04-27-2004, 04:30 PM
<b>வவுணதீவில் புலிகளின் முகாம் மீதான தாக்குதலில் எழுவர் பலி</b>
படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வந்தோரே தாக்கியதாக கௌசல்யன் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுண தீவுப் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முகாமிலும் காவலரணிலும் தங்கியிருந்த 7 விடுதலைப்புலி உறுப்பினர்கள் இனந் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
வவுணதீவு ஆயித்தியமலை வீதியில் முள்ளாமுனை என்ற இடத்திலிருந்த விடுதலைப்புலிகளின் தற்காலிக முகாமில் தங்கியிருந்த 4 புலி உறுப்பினர்களும் புலிகளின் முன்னரங்க காவல் நிலையத்தில் இருந்த 3 போராளிகளுமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுணதீவு இராணுவ முகாம் பக்கமாக இருந்து வாகனமொன்றில் வந்த ஆயுத பாணிகள் முதலில் புலிகளின் தற்காலிக முகாமை நோக்கி குண்டொன்றை வீசியுள்ளனர். பின்னர் சரமாரியாகச் சுட்டுள்ளனர். சுமார் 5 நிமிடங்கள் தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பிச் செல்லும்போது புலிகளின் முன்னரங்க காவல் நிலையத்திலிருந்தோர் மீதும் சரமாரியாக சுட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
அந்த வாகனத்தில் நான்கு பேருக்கு அதிகமானோர் இருந்ததாகவும் அவர்களில் இருவர் சாரம் அணிந்திருந்ததாகவும் ஏனையோர் நீளக் காற்சட்டை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் இடம்பெற்ற வேளையில் முன்னாமுனை முகாமில் 4 விடுதலைப்புலி உறுப்பினர்களும் 2 ஆதரவாளர்களும் (முதியவர்கள்) இருந்துள்ளனர்.
கப்டன் சிசில்குமார் (பழுகாமம்) கப்டன் வாமகாந்த (கிரான்), லெப்டிýனன்ட் வினோ (கொடுவாமடு), இரண்டாம் லெப்டிýனன்ட் தாரணன் (நெல்லிக்காடு) ஆகிய இந்த நான்கு பேரும் துப்பாக்கிச் சூýட்டிýல் கொல்லப்பட்டுள்ளனர்.
கூýடத் தங்கியிருந்த 2 ஆதரவாளர்களும் அங்கிருந்து தப்பியோடிý விட்டனர். இந்த நான்கு போராளிகளில் ஒருவர் பார்வையற்றவர். மற்றைய இருவர் இரு கால்களையும் இழந்தவர்கள். நான்காமவர் பக்கவாதத்தால் பீடிýக்கப்பட்டிýருந்தவராவார்.
முன்னரங்க காவல் நிலையத்தில் பலியானவர்கள் கப்டன் தியானேஸ்வரன் (நடராசா சுரேர்;, சவுக்கடிý)லெப்டிýனன்ட் டனிசன் (செல்லத்துரை ஜசிந்தன் வாகரை, மாங்கேணி), இரண்டாவது லெப்டிýனன்ட் செல்வவீரன் சேது நாதபிள்ளை (பிரதீபன், சித்தாண்டிý) ஆகிய புலி உறுப்பினர்களாவார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து வவுணதீவு இராணுவ முகாம் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. இராணுவத்தின் முன்னரங்க சோதனை நிலையத்திற்கும் புலிகளின் முன்னரங்க காவல் நிலையத்திற்குமிடையிலுள்ள தூரம் சுமார் ஒரு கிலோ மீற்றராகும்.
வவுணதீவு இராணுவ முகாம் பக்கமாக இருந்து வந்த வாகனம் அதே பக்கமாக திரும்பிச் சென்றுள்ளமையின் பின்னணி குறித்து பலத்த சந்தேகம் எழுப்பப்படுகிறது.
கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் முறையிட்டுள்ளதுடன் கடும் ஆட்சேபனையையும் தெரிவித்திருக்கிறார்.
அரச படையினருடன் சேர்ந்து செயற்படும் தேச விரோத சக்திகளே இச்சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக சாடிýயிருக்கும் கௌசல்யன், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்தே இத் தாக்குதலை நடத்தியிருப்பதால் இந்த விடயம் குறித்து இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்து தருமாறு கண்காணிப்புக் குழுவைக் கேட்டிýருக்கிறார்.
அதேவேளை, இந்தச் சம்பவம்தான் முதலாவதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுமாறு படைத்தரப்புக்கு தெரியப்படுத்துமாறும் கண்காணிப்புக் குழு மூýலம் கௌசல்யன் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதேவேளை, நேற்று மாலை 4 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட 7 பேரின் உடல்களும் இன்று மாலை 4 மணிக்கு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
தினக்குரல்