04-29-2004, 08:41 AM
குருநாகல் குண்டு வெடிப்பையடுத்து திடுக்கிடும் தகவல்கள்:
ரமேஷை கொல்ல சதி! குருநாகலில் இருந்து கருணா திட்டம்
குருநாகல் பொல் அத்தாபிட்டிய என்ற இடத்தில் பொருத்தப்பட்டவேளை வெடித்த குண்டானது, விடுதலைப் புலிகளின் கிழக்கு பிராந்திய விசேட தளபதி ரமேஷைக் கொலை செய்யவே பொருத்தப்பட்டதாக புலனாய்வு விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொல் அத்தாபிட்டியில் ஐஸ் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வரும் ஏறாவூரைச் சேர்ந்த சுலைமான் லெப்பை மொஹமட் ரபீட் (46), உதவியாளரான அதே இடத்தைச் சேர்ந்த எம்.பாவா தாஹிர் (30) ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் இதை உறுதி செய்துள்ளனர்.
சந்தேகநபர்களை திகதி குறிப்பிடாமல் விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ள குருநாகல் பிரதான நீதிவான் சுமுது பிரேமச்சந்திர, விசாரணைகளைத் தொடரும்படி பணித்துள்ளார். இரண்டரை கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டை மதகு ஒன்றின் கீழ் வைத்து, சிறப்புத் தளபதி ரமேஷ் கொழும்பு செல்லும் வேளை அவரின் வாகனத்தைத் தகர்க்கவே கருணாவின் சகாக்கள் திட்டமிட்டிருந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து, குருநாகலில் மிகப் பாதுகாப்பான இடமொன்றிலேயே கருணா ஒளிந்திருப்பதாகவும். இங்கிருந்து திட்டங்களைத் தீட்டுவதாகவும், இவருக்கு உடந்தையாக பலர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள பரீட் என்பவரின் மருமகன்களான றிம்சாட், லாபிர் ஆகியோர் ஜெயந்தன் என்பவரை ஐஸ் தொழிற்சாலைக்கு அழைத்து வந்துள்ளனர். ஜெயந்தன் மூலமே இறந்த துரைராஜசிங்கமும். மற்றொருவரும் வந்து குண்டு வெடிப்பு நிகழ்ந்த தினத்திற்கு முதல் நாளான 25 ஆம் திகதி வரை ஐஸ் தொழிற்சாலையில் தங்கியிருந்துள்ளனர். இவர்களுக்கான அனைத்தையும் பரீட் வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் தம்புள்ளை வீதியில் பள்ளமான முக்கிய வளைவில் இந்தக் குண்டு பொருத்தப்பட்டு, ரமேஷின் வாகனத்தையும் அவருடன் வரும் ஏனைய வாகனங்களையும் தன்னியக்க கருவி மூலம் தகர்க்க திட்டம் தீட்டப்பட்டிருந்தமையை இது தொடர்பாக விசாரணை செய்யும் புலனாய்வு பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர்.
மட்டக்களப்பு பகுதியில் ரமேஷைக் கொலை செய்வது கடினமான விடயமென்பதால், வெளியிடமொன்றில் தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற கருணாவின் சகாக்கள் முயன்றும் அது நிறைவேறவில்லை. தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற அவர்கள் இங்குள்ளவர்களின் உதவியையும் பெற்றுள்ளனர் எனத் தெரியவருகிறது.
தற்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமிருந்தும் முக்கிய தகவல்கள் பலவற்றை பெற்றுக்கொள்ள முடியுமென பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்தக் குண்டு பிரதியமைச்சர் சாலிந்த திசாநாயக்கவை கொலை செய்யும் நோக்கில் பொருத்தப்படவில்லை என பொலிஸார் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதேவேளை, வன்னியில் வைத்து அண்மையில் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு கராட்டி சங்கத்தினர் வழங்கிய விருதின்போது அவர் அணிந்திருந்த கராட்டி உடை குருநாகலியில் சிங்கள இளைஞர் ஒருவரால் தைக்கப்பட்டது என புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர்.
இக் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள விசேட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்
வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>