04-28-2004, 05:25 PM
மாளிகாவத்தையில் கொல்லப்பட்டவர் கருணாவின் சகாவென பொலிஸார் தெரிவிப்பு
கொழும்பு, மாளிகாவத்தையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர் கருணாவின் நெருங்கிய சகாவென உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பிரேமதாஸ ரணகல தெரிவித்தார்.
இதேவேளை இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மேலும் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏறாவ10ரைச் சேர்ந்த சின்னத்தம்பி ரமேர்; (வயது 24) என்பவரே துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார். இவரின் நண்பரான மாணிக்கவாசகம் மதனரூபன் (வயது 26) என்பவரே காயப்பட்டுள்ளதுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வெளிநாடு செல்லும் நோக்கில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கு தப்பி வந்து மாளிகாவத்தையிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் சுடப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு உணவருந்த மாளிகாவத்தை பழைய போதிராஜ மாவத்தைக்கு வந்தபோது அவர்களைப் பின் தொடர்ந்து வந்த இருவர் இவர்களைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இளைஞர் ஒருவரும் யுவதியொருவருமே இவர்களை சுட்டதாக தெரியவருகிறது.
இவர்கள் நான்கு நாட்களுக்கு முன்னர் தம்பதிகள் போல் அதே லொட்ஜிற்கு வந்து வேறொரு அறையில் தங்கியிருந்ததாகவும், லொட்ஜ் உரிமையாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் தப்பிச் சென்று தலைமறைவாகி இருக்கும் அந்த ஜோடியை கைது செய்யவும் கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சிறிசேன ஹேரத் விசேட பொலிஸ் குழு இரண்டை அமைத்துள்ளார். மாளிகாவத்தை பொலிஸாரும் புலன்விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பிற்கு தப்பிவந்துள்ள கருணா குழுவை கொலை செய்யும் நடவடிக்கை மாளிகாவத்தை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ரணகல தெரிவித்தார்.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>