04-28-2004, 05:27 PM
கிங்ஸ்லி இராஜநாயகத்தின் இராஜிநாமா விவகாரத்தின் தற்போதைய நிலை என்ன?
தமிழரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யாகத் தெரிவு செய்யப்பட்டு, பின்பு இராஜிநாமா செய்திருக்கும் கிங்ஸ்லி இராஜநாயகத்தின் பதவிவிலகல் கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனத் தெரியவருகிறது.
இராஜிநாமாக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்ட நடைமுறை சட்டரீதியாக அமைந்திராத காரணத்தாலேயே அது ஏற்றுக்கொள்ளப்படவில்லையென அறிய வருகிறது.
இதேவேளை, கிங்ஸ்லி இராஜநாயகத்திடம் தொடர்பு கொள்ள முற்பட்டபோது அவர் உடல்நலம் குன்றியிருப்பதாகவும் அவருடன் தொடர்புகொள்ள முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இராஜநாயகத்தின் இடத்திற்குப் புதிய உறுப்பினரை தமிழரசுக் கட்சி இதுவரை நியமிக்கவில்லை.
ஆனால், கட்சி உறுப்பினரொருவரைப் பதவிநீக்கி புதிய உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் கட்சி யாப்பின் பிரகாரம் தமிழரசுக் கட்சியின் செயலாளரான மாவை சேனாதிராஜாவுக்கு இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, கிங்ஸ்லி இராஜநாயகத்துக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவித்தன.
அரசாங்கத்தின் பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலம் திரட்டும் நடவடிக்கையின் ஓரங்கமாக இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என்ற ஊகங்களும் வெளிப்படுத்தப்பட்டன.
அத்தகையதொரு முயற்சி மேற்கொள்ளப்படுமானால், 'நிரந்தர பகைமையை" சுதந்திர முன்னணி அரசாங்கம் ஏற்படுத்தும் கைங்கரியம் இதுவென நேற்று மாலை குறிப்பிட்ட சம்பந்தன் எம்.பி. இந்த விடயம் தொடர்பாக தம்மால் எதுவும் கூற முடியாதெனவும், தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவே இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கான சட்டரீதியான பொறுப்புடையவர் என்றும் சம்பந்தன் கூறினார்.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>