07-06-2003, 09:11 AM
kuruvikal Wrote:சீதனம் சுவர் உடைக்கும் போது வீரப்பெண்
சமுதாய வழிகாட்டி
அவளே வாய்க்குள் முட்டை வைத்து
ஆடவனை ஏமாற்றும் போது
பெண் என்றால் பேதை
வாயடைக்கப்பட்ட பாவம்!
எத்தனை போர்வைக்கள்
ஒவ்வொன்றும் பச்சோந்தி வேடத்திற்கு!
செய்யும் தவறு மறைத்து
போலி வாழ்க்கை வாழ்வதற்கு!
நாம் தாம் கொடுத்துவிட்டோம்
சமுதாயச் சமத்துவம்!
இனியும் ஏன் உங்களுக்குப் போர்வைகள்,
பெண் என்ற இரக்கம் தரும்
கேவல வாழ்க்கை
எனியும் தேவையா?!
ஆடவனே பெண் உண்மையாக
வாழவந்தால் வாழ்
வாயடைத்து பொய்மையின் வடிவமானால்
போடு அவளைச் சாக்கடையில்!
குருவி
நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லைப் போல் தெரிகிறது.
பெண் என்ற ஒரே காரணத்தால்
அவளும் ஒரு மானிடப் பிறவியாக இருந்த போதும்
அவளுக்கு எத்தனையோ தடைகள், கட்டுப்பாடுகள்.. அச்சம், மடம், நாணம்.............. என்பது போன்ற பல வேலிகள்....
இவைகளைத் தாண்டும் தைரியம் எல்லாப் பெண்களுக்கும் வந்து விடவில்லை.
21ம் நு]ற்றாண்டுதான் இப்போ.
ஆனாலும் எத்தனையோ பேற்றோர்கள் இன்னும் 15ம் நு}ற்றாண்டிலோ அல்லது இன்னும் பிந்தியோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான பெற்றோரிடமோ இதை ஆதரிக்கும் சமூகத்திடமோ எல்லாப் பெண்களும் துணிந்து தமது மனக்கிடக்கைகளையோ ஆசைகளையோ சொல்லி விட மாட்டார்கள்.
அப்படியான ஒரு நிலையில்தான் அந்தப் பெண்ணும் தன் காதலை வெளிச் சொல்லப் பயந்திருப்பாள்.
கடைசி நேரத்திலாவது தனது காதலனை ஏமாற்றாது விட்டாளே.. .
கடைசி நேரத்திலாவது ஒருவனை மனதில் சுமந்து கொண்டு
இன்னொருவனுக்கு தன்னைக் கொடுத்து அவனையும் ஏமாற்றி
தன்னையும் ஏமாற்றும் பாவச் செயலைச் செய்யாமல் விட்டாளே!
இன்று அந்த மணமகனின் நிலை பரிதாபம்தான்.
அந்தத் திருமணம் நடந்திருந்தால் மணமகனின் நிலை இன்னும் பரிதாபமல்லவா..?
nadpudan
alai
alai

