04-27-2004, 08:48 PM
நோர்வே தூதரகம் வி.பு.களைத் தொடர்பு கொள்ளவுள்ளது
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 28 ஏப்பிரல் 2004, 1:05 ஈழம் ஸ
மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க மத்தியஸ்தம் செய்ய வருமாறு ஐனாதிபதி சந்திரிகா நோர்வே பிரதமருக்கு வழங்கிய அழைப்பை விரிவாக ஆராய்ந்த நோர்வே பிரதிநிதிகள், கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ஊடாக விடுதலைப் புலிகளின் தலைமைக்கு உத்தியோகபூர்வ அழைப்பை வழங்கவுள்ளதாகத் தெரியவருகிறது.
இதைத் தொடர்ந்து, இலங்கையின் சமாதான முயற்சி தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக நோர்வேயின் உயர்மட்டக் குழு எதிர்வரும் மே 2 ஆம் திகதி கொழும்பு வருகை தரவுள்ளதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நோர்வேயின் வெளிநாட்டமைச்சர் ஜான் பீற்றர்ஸன், பிரதிவெளிநாட்டமைச்சர் விடார் ஹெல்கிஷன், நோர்வே விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரை உள்ளடக்கிய இந்தக் குழு ஜனாதிபதி, பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்களையும் எதிர்க் கட்சித் தலைவரையும் கொழும்பில் சந்திக்கவுள்ளார்கள்.
இதன்பின்னர் 3 ஆம் திகதியளவில் கிளிநொச்சியில் விடுதலைப் புலகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஏனைய முக்கிய பிரதிநிதிகளையும் இவர்கள் சந்திக்கவிருப்பதாகவும் தெரியவருகிறது.
முன்னரைப் போலவே நோர்வே மீண்டும் மத்தியஸ்தம் வகிக்கும் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை வழங்கும் என்றும், இவர்களது பணியில் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று எந்தவித மாற்றமும் செய்யப்படாது என்று ஏற்கனவே உறுதியளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதற்கிடையில், நோர்வே மூலம் பேச்சுக்கள் ஆரம்பிக்கப் படவுள்ளமை குறித்து Nஐ.வி.பி.யின் தலைமைக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதாக பிறிதொரு செய்தி தெரிவிக்கின்றது.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>