04-27-2004, 05:08 PM
<b> புதிய இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை விவகாரத்தில் தோன்றப் போகும் அச்சமூட்டும் சவால்கள் </b>
<span style='color:brown'> இந்தியாவில் தற்போது இடம்பெற்றுவரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அண்டைய நாடுகளில் குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டு வரும் நெருக்கடிýயான அரசியல் மாற்றங்களைக் கையாள வேண்டிýய தேவை ஏற்படுமென இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும், இலங்கை- இந்திய உடன்படிýக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராகப் பணியாற்றியவருமான கே.என்.தீக்ர்pத் தெரிவித்திருக்கிறார்.
புதிய இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை விவகாரத்தில் தோன்றப் போகும் அச்சமூýட்டும் சவால்கள்
இலங்கையில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் நிச்சயமற்ற தன்மை கொண்டதாகவே இருக்கும்
இந்தியாவில் தற்போது இடம்பெற்றுவரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அண்டைய நாடுகளில் குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டு வரும் நெருக்கடிýயான அரசியல் மாற்றங்களைக் கையாள வேண்டிýய தேவை ஏற்படுமென இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும், இலங்கை- இந்திய உடன்படிýக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராகப் பணியாற்றியவருமான கே.என்.தீக்ர்pத் தெரிவித்திருக்கிறார்.
வைசராய், என கொழும்பில் (அவர் பணியாற்றிய காலகட்டத்தில்) வர்ணிக்கப்பட்டவரான கே.என்.தீக்ர்pத் புதிய இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை விவகாரத்தில் தோன்றப்போகும் 'அச்சமூýட்டும் சவால்கள்" என்ற தலையங்கத்தில் பத்தியொன்றை எழுதியிருக்கிறார்.
இணையத் தளமொன்றில் பிரசுரிக்கப்பட்டிýருக்கும் அதன் விபரம் வருமாறு:
தற்போது நடைபெற்று வரும் இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அண்டைய நாடுகளில், குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிýயான அரசியல் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிýயுள்ளமை தவிர்க்க முடிýயாததொன்றாகும்.
உரிய காலத்திற்கு முன்னரே பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதென்ற ஜனாதிபதி குமாரதுங்கவின் தீர்மானம் எதிர்பார்க்கப்படாததொன்றல்ல. கடந்த இரு வருடங்களாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் முறுகலான இணக்கத்தையே பேணி வந்தார்கள்.
இருவருக்குமிடையில் காணப்பட்ட அரசியல் கசப்புணர்வும் எப்பொழுதும் சச்சரவிடக்கூýடிýய நிலையும் வெளிப்படையாகத் தெரிந்ததொன்றாகும்.
குமாரதுங்கவின் பார்வைக்கு விக்கிரமசிங்கவின் விடுதலைப் புலிகளுடனான நேரடிýச் சமாதானப் பேச்சுகள் அதிக விட்டுக் கொடுப்புடன் நடைபெறுவதாகத் தோன்றியது. பெரும்பாலான சிங்கள மக்களின் கருத்தும் கூýட இதுவாகத் தான் இருந்தது. இதில் மோசமான விடயம் என்னவென்றால், விக்கிரமசிங்கவினது விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை பற்றி இலங்கையின் அரசியல் கட்சிகள் சிலவற்றால் எதிர்வு கூýறப்பட்டமை குறித்த ஒரு அம்சமாகும்.
விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுகளுக்கு முனைப்புக் காட்டுவது, அதை 2007 இல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான அரசியல் கோர்மாகப் பயன்படுத்துவதற்காகவே என்ற அடிýப்படையில் அந்தச் சிந்தனைகள் இருந்தன. அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் பேச்சுவார்த்தையைக் கைவிட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிýக்கையை ஆரம்பிப்பார் என்றவாறு வாதங்கள் சென்றன.
