04-26-2004, 08:43 PM
Monday, 26 April 2004
<span style='font-size:30pt;line-height:100%'>மட்டக்களப்பில் பதற்றம் தோற்றுவிக்கப்படுகிறது? </span>
Monday, 26 April 2004
--------------------------------------------------------------------------------
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் ஒரு திசை திருப்பற் சம்பவமாகவே கொழும்பின் முக்கிய ஆய்வாளர் ஒருவரால் நோக்கப்படுகிறது.
கடந்த வாரம் இடம்பெற்ற சபாநாயகர் தேர்தலில் தோல்வியுற்றதையடுத்து இந்த ஆட்சியை பொதுசன மக்கள் ஐக்கிய முன்னணியால் கொண்டு நடத்த முடியுமா என்பது குறித்த கேள்விகள் இலங்கையில் ஏற்கனவே எழுந்துள்ளன.
இந்நிலையிலே, புலிகளுடன் பேசுவதற்குத் தயார் என்ற அறிவிப்பை சந்திரிகா நோர்வேக்கு விடுத்துள்ளார். இது ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 4,500 மில்லியன் டொலர்களையும் வெளிநாடுகளில் இருந்து பெறுவதற்காக ஐனாதிபதி ஆடும் நாடகம் என்றே கருதும் மேற்படி ஆய்வாளர்,
ஆனால் ஆட்சியில் பங்குவகிக்கும் Nஐ.வி.பியின் நிலைப்பாடு குறித்த கேள்விகள் பலரிடையேயும் எழுந்ததுள்ளது என்றும், Nஐ.வி.பி.யுடன் ஐனாதிபதிக்குள்ள பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையில் பேச்சுவார்த்தை தொடர்பாக அது என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றது என்பதிலேயே இந்த விவகாரம் தங்கியுள்ளது என்றும்,
Nஐ.வி.பி. நோர்வே வெளியேற்றப்பட வேண்டும், பேச்சுக்கள் விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேசக்கூடாது, இடைக்கால நிர்வாகம் இல்லை என்ற கொள்கைகளைக் கொண்டுள்ளதால் அது எவ்வாறு பேச்சுக்களை நடத்த அனுமதிக்கப் போகின்றது என்ற கேள்வியால் சர்வதேசம் ஆளும்கட்சி அரசின் மீதும், ஐனாதிபதியின் மீதும் நம்பிக்கையை இழந்து விட்டது என்றும் குறிப்பிட்டார்.
இதனாலேயே எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐப்பானின் விசேட தூதுவர் அகாசி இலங்கைக்கு வரவுள்ளதாகவும், நோர்வே கூட பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அவதானமாக கையாள முயற்சிப்பதற்கு இதுவே காரணம் என்றும் கூறினார்.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் கருணா விவகாரத்தில் அரசாங்கத்தின் பங்கு பற்றி பிரஸ்தாபிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், கருணா தங்களிடம் இல்லை என்று காட்டுவதற்காகவும் இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இங்குள்ள தினசரிப் பத்திரிகையொன்றின் ஆசிரியரிடம் இது பற்றி நான் கேட்ட போது, ஐனாதிபதி ஆட்சி முறையை மாற்றுவதற்குத் தேவையான பெரும்பாண்மையை சந்திரிகா இந்த ஆட்சியில் பெறமாட்டார் என்பது கண்கூடு என்றும் எனவே கருணாவை சரியாக பாவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டும் Nஐ.வி.பி., இதர இனவாதிகளைச் சமாதானப்படுத்துவதற்கு இவ்வாறான தாக்குதல் உதவும் என்றும், எனவே புலிகளுடன் பேச ஐனாதிபதி முயற்சிப்பதை அவர்கள் எதிர்க்காமல் விடலாம் என்றும் தான் கருதுவதாகத் தெரிவித்ததோடு,
இதற்காகவே கடந்தவாரம் கருணா இன்னமும் இலங்கையிலே இருக்கிறார் என்ற செய்தியை முக்கியத்துவமாக வெளியிட முயன்றதாகவும் தெரிவித்ததோடு, வவுணதீவு முகாமிலிருந்து வந்தவர்களே இதனைக் செய்ததை பொதுமக்கள் பார்த்ததாக திரு. கௌசல்யன் தெரிவித்துள்ளது உறுதிப்படுத்தப்படுமிடத்து, இது ஒரு போர் நிறுத்த மீறல் என்றும் இதனை கண்காணிப்புக்குழு எவ்வாறு கையாளப் போகிறது என்பதும் முக்கியமான விடயம் என்றும்,
தற்போதைய அரசு இந்த விடயங்களை அவதானமாகக் கையாளவிட்டால், அது மிகுந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பதே இது பற்றிய தனது கருத்து எனத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் 7 விடுதலைப் புலிகள் வீரச்சாவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் வீரச்சாவு அடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதான வீதியில் வவுணதீவு படைமுகாமிலிருந்து 8 கிலோமீட்டர் து}ரத்தில் உள்ள முன்ளாமுனை புலிகளின் வேளான்மை பண்ணையின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.
