04-30-2004, 12:03 PM
அரசியலமைப்பில் மாற்றம்.
சிறிலங்காவின் அரசியல் அமைப்பை மாற்றியமைப்பதென சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தீர்மானித்துவிட்டார். அதற்கான ஆரம்பகட்டச் செயற்பாடாக அரசியலமைப்பு ஆலோசனைச்சபை ஒன்றை அவர் அமைந்துள்ளார். இப்பொழுது பாராளுமன்றத்தை ஓர் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றியமைக்கும் யோசனையும் சனாதிபதியிடம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் தனது சனாதிபதி பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அரசியலமைப்பை மாற்றியமைப்பது என்பது சந்திரிகாவின் நோக்கமாகும்.
சிறிலங்காவின் அரசியல் யாப்பில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது சந்திரிகா குமாரதுங்கவினது மட்டுமல்ல பொதுவான கருத்தாகும். குறிப்பாக தென்பகுதி அரசியல் கட்சிகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக பாராளுமன்றத்திலும் கூடிய அதிகாரத்தைக் கொண்ட சனாதிபதி எனும் அமைப்பை நீக்க பெரும்பாலும் வலியுறுத்தி வருகின்றன.
ஜே.வி.பி இந்த முறையை கடுமையாக எதிர்த்து வருகிறது. அதேவேளை சிறிலங்காவின் தற்போதைய சனாதிபதியான சந்திரிகா குமரதுங்க 6 மாதகால அவகாசத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை நீக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் தான் சனாதிபதியாகப் பதவி ஏற்றார்.
அதேவேளை 90களின் பிற்பகுதிகளில் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையை உடனடியாக நீக்குவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது பதவிக் காலம் முடிவுற்றதம் அதனை நீக்குவதற்கே உடன்பாடாயிருந்தார். ஆனால் அடுத்த சனாதிபதியாகப் பொறுப்பேற்கும் சந்தர்ப்பம் உள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க அதற்கு விருப்பமுடையவராக இல்லை.
அதேவேளை தேர்தல் முறையை மாற்றியமைக்கும் விடத்திலும் இவ்வாறான நிலை தான் உள்ளது. வெற்றி பெறும் வாய்ப்பு இருக்குமாயின் இத்தேர்தலில் மூலம் மூன்றிலிரண்டு ஆசனங்களைப் பெறமுடியாது இருப்பதால் அதனை மாற்ற தென்பகுதி பிரதான கட்சிகள் முயல்கின்றன. தோல்வி அடையும் சந்தர்ப்பம் இருக்குமாயின் அதனையிட்டு எதுவும் பேசாதிருக்கின்றன. கடந்த ஜ.தே.மு. ஆட்சிக்காலத்தில் தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பாக ஆராய ஒரு பாராளுமன்றக்குழு ஜக்கிய தேசியக் கட்சியால் அமைக்கப்பட்டது. ஆனால் அதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இது இவ்வாறிருக்க சிறிலங்காவின் தற்போதுள்ள அரசியலமைப்பு சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கும் விதத்திலேயே உள்ளது. இந்த அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்படாவிடின் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாதென தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகின்றது.
இவ்வாறு இந்த அரசியலமைப்பிலுள்ள பல குறைபாடுகள் திருத்தப்படவேண்டும் என்பது உணரப்பட்டுள்ளது. அதாவது 1978இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பிற்கு 17 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதும் அதில் மாற்றங்கள் மேலும் செய்யப்படவேண்டும் என்பதே பலதரப்பினதும் கருத்தாகும்.
இவ்வாறு இந்த யாப்பு அமைந்தமைக்குக் காரணம் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமது சொந்த நலனையும் கட்சி நலனையும் கருத்தில் கொண்டு யாப்பை உருவாக்கியமையேயாகும். அதாவது முன்னைய தேர்தல்களில் ஜக்கிய தேசியக் கட்சி பெற்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் முறையையும் தான் இறுதிக் காலத்தில் ஒரு சர்வதிகாரியாக விளங்கும் நோக்கத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையையும் உருவாக்கினார்.
