04-29-2004, 01:20 PM
சந்திரிகாவை யுத்தத்தை நோக்கித் தள்ள முயல்கிறார் ரணில்
இலங்கைத்தீவில் இப்பொழுது யுத்தத்தை விரும்பி வரவேற்கும் ஒரு தலைவர் யாராக இருக்குமென்றால் அது நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்கதான். சந்திரிகா சமாதானம் செய்யப் புறப்பட்டால் தன்னுடைய நிலை மிக மோசமாகிவிடும் என்று ரணில் அஞ்சுவது தெரிகிறது. எதுவிதத்திலாவது சந்திரிகாவை யுத்தத்தைநோக்கித் தள்ளி விடுவதே இப்பொழுது ரணிலின் பிரதான உத்தியாய் இருக்கிறது.
சிலசமயம் சந்திரிகா மெய்யாகவே சமாதானம், செய்பவராக இருந்தால் அவர் அதன் மூலம் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றக்கூடியவிதத்தில் நிதியுதவிகளைப் பெற்று தன்னைப் பலப்படுத்திவிடுவார். எனவே அவர் சமாதானம் செய்யத் தொடங்குமுன்பே ரணில் அவரைச் சுற்றி வளைக்கும் வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்.
சந்திரிகா சிறுபான்மை இனக்கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தோ அல்லது அவற்றின் ஆதரவைப் பெற்றே தனது ஆட்சியைப் பலப்படுத்துவாராய் இருந்தால் அவர் சமாதானத்தின் வழியில் இருந்து விலகிச் செல்வது கடினம்.
மாறாக, அவர் தீவிர மதவாதக் கட்சியான ஹெல உறுமயவில் தங்கியிருக்கும் ஒருநிலை வந்தால் அவரால் நிம்மதியாகச் சமாதானம் செய்யமுடியாது.
எனவே சிறுபான்மையினக் கட்சிகளான இ.தொ.க.வும் முஸ்லிம் காங்கிரசும் சந்திரிகாவின் பக்கம் போய்விடாத படிக்க முன்னெச்சரிக்கையோடு நீண்டகால நோக்கில் ரணில் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்திருக்கிறார்.
இதன்படி தேசியப்பட்டியல் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் விசயத்தில் அவர் இ.தொ.க.வுக்கும், மு.கா.விற்கும் அவர்கள் திருப்திப்படும் விதத்தில் முடிவகளை எடுத்திருக்கிறார்.
இதன்படி தேசியப்பட்டியல் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் விசயத்தில் அவர். இ.தொ.க.வுக்கும், மு.கா.விற்கும் அவர்கள் திருப்திப்படும் விதத்தில் முடிவுகளை எடுத்திருக்கிறார். இதற்காக தனது கட்சிக்குள்ளேயே டிரொன் பெர்ணாட்டோ, திலக்மாரப்பன போன்ற மூத்த உறுப்பினர்களைக் கூட கைவிட அவர் தயாராய் இருக்கிறார்.
இப்பொழுது டிரோன் பெர்ணாண்டோ தனது அதிருப்தியையும் ஆத்திரத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்தும் ஒருநிலை காணப்படுகின்றது. ஆனால் ரணில் இதையெல்லாம் மீறி ஆறுமகம் தொண்டமானையும் ரவ10ப் ஹக்கீமையும் தன்வசப்படுத்துவதில்தான் அதிகம் அக்கறையாகக் காணப்படுகின்றார்.
குறிப்பாக ஆறுமுகம் தொண்டமானின் விசயத்தில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் ரணிலுக்கு ஒரு பிடியாய் இருக்கின்றன. யு.என்.பியுடன் கூட்டுச்சேர்ந்த இ.தொ.க. இம்முறை வெற்றிகளைப்பெற்றது. இந்த வெற்றிகளை மாகாணசபைத்தேர்தலின் போதும் பாதுகாப்பதென்றால் இக்கூட்டை உடைக்கக்கூடாது. எனவே இது காரணமாகவும் ஆறுமுகம் தொண்டமான் ரணிலை விட்டுப் போக முடியாதிருக்கிறது.
