04-28-2004, 06:00 PM
எதிரி விமர்சனம்
'கமர்ஷியல் டைரக்டர்' ரவிக்குமார் இயக்கத்தில் மாதவன் முதன் முதலாக நடித்துள்ள படம் 'எதிரி'. முரட்டு வில்லன்கள், அடிதடி, காதல், கிளாமர், காமெடி என்று ரவிக்குமாரின் ஃபார்முலா மாறாத படமாகவே 'எதிரி'யும் வந்திருக்கிறது.
திருவல்லிக்கேணியில் மகள் கனிகாவுடன் வாழ்ந்துவரும் பிராமணரான டெல்லி கணேஷை, அவர் வீட்டிற்கு குடிவந்த முரட்டு மாணவர்கள் கும்பல் படாத பாடுபடுத்துகிறது. அக்கா மகளை காதலனுடன் சேர்த்து வைக்க பணத்தேவையில் இருந்த மாதவன், ஆட்டோ டிரைவர் நண்பனான விவேக்கின் ஆலோசனைப்படி, பிரபல ரௌடி 'பாட்டில் மணி' ஆக நடித்து மாணவர் கும்பலை வீட்டை விட்டு காலி செய்ய வைக்க டெல்லி கணேஷடமிருந்து பணத்தை வாங்கிக் கொள்கிறார். ஆனால் மாணவர்களை விரட்ட வந்தவர் அவர்களுக்கு நண்பராகிவிடுகிறார். திருமண மண்டபத்தில் மணக்கோலத்தில் இருக்கும் நண்பணின் காதலியை தூக்கிவரச் சென்ற மாதவனும், விவேக்கும் மண்டபம் மாறி மணக்கோலத்திலிருந்த சதாவை தவறுதலாக தூக்கி வருகின்றனர். சதாவின் அப்பா மிகப் பெரிய தாதா. மாப்பிள்ளையோ கொடுமைக்கார அஸிஸ்டென்ட் கமிஷனர் ரகுமான். கல்யாணம் நின்ற கோபத்தில் இவர்கள் மாதவனை வேட்டையாடத் தேட, இந்த சூழ்நிலையில் மாதவனுக்கும் சதாவுக்கும் காதல் மலறுகிறது. இவர்கள் எப்படி இணைந்தார்கள் என்பது மீதிக்கதை.
ரவிக்குமார் மறுபடியும் ஒரு 'சரிவிகித கமர்ஷியல் கலவை' கொடுக்க முயற்சித்திருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். ரகுமானை முதன் முதலாக வில்லனாக அறிமுகப்படுத்தியுள்ள ரவிக்குமார், அவர் உருவத்துக்கு பொருத்தமான அஸிஸ்டென்ட் கமிஷனர் கேரக்டரை மிகச்சரியாக கொடுத்துள்ளார். இருந்தாலும், ரகுமானுக்கு இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். சில கிளைக் காட்சிகளை நீக்கி படத்தில் நீளத்தை குறைத்திருந்தால், படத்தில் ஆங்காங்கு தோன்றும் தொய்வைத் தவிர்த்திருக்கலாம். ரகுமான் பாணியிலேயே மாதவனும் கிளைமாக்ஸில் செய்வது நல்ல முடிவு.
துள்ளித் திரியும் இளங்காளையாக மாதவன் வருகிறார். காதல், காமெடி, ஆக்.ஷன் என்று படம் முழுக்க நல்ல வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் மாதவன். சதா காதலை வேண்டுமென்றே சுற்றி வளைத்து சொல்லி மாதவனை அலைக்கலைக்கும்போது மாதவன் நன்றாக குழம்புகிறார். அலட்டிக்கொள்ளாமல் அளவாக செய்திருக்கிறார் சதா. 'கிளாமராக நடிக்கமாட்டேன்' என்று ஏக கண்டிஷன் போட்டவர் 'எதிரி' பாடல் காட்சிகளில் செக்ஸியாக வருகிறார். மகள் யாரையாவது காதலித்து விடுவாரோ என்று பயந்து எப்போதும் சந்தேகத்துடன் பார்க்கிற பையன்களோடெல்லாம் மகள் டூயட் பாடுவது போல கனவு காணும் டெல்லி கணேஷ் கதாபாத்திரம் விசித்திரமானது. விவேக்கின் காமெடி எடுபடுகிறது. ரஜினி ஸ்டைலில் அவர் 'சும்மா, சும்மா' என்று அடிக்கடி சொல்வது கொஞ்சம் ஓவர்தான். கனிகா 'பாட்டில் மணி சார்' புராணம் பாடுவது ரசிக்கும்படி உள்ளது. பெப்ஸி விஜயன் சண்டைக் காட்சிகளில் நன்றாக செய்திருக்கிறார்.
யுவன்சங்கர்ராஜா இசையில் 'முதன் முதலாக' மற்றும் 'காதல் வந்து தீண்டும்போது' பாடல்கள் இதமாக உள்ளன. கனல்கண்ணன் நன்றாக சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார். படத்தில் டி.கே. தணிகாசலம் எடிட்டிங்கில் நீளத்தை குறைத்திருக்கலாம்.
'எதிரி' ரவிக்குமாருக்கு எதிராக இருக்காது.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>