04-26-2004, 11:32 AM
<b>சமாதான முயற்சிகளை ஆரம்பிக்க
கருணா விவகாரமும் முட்டுக்கட்டை!அவரை ஒளித்து வைத்திருக்கும் அரசுடன்
பேசுவதா எனத் தயங்குகின்றனர் புலிகள்</b>
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான முயற்சிகள் ஆரம்பமாவதற்கு முட்டுக்கட் டையாக இருக்கும் விடயங்களில் கருணா விவகாரம் முக்கியமானது எனத் தெரியவருகின்றது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவை இலங்கை அரசு தஞ்சம் கொடுத்து வைத்துள்ளது என்றும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக அவரைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டு வருகின்றது என்றும் புலிகள் கருதுகின்றனர். இத்தகைய அரசுடன் பேச்சு நடத்துவதா என்ற விசனம் புலிகளின் தலைமையிடம் பலமாக நிலவுவதை உணரமுடி கிறது.விடுதலைப் புலிகளின் நடவடிக்கை களுக்கு அஞ்சி கிழக்கிலங்கையை விட்டுத் தப்பியோடிய கருணாவும் அவ ரது நெருக்கிய சகாக்களும் இலங்கை அரசுப் படைகளிடம் தஞ்சமடைந்திருக் கின்றனர் எனக் கூறப்படுகின்றது.
ஆனால், இதை இலங்கை அரசுத் தரப்பு அடியோடு மறுத்துள்ளது.
எனினும், கருணாவோடு கொழும்புக்குத் தப்பியோடிப்பின்னர், மீண்டும் கிழக்கிலங்கைக் குத் திரும்பி வந்து புலிகளுடன் இணைந்துள்ள கருணாவின் முன்னாள் சகாக்கள் சிலர் நேர டியாகத் தெரிவித்துள்ள தகவல்க ளும் -
விடுதலைப் புலிகளின் உளவுப் பிரி வினருக்குக் கிடைத்துவரும் புலனாய்வுத் தகவல்களும் -
கருணா, இலங்கை அரசுப் படைகளின் பாதுகாப்பில் தெற்கில் ஓரிடத்தில் இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்துகின்றன என புலிகளின் வட்டா ரங்கள் தகவல் வெளியிட்டன.
தென்னிலங்கையில் உள்ள அதி ரடிப் படையினரின் ஒரு முகாமில் அல்லது இராணுவத்தளம் ஒன்றில் கருணா பத்திரமாக வைக்கப்பட்டிருக் கின்றார் எனப் புலிகள் கருதுகின்ற னர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத் துக்குள் ஊடுருவி, புலிகளின் தலை மையை இலக்குவைக்கும் சதித் திட் டங்களைச் செயற்படுத்துவதற்குக் கரு ணாவை ஒரு கருவியாகப் பயன்படுத்த இராணுவத்தரப்பு எத்தனிக்கலாம் என் றும் புலிகள் சந்தேகிக்கின்றனர்.
ஆபத்தான பேர்வழி ஒருவருக்குத் தஞ்சமளித்து, அவர் மூலம் புலிகள் இயக்கத்தின் தலைமையை ஆட்டங் காணச்செய்ய முயலும் ஓர் அரசுத் தலைமையுடன் ஒரே மேசையில் இருந்து சமரசம் பேசுவது குறித்து சிந்திக்கலாமா எனப் புலிகளின் மூத்த பிரமுகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
சமாதான முயற்சிகளை ஆரம் பிக்க முன்னர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளவேண் டும் எனக் கருதும் புலிகளின் தலைமை, கருணா விவகாரம் குறித்தும் தீர்க்கமான ஒரு முடிவு எட்டப்படவேண்டும் என விரும்புகிறது எனவும் தெரிகின்றது.
<b>மகாவலி அமைச்சுக்கு இழுபறி ஏன்?
திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்! </b>
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சிகளான சிறீலங்கா சுதந் திரக்கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இடையில் இழுபறியை ஏற்படுத் திய விவகாரங்களில் முக்கியமானதொன்று மகாவலி அபிவிருத்தி அமைச்சுப் பற்றிய சர்ச்சை யாகும்.