இப்படி தொண்டானையும், ரவ10வ் ஹம்கிமையும் தன்னை விட்டுப்போய் விடாதபடி பார்த்துக்கொள்வதன் மூலம் அதாவது அவர்கள் சந்திரிகாவின் பக்கம் போய்விடாதபடி பார்த்துக்கொள்வதன் மூலம் சந்திரிகா இனி ஹெல உறுமயவின் ஆதரவைப் பெற்றால்தான் தன்னைப் பலப்படுத்தலாம் எனும் ஒரு நிலையை ரணில் உருவாக்கியிருக்கிறார். இதுவிசயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திகாவுடன் இணங்கிப் போகும் வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் ரணில் நம்புவது போலத் தெரிகிறது.
எனவே ஹெல உறுமயவின் ஆதரவைப் பெற்றால் சந்திரிகா யுத்தத்தை நோக்கித்தான் செல்லவேண்டியிருக்கும், அது தான் ரணிலின் விருப்பமும் கூட. சந்திரிகாவை எப்படியாவது யுத்தத்தை நோக்கித் தள்ளிவிட வேண்டும். இல்லையென்றால் ரணிலின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிவிடும்.
நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியுற்றது யு.என்.பி. மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவமும் தான்.
அண்மையில் ரொய்ட்ரர் செய்தியாளர்களுடன் ரணில் கதைத்துக் கொண்டிருந்தபோது அவர்கள் கேட்டார்களாம் தேர்தலில் உங்களுடைய வெற்றிவாய்ப்புக்களை இழந்து விட்டீர்களே என்று. அதற்கு ரணில் சொன்னாராம்... நான் இழந்தது வெற்றிவாய்ப்பை மட்டும்தான் ஆனால் சனாதிபதியோ தன்னுடைய கட்சியையே இழந்துவிட்டார் என்று.
மெய்தான் மிகச் சரியான ஒரு கணிப்பு. ஆனால் சந்திரிகாவின் வெற்றிபற்றிச் சரியாகக் கணித்துவைத்திருக்கும் ரணில் தன்னுடைய தோல்வியை எப்படி விளங்கி வைத்திருக்கிறார்.?
கடந்த இரண்டாண்டுகளில் அவர் தன்னுடைய தலைமைத்துவத்தை சர்வதேச அளவில் ஸ்தாபித்த அளவுக்கு கட்சிக்குள்ளும் நாட்டினுள்ளும் ஸ்தாபிக்கத் தவறிவிட்டார் என்பதே சரி.
தன்னை மேற்குலின் செல்லப்பிள்ளையாகக் காட்டி அதன் மூலம் மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் தன்னை ஸ்தாபித்த அளவுக்கு அவர் தன்னை புதுடில்லியிலோ அல்லது கொழும்பிலோ ஸ்தாபித்திருக்கவில்லை.
இரண்டாண்டுகளுக்கு முன்பு மக்கள் அவருக்கொரு ஆணையை வழங்கியிருந்தார்கள் அது சமாதானத்துக்கான ஒரு மக்கள் ஆணை. ஆனால் அதைச் சரிவர நிறைவேற்றித் தன்னை ஸ்தாபிக்கக் கிடைத்த இரண்டாண்டுகளையும் அவர் போதியளவு தீவிரமாகப் பயன்படுத்தவில்லை என்றே சொல்லவேண்டும்.
தன்னுடைய இயலாமைகளுக்கெல்லாம் அவர் சந்திரிகாவின் நிறைவேற்று அதிகாரங்களையே சாட்டாகக் கூறிவந்தார். அவருக்களிக்கப்பட்ட மக்கள் ஆணையின் பிரகாரம் அவருக்கு இருந்திருக்கவேண்டிய நிமிர்வையும் மிடுக்கையும் அவரிடம் காணக்கிடைக்கவில்லை.
