07-06-2003, 10:02 AM
உங்கள் வாதம் பெண் எப்பொழுதும் நியாயமான சிந்தனை உள்ளவள் என்பதை சாதிபதற்காக அமைவது போல் உள்ளது! திருமண மண்டபத்திலிருந்து காதலன் உடன் ஓடக் கூடிய பெண் திருமணப்பேச்சு எடுபட்டதுமே அதைச் செய்திருக்கலாமே...அப்படிச் செய்திருந்தால் ஒரு இளைஞனிடம் தோன்றிய மன உளைச்சலை தவிர்த்திருக்கலாமே...அந்தவகையில் நோக்கும் போது அப்பெண் வேண்டுமென்றே ஒரு ஆடவனை அவமானப்படுத்தும் உள் நோக்கத்துடன் செயற்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதில் நியாயம் இருக்கத்ததான் செய்கிறது. ஏனெனில் பெண் விழிப்புணர்வு என்று கூறி ஆண்களுக்கு எதிரான சிந்தனைகளே பெண்கள் மத்தியில் பெண்ணிலைவாதிகள் என்ற சுய பிரகடனவாதிகளால் செய்யப்படுகிறது அப்படியான பரப்புரைகள் இப்படியான செயல்களுக்கு தூண்டுதலாக அமைவதில் ஏதும் வியப்பிருக்க வாய்ப்பில்லை! இப்படியான 'புரட்சிகர பெண்ணாக' அவள் இருக்கும் பட்சத்தில் அவள் வாழ்க்கை அவள் காதலன் எனக் கூறிச் செல்லும் ஆடவனுடன் நிம்மதியாக இருக்கும் என்பது என்ன நிச்சயம். ஏன் அக்காதலன் அவளின் ஏமாற்றுவலையில் சிக்கிய இரண்டாவது ஆடவனாக இருக்கக் கூடாது! இப்படிப் பலபெண்களை பிரசவிப்பது தான் சமுதாய தொலை நோக்கற்ற பிரச்சாரங்களின் விளைவுகளாக அமைகின்றன!
அச்சம் மடம் நாணம் என்பன ஒன்றும் மனிதரைக் கோழைகளாக்கும் இயல்புகள் அல்ல. அவை எல்லா மனிதனிடமும் ஓர் குறிப்பிட்ட அளவில் இருந்தால் தான் அவன் மனிதன் அன்றில் அவனுக்கும் ரோபோவிற்கும் என்ன வேறுபாடு! பெண்கள் விழிப்புணர்வு என்பது சமுதாய நலன் நோக்கிய ஒன்றே தவிர மனித நாகரிகத்துக்கான சவால் அல்ல! அப்படி பெண்கள் மனித நாகரிகத்துக்கு சவால் விடத்தக்க வகையில் மனித நாகரிகத்தை சிதைக்கும் வகையில் வளர்க்கப்படுதல் கட்டாயம் தடுக்கப்பட வேண்டும். தேவை எனில் கடும் சட்டங்களும் பிரயோகிக்கப்படுதலும் அவசியமாகலாம்!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>