04-23-2004, 02:40 PM
<span style='color:red'>த.வி.கூ உறுப்பினர்கள் மீதான தடை உத்தரவை நீக்குமாறு கோரி மனுத் தாக்கல்.
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரின் ஆலோசனைகளின்றி கூட்டணியின் பொதுச் செயலாளர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடை உத்தரவை நீக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் இரா.சம்பந்தன், சிரேஷ்ட உபதலைவர் ஜோசப் பரராஐசிங்கம் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில் பிரதிவாதியாக வீ.ஆனந்தசங்கரி குறிப்பிடப்பட்டுள்ளார்.
கட்சித் தலைவர் ஆலோசனைகள் எதுவும் பெறப்படாமல் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அரசியல் பீட உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்த இடைக்கால தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பின்னர் உறுதி செய்திருந்தமை நீதிக்குப் புறம்பானது என்று மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த இடைக்கால தடை உத்தரவின் காரணமாக கட்சியின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாதுள்ளதால் அதனை இரத்துச் செய்யுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. </span>
நன்றி புதினம்...!
--------------------
[size=14]தேர்தல் சமயத்தில் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் சின்னம் உட்பட பல வகைகளில் அக்கூட்டமைப்புக்கு தேர்தலை எதிர் நோக்கவே நெருக்கடிகளைக் கொடுத்தவர் சங்கரி என்பதும் அந்தத் தடைகள் தாண்டப்பட்ட நிலையிலேயே கருணா பிளவு பற்றி அறிவித்ததும் கிழக்கில் மட்டக்களப்பு அம்பாறையில் கூட்டமைப்பின் இடையே பிளவை உண்டு பண்ண முனைந்ததும் நடைபெற்றது என்பதையும் இங்கு குறிப்பிடுதல் நன்று....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>