சனாதிபதி தன்னுடைய அமைச்சரவையிலிருந்து மூன்று முக்கிய அமைச்சர்களைப் பறிந்தபோது அவர் அமெரிக்காவில் இருந்தார். அமெரிக்காவிலிருந்து அவர் நாடு திரும்பிய போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவருடைய எதிரிகளை அச்சுறுத்தப்போதுமான மிகப் பிரமாண்டமான ஒரு வெகுசன எழுச்சி அவரை வரவேற்கக் காத்திருந்தது. அந்த வெகுசன எழுச்சிக்குத் தலைமை தாங்கி அந்தச்சனங்களின் கோபத்தை சனாதிபதிக்கு எதிராகத் திருப்பக்கிடைத்த மிக அருமையான ஒரு சந்தர்ப்பத்தை அவர் தவறவிட்டார்.
மூன்று அமைச்சுக்களைப் பறித்த விவகாரத்தில் சந்திரிகா அதை ஒரு ஒத்திகையாகத்தான் (Trial) செய்துபார்த்தார். அதற்கெதிரான வெகுசனப் போராட்டங்களுக்கு ரணில் தலைமை தாங்குவாரா என்று சோதித்துப் பார்த்தார். ஆனால் வெகுசனங்கிளர்ச்சிகளுக்கெல்லாம் தலைமைதாங்கும் திராணியற்றவராக ரணில் காணப்பட்டதையடுத்து சிறிது காலத்தில் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படமுன்பு நிகழ்ந்த மனோ-மலிக் பேச்சுவார்த்தைகளின் போதும் கூட, அது நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஒரு கால அவகாசத்தைப் பெறும் ஒரு நாடகமே என்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு பாலகனைப் போல ரணில் காணப்பட்டார்.
இவ்வாறு தன்னுடைய தலைமைத்துவத்தை நிரூபிக்கக் கிடைத்த இரு முக்கிய தருணங்களைத் தவற விட்ட அவர் முடிவில் தேர்தலின் போது தன்னுடைய வெற்றியைக் குறித்து மிகை மதிப்பீட்டுடன் இருந்து தோற்றும் போனார்.
இப்பொழுது அவருடைய கட்சியை மட்டுமல்ல, கட்சிக்குள் அவருடைய தலைமைத்துவத்தையும் கட்டியெழுப்பவேண்டியவராகக் காணப்படுகிறார்.
சந்திரிகாவின் தந்திரங்களையும், சூழ்சிகளையும் எதிர்கொள்வதற்கு, ஜந்து நட்சத்திரக் கனவான் சனநாயகவாதியாக இருந்தால் போதாது என்பதை அவருடைய இரண்டாண்டு கால ஆட்சி நிரூபித்துவிட்டது. எனவே தனது தலைமைத்துவத்தையும் கட்சியையும் காப்பாற்றுவதென்றால் சந்திரிகாவைப் பலப்படவிடக்கூடாது.
இலங்கைத்தீவின் இப்பொழுதுள்ள அரசியல் மற்றும் பொருளாதார யதார்த்தங்களின் படியும் பிராந்திய மற்றும் பூகோள அரசியல், பொருளாதார யதார்த்தங்களின் படியும் சமாதானத்தை தனது அடித்தளமாகக் கொண்டிருக்கும் ஒரு அரசே நின்று நிலைக்கும். எனவே சந்திரிகா ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு சமாதானத்துக்கு வரக்கூடும் அவருடைய கூட்டு முன்னணி ஆட்சிக்கு வந்தபின் சமாதானத்தை முன்னெடுக்கும் விதத்தில் இதுவரை எந்த ஒரு புதிய நகர்வையும் செய்திருக்கவில்லை.
ஆனாலும் யுத்தநிறுத்த உடன்படிக்கை அப்படியே தொடர்ந்தும் பேணப்படுகின்றது.
கருணாவைக் களத்திலிருந்து அகற்றிய பின் கிழக்கில் விடுதலைப்புலிகள் படைத்துறை உயரதிகாரிகளைச் சந்தித்திருப்பது ஒன்றைக் காட்டுகிறது. புலிகளும் யுத்தநிறுத்தத்தைத் தொடர்ந்து பேணத்தயார் என்பதே அது.