இவ்வாறான சாத்தியக்கூýறுகளை விடுதலைப் புலிகளும் உணர்ந்திருந்தார்கள் என்பது பேச்சுவார்த்தையின் வேகத்தை மட்டுப்படுத்தியது. நடைமுறை ரீதியாக பெருமளவிற்கு இறைமை கொண்ட தமிழ் ஆட்சி அலகொன்றை வலியுறுத்தும் தீர்வுத் திட்ட வரைபொன்றை அரசிடம் முன்வைத்தமை மற்றும் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்த 2002 பெப்ரவரியில் இருந்து ஆட்பலத்தை வலுப்படுத்தியதற்கு அப்பால் ஆயுத தளபாடங்களையும், கணிப்பியல் திட்டம் சார்ந்த வழங்கல்களையும் உறுதியாகக் கட்டிýயெழுப்பியமை என்பவற்றில் இருந்து தெளிவாகின்றது.
இந்த மாற்றங்களுக்கு சமாந்தரமாக, முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தின் அடிýப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் படிý ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோர்வே அனுசரணையாளர்கள் அதிகரித்த அழுத்தத்தைப் பிரயோகித்து வந்தார்கள்.
பாராளுமன்றத் தேர்தல்களை தாமதப்படுத்தி ஜனாதிபதி தேர்தலுக்காக காத்திருந்தால் இந்த விளையாட்டிýல் தான் தோல்வியடைய நேரிடும் என்று ஜனாதிபதி நிலைமையைச் சரியாக மதிப்பிட்டார்.
தேர்தல் முடிýவுகள் குமாரதுங்கவின் எதிர்பார்ப்பில் குறைபாட்டைக் காட்டிýயது. முன்னைய பாராளுமன்றத்தில் பெற்றிருந்த பெரும்பான்மையை விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி இழந்தது. }லங்கா சுதந்திரக் கட்சியையும், மக்கள் விடுதலை முன்னணியையும் பங்காளர்களாகக் கொண்ட குமாரதுங்கவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூýட்டமைப்பானது, 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையைப் பெறுவதற்கு எட்டு ஆசனங்கள் குறைவாக 105 ஆனங்களைப் பெற்றுக் கொண்டது.
ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங்களையும், விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு இலங்கையின் வடக்கு, கிழக்கில் இருந்து 22 ஆசனங்களையும் வெற்றி கொண்டன. இந்த மூýன்று பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஒரு புறமாக, பாராளுமன்றத்தில் சமநிலை தீர்மானிக்கக்கூýடிýய சில புதிய அரசியல் குழுக்கள் வெளித்தோன்றியுள்ளன.
மத்திய மலைப் பிரதேசத்தில் உள்ள இந்திய வம்சாவளியினரான தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எட்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. }லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குப் பகுதியில் இருந்து 5 ஆசனங்களைப் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட பௌத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய 9 ஆசனங்களை வென்றுள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை அடைவதற்காக சிறிய அரசியல் குழுக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூýட்டணி அமைக்க குமாரதுங்கவும், அவ்வாறே விக்கிரமசிங்கவும் முயல்கின்றனர். ஆதரவை வழங்குவதற்குத் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு விதிக்கும் நிபந்தனையை எந்தக் கட்சியாலும் ஏறறுக் கொள்ள முடிýயாதென்பதால் அப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தக் கூýட்டணியிலும் இணையும் சாத்தியம் காணப்படவில்லை.
வருகின்ற நாட்களில் குமாரதுங்கவும், விக்கிரமசிங்கவும் ஜாதிக ஹெல உறுமயவையும், }லங்கா முஸ்லிம் காங்கிரஸையும் தம் பக்கம் சாய்ப்பதற்கு முயலுவார்கள்.
இதேவேளை, குமாரதுங்க கூýட்டணியில் ஏற்படும் பிரச்சினையை சமாளிக்க வேண்டிýயுள்ளது. பிரதமர் பதவிக்கான அவரது முதல் தெரிவாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லடீ;மன் கதிர்காமர் இருந்தார். ஜனாதிபதி சிங்களவராகவும், தமிழரான கதிர்காமர் பிரதமராகவும் இருப்பது அரசாங்க உயர்மட்டங்களில் இன சமத்துவ விம்பத்தை வெளிப்படுத்தும் ஒன்றாக இருந்திருக்கக்கூýடும்.