இந்த முகாமில் தங்கியிருந்த உடல் ஊனமுற்றவர்களே இத்தாக்குதலின் போது வீரச்சாவு அடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளார்கள்.
கால்களை இழந்த நிலையில் அங்கிருந்த கப்டன் சிசில்குமார் மற்றும் வாமகாந்த், இரண்டு கண்களையும் இழந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த லெப். வினோதன், ஒரு காலை இழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 2வது லெப். தாரணன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
இச்சம்பவத்தின் காரணமாக இந்த முகாமிலிருந்து 10 உழவு இயந்திரங்களும், 3 மோட்டார் சைக்கிள்களும் உழவு அடிக்கும் இயந்திரம் மற்றும் அருவி வெட்டும் இயந்திரம் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இத்தாக்குதலில் ஈடுபட்ட தேசவிரோத குழுவினர், ஒரு வெள்ளை நிற வாகனம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல்நிலை அமைந்துள்ள முள்ளாமுனை என்ற இடத்தில் உள்ள புலிகளின் காவல்நிலை மீது மேற்கொண்ட தாக்குதலில் மூவர் வீரச்சாவு அடைந்தனர்.
கப்டன் தியானேஸ்வரன் என்றழைக்கப்படும் நடராஐh சுரேஷ் (சவுக்கடி), லெப். தனுசன் என்றழைக்கப்படும் செல்லத்துரை யசிகரன் (மாவடிச்சேனை), 2வது லெப். செல்வவீரன் என்றழைக்கப்படும் சேதுநாதபிள்ளை பிரதீபன் (சித்தாண்டி) ஆகியோர் வீரச்சாவு அடைந்துள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டு-அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், சிறிலங்கா போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிற்கு அறிவித்திருப்பதாகவும், அரச படையினரோடு இணைந்து செயற்படும் தேசவிரோத சக்திகளே, இவ்விரு சம்பவங்களுக்கும் பொறுப்பு என்றும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வவுணதீவு ஊடாக வந்து தாக்குதலை நடத்திவிட்டு வவுணதீவு ஊடாகவே இக்குழுவினர் தப்பிச் சென்றதாக இச்சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தமக்கு அறிவித்துள்ளதாகவும், ஆகவே இச்சம்பவத்திற்கு இராணுவத்தினரின் அனுசரணை இருந்ததை தாங்கள் உறுதிப்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும், போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கு அறிவித்திருப்பதுடன், இச்சம்பவங்கள் தொடர்பாக இராணுவத்தினருடன் சந்தித்து நேரடியாக கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று மாலை சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் மட்டக்களப்பு பிரதிநிதிகள் தாக்குதல் நடைபெற்ற முள்ளாமுனை வேளாண் பண்ணை புலிகள் முகாமிற்கு சென்று சம்பவத்தின் பாதிப்புக்களை நேரடியாகக் கண்டறிந்ததுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது வீரச்சாவு அடைந்த 7 விடுதலைப் புலிகளினது வித்துடல்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு இன்று மாலை எடுத்துச் செல்லப்பட்டன. நாளை பிற்பகல் 4 மணிக்கு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இவர்களது வித்துடல்கள் அடக்கம் செய்யப்படவிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
புதினம்