தான் பதவி ஏற்ற போது பாராளுமன்றத்தில் வைத்திருந்த ஆறில் ஜந்து பெரும்பான்மையை தனது ஆட்சிக்காலம் முழுவதும் தக்கவைத்துக்கொள்ள பாராளுமன்றத் தேர்தலுக்குப் பதிலாக சர்வசன வாக்கெடுப்பை நடத்தினர். மேலும் இந்தப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு விரும்பியவாறெல்லாம் அரசியல் அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
இதேவேளை தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து இந்த அரசியலமைப்பு எதையுமே கொண்டிருக்கவில்லை.
இவ்வாறு ஜே.ஆர். ஜெயவர்த்தன நாட்டின் நலன் குறித்துச் சிந்திக்காது கட்சியின் நலன், தனது நலன் என்ற அடிப்படையில் அரசியலமைப்பை உருவாக்கியமையால் தான் அது இன்று தோல்வியைத் தழுவியிருக்கின்றது.
இப்போதும்கூட இந்த அரசியலமைப்பில் சுயநல நோக்குடனையே மாற்றங்களைக் கொண்டுவர சனாதிபதி சந்திரிகா முயல்வது உண்மை. தனது அரசியல் வாழ்வு முடிவுறப்போகின்ற நிலையில் அதனை நீடித்துக்கொள்ளவே சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்த விடயத்தில் அதிக தீவிரம் காட்டி வருகிறார் என்பது வெளிப்படை.
எனவே நாட்டிக்குப் பொருத்தமான அரசியல்யாப்பு என்பதைவிட சனாதிபதி சந்திரிகா தனக்குப் பொருத்தமான அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சியிலேயே ஈடுபடப்போகிறார். அவ்வாறாயின் சாதாரண பெரும்பான்மையே இல்லாத பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று அவரால் அரசியலமைப்பை மாற்றியமைப்பது விட முடியாது. ஜக்கியதேசியக்கட்சி அதற்கு ஆதரவு வழங்கவும் மாட்டாது. ஆனால் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கட்சிதான் இப்போது மூன்றிலிரண்டுக்குமேற்பட்ட தொகுதிகளை வெற்றி கொண்டுள்ளதாகக் கூறுகின்றது. அதாவது 160 தொகுதியில் 106 தொகுதிகளில் வெற்றி பெற்றதை அது அதறக்கு ஆதாரமாகக் கூறுகின்றது. அரசியலமைப்பில் எப்பொழுதோ கைவிடப்பட்டுவிட்ட தேர்தல் தொகுதி முறை இப்போது வாக்குகளை எண்ணுவதற்கு வசதியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் மாவட்ட ரீதியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகையில் தொகுதி எண்ணிக்கையை அவர் காட்டுவது மக்களை ஏமாற்றும் முயற்சி தவிர வேறில்லை. ஆனால் அதனையே அவர் தற்போதைய அரசியலமைப்பை ஏமாற்றப் பயன்படுத்தக்கூடும். அவ்வாறாயின் உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பும் சில வருடங்களில் தோல்வியையே தழுவிக்கொள்ளும்.
ஆனால் கடந்த 27 வருடங்களாக இந்த அரசியலமைப்பின் காரணமாக ஏற்பட்ட தீங்குகளைக் கருத்தில் கொண்டால் சந்திரிகாவால் உருவாக்கப்படும் யாப்பாலும் பலதீங்குகள் விளைந்த பின்புதான் அதன் தோல்வி ஒப்புக்கொள்ளப்படும். அப்போது நாடு எந்நிலையிலிருக்கும் என்பதை இப்பொழுதே கூறிவிடமுடியாது.
வேலவன் ஈழநாதம்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>