04-29-2004, 08:25 AM
நிர்வாணமாக நடிக்கிறார் சரத்குமார்.
-ஏய் படத்தில்தான் இந்த கூத்து!
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணாயிருக்க கத்துக்கணும், விரலுக்கேத்த வீக்கம், இப்படி டைட்டிலிலேயே குடும்ப விஷயங்களை ஒப்பித்த திருவள்ளுவர் கலைக்கூடம் எடுக்கும் அடுத்த படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? ஏய்...!
பட்ஜெட் படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்த இந்த நிறுவனம் முதன்முறையாக பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே இரைத்திருக்கிறது. சரத்குமார் ஹீரோ. சமீபத்தில் குத்து என்ற படத்தை எடுத்த வெங்கடேஷ் இப்படத்தின் இயக்குனர். சரத்துக்கு ஜோடி கட்டுவது நமீதா. எங்கள் அண்ணா படத்தில் வந்தாரே, அவரேதான்!
அதென்ன ஏய்? அமைதியாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு பெரிய மனுஷனை பார்த்து ஏய் என்கிறார் சரத்குமார். அப்புறம் என்ன? ஒரே தாறுமாறான வேகம்தான். அடிதடி, வெட்டுக்குத்து என்று போகிறது வாழ்க்கை! ஒரு ஹீரோவுக்குரிய சகல லட்சணங்களும் பொருந்தியிருக்கும் சரத், ரஜினி டைப் வசனங்களை இதுவரைக்கும் தன் படங்களில் உச்சரித்ததில்லை. அந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டிருக்கிறார் வெங்கடேஷ். அதெல்லாம் விட பெரிய விஷயம் ஒன்றை இந்தப்படத்தில் பண்ணியிருக்கிறார் சரத். அது.... நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். கிட்டதட்ட மூன்று நிமிடங்கள் வரும் அந்த காட்சி ரசிகர்களுக்கு திகைப்பை ஏற்படுத்தும் என்கிறார் வெங்கடேஷ்.
போலீஸ் ஸ்டேஷனில் லாக்கப்பில் அடைபட்டிருக்கும் சரத்திற்கு உடம்பில் ஒரு ஒட்டுத் துணி கூட இல்லை. அந்த நிலையில் தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது அவருக்கு. அப்புறமென்ன... அதே நிர்வாண கோலத்தில் எதிரிகளை போட்டுத் தள்ளிவிட்டு எஸ்கேப் ஆகிறார்.
<img src='http://www.tamilcinema.com/cinenews/images/sarathkumar02.jpg' border='0' alt='user posted image'>
இந்த காட்சியை எடுப்பதற்குள் எனக்கு ஜுரமே வந்துவிட்டது. காரணம் அவ்வளவு பெரிய நடிகரை எப்படி இந்த காட்சியில் நிர்வாணமாக நடிக்க வைக்கப் போகிறோம் என்ற படபடப்பு இருந்தது. லைட்டிங் ரெடி பண்ணி விட்டு ஸ்டார்ட் சொல்வதற்குள் தான் போட்டிருந்த லுங்கியை அவிழ்த்து போட்டுவிட்டு சடக்கென்று குப்புற படுத்துவிட்டார் சரத் சார். மிக அற்புதமாக வந்திருக்கிறது அந்த காட்சி. சென்சாரில் தப்பிக்கிற விதத்தில் அதே நேரத்தில் பிரமிக்கும் விதமாக இந்த காட்சியை படம் பிடித்திருக்கிறோம் என்றார் பெருமையுடன் வெங்கடேஷ்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இப்படி நிர்வாணமாக நடிக்கலாமா? சரத்திடம் கேட்டால் படீரென்று பதில் சொல்கிறார். நான் என்ன பார்லிமெண்டிலா நிர்வாணமாக நின்றேன்? சினிமாவில்தானே! கதைக்கு அவசியம் என்றால் அப்படி நடிப்பதில் தப்பென்ன இருக்கு?
உண்மைதாங்கோ...!

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>