04-26-2004, 10:49 AM
தமிழ் மக்களின் பிரச்சனையை நன்கே புரிந்து வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். ஏதோ புலிகள் தான் 20இலட்சம் பேரையும் நீஙகள் உட்பட நாட்டை விட்டு விரட்டியடித்ததுபோல் எழுதுகிறீரகள். தமிழ் பேசும் மக்களுக்கு ஒருகாலமும் பிரச்சனை இல்லாதது போலவும் இந்த போராட்டம்தான் பிரச்சனைனையை கொண்டு வந்தது போலவும் எழுதுகிறீரகள். இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமிழ் தேசியத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதல்களும், திட்டமிட்ட அழிப்பும் காலக் கண் கூடு. தமிழ் தேசியத்தின் நிலங்களில் இருந்து சிங்க பேரினவாத சக்திகளால் துரத்தப்பட்டு இன்று அந்த பிரதேசங்கள் தனிச் சிங்க பிரதேசங்களாக இருப்பது உங்களுக்கு தெரிய நியாயமில்லை. காரணம் நீங்கள் இஞ்சை வந்து கனகாலம் அதையெல்லாம் நன்கே மறந்திருப்பீர்கள். தற்போது குறிப்பாக யாழ் குடாநாடு (நான் பார்த்தததை மட்டும் எழதுகிறேன்) பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேற்றபட்ட மக்கள் யாரால் வெளியேற்றப்பட்டார்கள்? இந்த மக்கள் வாழும் அவல நிலை உங்களுக்க தெரியுமா? இந்த மக்களின் இருப்பிடம் மற்றும் அவர்களின் வாழ் நிலை உங்களுக்கு தெரியுமா? அல்லது அதைப்பற்றிய கவலை தான் உள்ளதா? வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியுலும் உயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. ஆனால் அங்கிருந்து மக்கள் விரட்டியக்கப்படவில்லை. மிகமோசமான நிலைக்கு கொண்டு செல்லப்படவில்லை. இந்த வலயங்கள் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாத மனித நடாமாட்டம் குறைந்த பகுதிகளிலேயே உள்ளது. வடக்கில் இன்று இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் நிலவும் இந்த நிலைக்கு ஆக்கிரமிப்பு இராணுவம் காரணம் என்பதை நீங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டீர்கள்.
இந்த களத்தில் வந்து வெறுமனே சில ஊகங்களுடன் மற்றவர் கதை கேட்டு எழுதபவர்கள் முடிந்தால் தாயகம் சென்று வாருங்கள். யாருக்கும் எந்த வித ஆபத்தும் இன்றி அங்கு சென்று வர முடியும்.
இன்று நிலைமைகள் மாறியுள்ளன. 1977இல் தமிழ் தேசியத்திற்கும், தனி அரசு அமைப்பதற்கும் வடக்கு கிழக்கு மக்கள் ஆணை கொடுத்தனர். அதை மறக்க வேண்டாம். இன்று மீண்டும் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் தான் ஏகப் பிரதிநிதிகள் என்பதை உறுதி செய்துள்ளனர். நீங்கள் மக்களிடம் கேட்க சொன்னீரகள் மக்கள் விடை கொடுத்துள்ளார்கள். கள்ள வாக்கு அது இது என்று கதையளக்க வேண்டாம். 100 வீத சுத்தியுடன் வரலாற்றில் ஒரு போதும் நமது நாட்டில் தேர்தல் நடை பெற்றது கிடையாது. ஆனால் கள்ள வாக்கிற்கு ஒரு வீதாசாரத்தை குறைத்தாலும் வெற்றி புலிகளுக்கே. வன்னியிலிருந்து வாக்களிக்க சென்ற ஒரு மூதாட்டி நடக் கூட முடியாது, அவர் சொன்ன ஒரு கருத்து - நாங்கள் இவ்வளவு கஸ்டப்பட்டு வந்தது தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்பதற்கே, புலிகளை நமது பிரதிநிதிகளாக அனுப்புகிறோம். அந்த முதாட்டியை யாரும் கட்டியிழுத்து வரவில்லை, மக்கள் ஒரு தீர்வை வேண்டி நிற்கிறார்கள் ஒருமைப்பட்டு நிற்கிறார்கள். அதற்கான ஒரு பங்களிப்பாகவே அவர் போன்றோர் பலத்த சிரமத்தின் மத்தியில் சென்று வாக்களித்தனர். அவர் தம் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுவது வெளி நாட்டில் இருந்து விடுதலைக்கு எதிரான கருத்துக்களை கூறுபவர்களே.
தற்போதைய தேர்தல் முடிவுகள் தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றி!
சிங்கள தேசமும் சர்வதேசமும் அத்துடன் ஒத்துப்போகும் நீங்களும் இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் பாரப்போம்.