ஆனால், அவர் தனது சொந்தக் கட்சியிலிருந்து வந்த அழுத்தங்களுக்கு இணங்க வேண்டிýயிருந்ததுடன், சிங்களவரான மகிந்த ராஜபக்ர்வை பிரதமராக நியமிக்க வேண்டிý ஏற்பட்டது.
இன்னுமொரு சிக்கலான விடயம் என்னவென்றால், முன்னாள் கிளர்ச்சிக் குழுவான மக்கள் விடுதலை முன்னணி, குமாரதுங்கவின் கூýட்டமைப்பு வெற்றி பெற்ற 105 ஆசனங்களில் 40 ஆசனங்களைப் பெற்றுள்ளமையாகும்.
மக்கள் விடுதலை முன்னணி மையத்துக்கு சற்று இடமான, அரசியல் சித்தாந்தத்துடன் உறுதியான சிங்கள இனத்துவ சார்பைக் கொண்டதாக விளங்குகிறது. இது ஜனாதிபதிக்கு, ஆளும் கூýட்டணிக்கு, தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஈர்ப்பதில் இடர்பாடுகளை ஏற்படுத்தக் கூýடும்.
ஜாதிக ஹெல உறுமயவும் கூýட இதேபோன்ற இடர்பாடுகளை ஏற்படுத்த முடிýயும்.
குமாரதுங்க முன்னுள்ள முதலாவது சவால், கூýட்டணியொன்றை உருவாக்கி அதன் மூýலம் உறுதியான ஆட்சியொன்றை ஏற்படுத்துவதாகும். இந்த நடைமுறை சிக்கலானது என்பதற்கு, சில முக்கிய அமைச்சுகள் தந்தாலொழிய, அமைச்சரவையில் இணையமாட்டோம் என்று மக்கள் விடுதலை முன்னணி மறுத்துள்ளமை ஓர் எடுத்துக் காட்டாகும்.
இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடைநிறுத்தமானது தொடர்ந்த வண்ணம் உள்ளது. குமாரதுங்கவின் அரசு உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொண்டாலே பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க முடிýயும். இந்த நடைமுறை இடர்பாடுகளைத் தீர்ப்பதும் பின்னர் கருத்து வேறுபாட்டிýற்குரிய முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சு மூýலம் தீர்வு காண்பதும் நீண்ட கடிýனமான பணியாக இருக்கும். ஏனென்றால், விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் நீதித்துறை என்பவற்றை உள்ளடக்கிய திட்ட வரைபிற்கும், அரசு கருதும் தீர்வுக்கும் இடையிலான முரண்பாடுகள் துருவ மயப்பட்டதாகக் காணப்படுகின்றன.
நோர்வே அனுசரணை மூýலம் தீர்வு காண்பதற்காக மேற்கு நாடுகளின் உதவியை விக்கிரமசிங்க விரும்புவதாகவும், குமாரதுங்க அதிகமான இந்தியப் பங்களிப்பை விரும்புவதாகவும் கொழும்பிலிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா இது பற்றிக் கருத்து வெளியிடுவதைத் தவிர்க்கும் என்பதுடன், நேரடிýயாக இப் பிரச்சினையில் சம்பந்தப்படாது என்பதை ஒருவர் அனுமானிக்க முடிýயும்.
இன்னுமொரு முரணான ஆட்சியில் இருந்த போது, இலங்கைப் பிரச்சினையில் நேரடிýயாகத் தலையிட்ட காங்கிரஸ் கட்சி தற்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூýட்டணி அமைத்துள்ளது.
விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிýருந்த போதும், தற்போதும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிýல் பல்வேறு வகைப்பட்ட ஏராளமான தொடர்புகளைக் கொண்டிýருப்பதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை புலனாய்வு செய்தவரான கார்த்திகேயன் அண்மையில் எழுதிய புத்தகம் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
எனவே, இலங்கையில் இந்தியாவுக்கான எதிர்கால வாய்ப்புகள் ஊக்கமளிக்காததும் நிச்சயமற்ற தன்மை நிறைந்ததும் ஆகும்.
</span>
-தினக்குரல்