பிடித்து இந்த சாமியார்கள் ஹாயாக படுத்துவிட அடிமைகளாக இருக்கும் பெண்கள் அவர்களுக்கு கைகால் அமுக்கிவிடுவது அவர்களுக்கு வேண்டிய பீடி சிகரெட் கஞ்சா தூள் வாங்கிவருவது என்று ஓடியாடிக் கொண்டிருப்பார்களாம்.
சொற்ப காசுக்கு தன்னை விலைக்கு வாங்கி அடிமையாக்கி வைத்திருக்கும் சாமியார் சார்பாக ஊருக்குள் திருவோட்டுடன் போய் 'பிச்சை‘ வாங்கிவந்து உபசரிப்பதும் இந்த பெண் அடிமைகளின் வேலையாம்.
அரபு கதைகளில் வருவது போன்ற இந்த அடிமை ஏலத்தை பற்றி வேறு சில சாமியார்களிடமும் பேசினோம்.
'சிவாய நமஹ..‘ என முணுமுணுத்துக்கொண்டிருந்த பாண்டிசாமி
''இந்த உலகத்துல கெழவியா இருந்தாலும் துறவியா இருந்தாலும் பொம்பளைங்களுக்கு ஆம்பளை துணை வேணுமில்ல. அதான் இந்த பொம்பளை சாதுக்களை ஏலம் விடுறது விக்குறது நடக்குது.. இங்கே மட்டுமல்ல எங்கெல்லாம் குருபூஜை நடத்தி சாதுக்களை கூப்பிடறாங்களோ அங்கெல்லாம் ஏலம் நடக்குது.. குருபூஜைங்கிறது சாதுக்கள் மாநாடு மாதிரி.. பல பகுதிகள்ல இருந்தும் சாதுக்கள் வந்து சேர்வாங்க‘‘ என்றார்.
இந்த ஏல விவகாரத்தை சாமியார்களில் சிலரே அருவருப்பாக பார்ப்பதையும் நம் விசாரணையில் உணர முடிந்தது.
ராமசாமி என்ற சாமியார் ''இப்படி செய்யறதால எங்க திருக்கூட்டத்துக்கு பெருத்த அவமானமா போகுது. வீடுகள்ல ஒதுக்குப்படற பெண்கள்தான் இப்படி திருக்கூட்டத்தில வந்து சேர்றாங்க. போதாக்குறைக்கு மனநிலை சரியில்லாத பொம்பளைங்களும் எங்க கூட்டத்தில சேர்ந்துக்கிறாங்க'' என சொல்லி ''அதோ அங்கிருக்காரே வீருநல்லு சாமி.. அவரைப் பார்த்து பேசுங்க. நிறையச் சொல்வார்'‘ என கை காட்டினார்.
ஆனால் வலப்புறம் ஒரு பாட்டி இடப்புறம் ஒரு நடுவயதுப் பெண் என்று பந்தோபஸ்தாக நின்று கொண்டிருந்த வீரு நல்லுசாமி சொன்னதே வேறு..
''நான் பேரையூர் பக்கம் கூவலப்புரத்தில் குரு பூஜைக்கு போனப்ப கேரளா சாமி பார்வதிய (பாட்டி) முன்னூறு ரூபாய்க்கு ஏலத்தில எடுத்தேன். அப்புறம் மதுரை பக்கம் அழகர்கோவில்ல இந்த அன்னக்கொடியை சேத்துக்கிட்டேன். இவ பம்பாய்க்காரி. ரெண்டு பொம்பளைங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம்தான் தமிழ் தெரியும்'' என சொல்லிக்கொண்டே தான் குடித்த பீடியை பார்வதியிடம் கொடுக்க பார்வதி ஒரு தம் கட்டிவிட்டு அதை அன்னக்கொடியிடம் கொடுக்க.. அவர் உதடு சுடும் அளவுக்கு பீடியை நகத்தில் பிடித்து குடித்து முடித்தார்.
''இந்த ஏலங்கள் ஒரு பொழுது போக்கா?‘‘ என்று எதிரில் வந்த முனியசாமி சாமியாரிடம் கேட்டோம்... ''சிவ... சிவ...'' என சொல்லிவிட்டு ''இங்க இங்கிருக்கிற சில சாமிகள்கிட்ட பணம் இருக்காது. இங்க குருபூஜை முடிஞ்சு வேற ஊருக்கு போக பஸ்ஸசூக்கு காசு பணம் இல்லாம திண்டாடுவாங்க. அதனால தங்களோட உடமைகளை ஏலம் விடுறாங்க. இத தவிர்க்கணும்னா குருபூஜை நடத்துறவங்க எங்களுக்கு பணம் கொடுத்து உதவணும்..‘‘ என்றார்.
சரி குருபூஜை நடத்தி சாமியார்களை வரவைக்கும் எம்.சுப்லாபுரம் ஊர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
''சாமியார்களில் எவரேனும் நாங்க எதிர்பார்த்து காத்திருக்கிற சற்குரு சுவாமிகளாக வந்துவிட மாட்டார்களா என்ற நப்பாசையில்தான் நாங்க இந்த பஞ்சகாலத்திலும் குருபூஜை நடத்துறோம். இதுல கலந்துக்கிற சில போலி சாமியார்களை பற்றி நாங்கள் என்ன சொல்ல?!'' எனச் சுருக்கமாக சொன்னார்கள்.
கட்டுரை படம்: இரா. முத்துநாகு
கட்டுரையை முழுவதுமாக வாசிக்கhttp://www.juniorvikatan.com/
நன்றி - ஜுனியர் விகடன்