ஐ.ம.சு. கூட்டமைப்புக்கான உடன்பாடு ஏற்பட்ட சமயம், கூட்டமைப்பின் உத்தேச புதிய அர சில் மகாவலி அபிவிருத்தி அமைச்சைத் தங்களுக்குத் தருவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும் -
அது இப்போது மறுக்கப்பட்டு - மறக்கப்பட்டு - சு.க.பிரமுகருக்கு வழங்கப்பட்டுவிட்டது என வும் - தெரிவித்து சீற்றம் கொண்டுள்ளனர் ஜே.வி.பியினர்.
இவ்வளவு து}ரம் மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்காக இருதரப்பும் பிய்ச்சல் - பிடுங்கல் படுவது ஏன் என்று விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பாதுகாப்பு அமைச்சுக்கு அடுத்து இலங்கையில் அதிகளவு ஆயுதத் தளபாடங்களையும், இராணுவப்பயிற்சி பெற்ற அணிகளையும் கொண்டிருக்கும் அமைச்சு இதுதான் என்ற விவரம் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. அதனால்தான் அந்த அமைச்சுக்காக இவ்வளவு போட்டா போட்டி.
மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் விக்டோரியா, மாதுறுஓயா, கொத்மலை, ரந்தெனிகல, மொறகஹந்த ஆகிய ஐந்து பாரிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் கீழ் உள்ள ஐந்து பாரிய அணைக்கட்டுக்களையும் சுமார் இரு நு}று நீர் வாய்க்கால்களையும் பாது காக்கும் பணியில் இராணுவத்தின ரால் முழுதாகப் பயிற்றுவிக்கப்பட்ட 650 பாதுகாவலர்கள் உட்பட சுமார் 800 பாதுகாவலர்கள் இந்த அமைச் சின் கீழ் பணியாற்றுகின்றனர்.
இந்த அமைச்சின் கீழ் உள்ள ஆயுதக்களஞ்சியங்களில் ரி.56 ரகத் துப்பாக்கிகள் - 450 மற்றும் ரி.59 ரக சீனத் தயாரிப்பு பிஸ்டல்கள்-23 உட்பட குறைந்தது 615 ஆயுதங்கள் உள்ளன.
இந்த அமைச்சின் கீழ் காடுகள் மற்றும் சுமார் ஆறு லட்சத்து 40 ஆயி ரம் ஏக்கர் பாசன நிலமும் உள்ளன. மேலும் 8 ஆயிரம் கிலோமீற்றர் நீள மான கால்வாய் வலையமைப்பையும் இந்த அமைச்சே நிர்வகிக்கிறது.
இத்தகைய பெறுமதிமிக்க அமைச்சு இது என்பதைத் தெரியாமலேயே சு.க. பிரமுகர்கள் பலர் முன்னர் ஜே.வி. பிக்கு உறுதியளித்தபடி அந்த அமைச்சை ஜே.வி.பிக்கு வழங்கினால் என்ன என்ற கருத்தை வெளியிட்டு வந்தனராம். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் ஜனாதி பதி இல்லத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த ஒரு கூட்டத்தில் இது பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. ஜே.வி. பிக்கு அந்த அமைச்சைக் கொடுக் கலாம் என்ற சாரப்பட அங்கு சிலர் கருத்துக் கூறியபோது அவர்களின் வாயை மூடும் விதத்தில் கடுமையான தொனியில் பதில் தந்தாராம் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலா ளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன.
மகாவலி அமைச்சின் முக்கியத் துவம் என்னவென்பது எனக்கும் ஜனா திபதிக்கும்தான் தெரியும். பாதுகாப்பு அமைச்சுக்கு அடுத்து அதிகளவில் ஆயுதங்களையும் இராணுவப்பயிற்சி பெற்ற ஆள்களையும் கொண்டுள்ளது இந்த அமைச்சுதான். அதனிடம் ஆயு தங்கள், n~hட்கன்கள், வெடிபொருள் கள் எல்லாம் நிரம்பிக்கிடக்கின்றன. இராணுவப்பயிற்சி பெற்ற பெரியபடையணியே இந்த அமைச்சின் கீழ் உள் ளது.
ஷஷஅதைத்தவிர இலங்கையில் மிகப் பெரிய காடுகள் மகாவலி அபி விருத்தி அதிகார சபையின் கட்டுப் பாட்டிலும் நிர்வாகத்திலும்தான் உள் ளன. இந்த அமைச்சை ஜே.வி.பிக் குக் கொடுத்தால் சத்தமின்றி இராணு வப்பயிற்சி ஒன்றை முன்னெடுப்பதற் கான சகல வளங்களையும் அவர் களுக்கு வழங்கியதாகிவிடும். தெற் கில் மூன்றாவது ஆயுதக் கிளர்ச்சிக்கு நாமே வழி செய்தவர்களாகி விடு வோம்|| என்று அவர் கூறியதும் அரச தரப்பில் ஜே.வி.பிக்கு வக்காலத்து வாங்கியவர்கள் ஷகப்சிப்| ஆகிவிட்ட னராம்.