எனவே யுத்த நிறுத்தம் தொடர்ந்தும் பேணப்படும்வரை சமாதானத்திற்கான அடித்தளம் அப்படியே இருக்கும். ஏனெனில் யுத்த நிறுத்த உடன்படிக்கைதான் சமாதானத்துக்கான அடித்தளம். இந்த அடித்தளத்தின் மீது சந்திரிகா அவருக்கு வாய்ப்பான ஒரு சமாதானத்தைக் கட்டியெழுப்பத் தொடங்க முன்பே முந்திக்கொண்டு அதற்கான அடிப்படையை இல்லாமல் செய்துவிட ரணில் முயன்று வருகிறார்.
இதுவரை காலமும் தன்னை சமாதானத்தின் தந்தையாகக் காட்டி வந்த காரணத்தால் அவரால் இதை வெளிப்படையாகச் செய்யமுடியாதிருக்கிறது.
அதிலும் குறிப்பாக சந்திரிகா சமாதானம் செய்யத் தொடங்கி விட்டாரென்றால் பிறகதை வெளிப்படையாகக் குழப்புவது கடினமாகிவிடும்.
எனவே சந்திரிகா தன்னைப் பலப்படுத்திவரும் ஒரு கட்டத்திலேயே அவரைச் சமாதானத்தின் எதிரிகளான ஹெல உறுமயவில் தங்கியிருக்கச் செய்வதன் மூலம் அவரால் வெற்றிகரமாகச் சமாதானம் செய்ய முடியாத ஒரு நிலையை உருவாக்கும் வேலைகளைகளில் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.
முன்பு அவர் செய்த சமாதானம் தன்னைக் கைதியாக்கி விடும் என்று அஞ்சிய சந்திரிகா அந்தச் சமாதானத்தைப் பற்றிய ஒரு பிழையான சித்திரத்தை உருவாக்கிப் பரப்பி அதன் மூலம் அவரைத்தோற்கடித்தார்.
இப்பொழுது சந்திரிகாவின் முறை. அவர் செய்ய நினைக்கும் ஒரு சமாதானத்தை முளையிலேயே கிள்ளி எறிய ரணில் தயாராகி வருகிறார்.
அதாவது சந்திரிகாவை யுத்தத்தை நோக்கித் தள்ளுவதே ரணிலின் இறுதி இலக்கு. யுத்தம் ஒன்றுதான் சந்திரிகாவின் கனவுகளைச் சிதறடிக்கும். அதைவிட முக்கியமாக, இப்போதுள்ள நிலைமைகளின்படி யுத்தம் ஒன்றுதான் ரணிலின் கனவுகளை நிறைவேற்றவல்ல ஒரு காலத்தை அவருக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடும்.
இது ஒரு பயங்கரமான விசயம். சில வாரங்களுக்கு முன்னர் அவரைப்பாதுகாப்பதற்கு சமாதானம் தேவைப்பட்டது. இப்பொழுது யுத்தம் பரவாயில்லை எனுமொரு நிலை. இது எதைக் காட்டுகிறது.?
யுத்தமோ சமாதானமோ எதுவானாலும் சிங்களத் தலைவர்கள் அதற்கு விசுவாசமில்லை தமது தனிப்பட்ட எழுச்சிகளையும், கட்சியின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காகத்தான் எல்லாமும்.
இதில், நேற்று யுத்தம் செய்தவர் இன்று சமாதானம் செய்யமாட்டார் என்றில்லை நேற்றுச் சமாதானம் செய்தவர் நாளை யுத்தம் செய்யமாட்டார்.
என்றுமில்லை இதை இன்னும் திருத்தமாக பைபிள் வசனங்களுக்கூடாக பின்வருமாறு சொல்லலாம்... எல்லாமே திரும்பத் திரும்ப நடப்பைத்தான் முன்பு நடந்தவைதான் இப்பொழுது நடக்கின்றன. இப்பொழுது நடப்பவை தான் இனியும் நடக்கப் போகின்றன.... பூமியிலே சூரியனுக்குக் கீழே நூதனமானது எதுவுமேயில்லை.
நிலாந்தன் ஈழநாதம்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>