04-29-2004, 08:29 AM
<b>வானம் வசப்படும்</b>
<img src='http://www.tamilcinema.com/cinenews/images/vanamvasapadum01%20copy.jpg' border='0' alt='user posted image'>
பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கியிருக்கும் படம். அற்புதமான ஒளிப்பதிவில் மனசை கிரங்கடித்திருக்கிறார் பி.சி! இயக்கத்தை பொறுத்தவரை பி.சி கால் வைத்திருப்பது பாசியில். வழுக்கலோ வழுக்கல்!
கார்த்திக்குமாருக்கும், பூங்கோதைக்கும் காதல்! கல்யாணமாகி ஊர் சுற்ற கிளம்பும் இந்த ஜோடி, பஸ் பயணத்தின் போது பிரிந்து போய்விடுகிறார்கள். பின்னாலேயே போய் பூங்கோதையை துரத்திப்பிடிக்க ஓரு ஆட்டோ கூடவா கிடைக்காது?(சென்னையில் மட்டும் பத்து லட்சம் ஆட்டோக்கள் ஓடுகிறதாம். இந்த கணக்கு பி.சி.க்கு தெரியாமல் போனது துரதிருஷ்டம்) பூங்கோதை மட்டும் தனியாக சிக்கிக் கொள்கிறார் இரண்டு ஆட்டோக்காரர்களிடம். கொடூரமாக கற்பழிக்கிறார்கள் பூவை! சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கித்தர துடிக்கும் பூவிற்கு சட்டம் கொடுக்கும் பரிசு என்ன? இதுதான் வானம் வசப்படும்.
தலைப்பை பார்த்தால் ஏதோ தன்னம்பிக்கை சமாச்சாரம் போல் தெரிகிறது. ஆனால், பாத்திரங்களின் படுதோல்வி தலைப்பின் ஜீவனை ஸ்வாகா செய்துவிடுகிறது.
ஓடுகிற ரயிலையே நிறுத்தி நட்ட நடு வழியில் இறங்கிக் கொள்கிற பூ, கோர்ட்டுக்கு வந்து பிய்த்து உதறப்போகிறார் என்று எதிர்பார்த்தால் ஃப்பூ! அதே வழக்கிற்கு முக்கியமான சாட்சியான டெல்லி கணேஷை இப்படி கர்சீப்பை தொலைப்பது போலவா தொலைக்கும் போலீஸ்? ம்...சினிமா போலீஸ்!
புதுமுகம் பூங்கோதை, எளிமையான அழகு. வினாடிக்கு வினாடி அவர் முகத்தில் காட்டும் சேஷ்டைகள்தான் தாங்கலை சாமி ரகம்! பெற்ற அப்பாவும் குடும்பமும் ஜெயிலில் கிடக்க, அந்த பிரக்ஞையே இல்லாமல் அவர் சந்தோஷமாக லவ்வருடன் சுற்றுவதை என்னவென்று எடுத்துக் கொள்வது? கைகள் கட்டப்பட்டநிலையில் அவர் குப்பை தொட்டியில் கிடக்கும்போது மட்டும் சுருக்கென்று தைக்கிறார்.
அறிமுக நாயகன் கார்த்திக்குமார் பளிச் பார்ட்டியாக இருக்கிறார்.
நீ பதில் சொல்ற வரைக்கும் பூவுக்கு பூ அனுப்பிகிட்டே இருப்பேன் என்ற பிடிவாதத்துடன் பொக்கே அனுப்பும் இந்த ஹீரோவின் ரொமான்ஸ் இனிப்பு! காலம் கனிந்தால் கதாநாயக வாய்ப்பு தொடரலாம்!
அந்த ஆட்டோ பையன்கள் வயிற்றில் அமிலம் சுரக்க வைக்கிறார்கள். என்னவொரு கொடூரம்? பெற்ற அம்மா தப்பான தொழிலுக்கு போகிறாள் என்பதை உறுதியாக நம்பவும் முடியாமல், நம்பாமலிருக்கவும் முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு, யதார்த்தம்!
இத்தனை காலம் நகைச்சுவை பண்ணிக் கொண்டிருந்த கோவை சரளா, யாரும் ஏற்க துணியாத வேசி பாத்திரம் ஏற்றிருக்கிறார். பிள்ளை கொலை கேசில் லாக்கப்பில். அம்மா பிராத்தல் கேசில் அதே ஸ்டேஷனில்! அடுத்த நாள் கோவை சரளாவின் முடிவு, பயங்கரம்!
மகேஷன் இசையில் வானம் இசை பட்டிருக்கிறது.
மற்றபடி வறண்ட வானம்தான்!
tamilcinema.com

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>