இந்த விடயத்தில் ஜே.வி.பிக்கா கப் பேசி வந்த அனுரா பண்டார நாயக்க, மங்கள சமரவீர போன்றோரும் இந்தத் தகவலோடு அடங்கிப் போய்விட்டனர் என்று கூறப்படுகின்றது.
<b>
கருணாவின் ஆள்கள் இருவர்
தஞ்சைப் பகுதியில் கைது? </b>
கருணாவின் ஆள்கள் எனக் கருதப்படும் இருவர் தமிழ்நாடு தஞ்சை மாவட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக் கின்றனர் என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் ஷநக்கீரன்| சஞ்சிகை தக வல் வெளியிட்டிருக்கின்றது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தஞ்சை மாவட்ட எல்லையோரப் பகுதியில் ஒரத்தநாடு அருகே உள்ள ஈச்சங்கோட்டை கால்நடைப் பண்ணை யில் வேலை பார்க்கும் மணிமாறன் என்பவர் கடந்த வெள்ளி இரவு வழக் கம்போல் வேலை முடிந்து தனது சொந்தக் கிராமமான சாமிப்பட்டிக்குப் போய்க்கொண்டிருந்தார். வழியில், யுூக்ளிபட்ஸ்| காடு. திடீரென அவரை இரண்டுபேர் வழி மறிக்க மிரண்டு போனார் மணிமாறன்.
விடுதலைப் புலிகளின் உடையில் இருந்த இருவரும் 4 நாள்களுக்குத் தேவையான சாப்பாட்டை எங்களுக் குத் தயார் செய்து கொடு|| என மிரட்ட மணிமாறன் மறுத்துள்ளார். சட்டெனக் கைத்துப்பாக்கிகளை எடுத்த இருவரும் துப்பாக்கி முனையில் மணி மாறனை மிரட்டினர். பயந்துபோன அவர் சாப்பாடு தயார் செய்து தருவ தாகச் சொல்லிவிட்டு கிராமத்துக்குச் சென்று மக்களைத் திரட்டிக்கொண்டு மீண்டும் காட்டுக்கு வந்தார். மக்க ளைப் பார்த்ததும் அந்த இருவரும் காட்டுக்குள் ஒளிந்துவிட்டனர்.
கால்நடைப் பண்ணை உதவி இயக்குநர் பெரியசாமியிடம் இந்தத் தகவலை மணிமாறன் சொல்ல அவர் பொலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இரவோடு இரவாக காட்டைத் துளாவிய பொலீஸ்படை, இரண்டு பேரையும் வளைத்துப்பிடித்தது. தற்போது க்யுூ| பிரிவுக் காவலில் இருக்கும் அவ்விருவர் பற்றியும் பொலீஸார் மூச்சு விட மறுக்கின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் தஞ்சை, திருச்சி பிரசார நேரத்தில் இந்தச்சம்பவம் நடந்ததால், வி~யத்தை அமுக்கியே வைத்துள்ளனர்.
மணிமாறனைத் தேடி கால்நடைப் பண்ணைக்குச் சென்றபோது, அவரும் பொலீஸ் பாதுகாப்பில் இருப்பது தெரி யவந்தது.
ஷக்யுூ| பிரிவினரிடம் இரகசியமாகத் தகவல் சேகரிப்பில் ஈடுபட்டபோது ஷபிடி பட்டவர்கள் விடுதலைப் புலிகள்தானா?|| என்று கேட்கப்பட்டது.
ஷஷகருணாவின் ஆள்கள் என்பது எங் கள் விசாரணையில் தெரியவந்திருக் கின்றது. தேர்தல் நேரமாக இருப்ப தாலும் கலைஞரின் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுப்பயணம் நடக்கவிருப்பதாலும் ஊடகங்களுக் குத் தகவல் போய்விடக்கூடாது என்ப தில் கவனமாக இருக்கிறோம்|| - என் றார் ஷக்யுூ| பிரிவினர்.
- இப்படி அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி உதயன் 26-04-2004