04-23-2004, 02:22 PM
<span style='color:red'>சமாதானப் பேச்சுக்களைத் தொடர மத்தியஸ்தம் செய்ய வருமாறு நோர்வேக்கு சந்திரிகா வேண்டுகோள்
இரண்டு வருடங்களுக்கும் மேலாக, சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில், சமாதானப் பேச்சுக்களை முன்னெடுத்து வருவதிலும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதிலும் மத்தியஸ்தர்களாகக் கடமையாற்றிய நோர்வே பிரதிநிதிகள், சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் தங்கள் பணிகளிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார்கள்.
ரணில் அரசின் அமைச்சரவையிலிருந்து மூன்று முக்கிய அமைச்சுக்களைப் பறித்தெடுத்த ஐனாதிபதி சந்திரிகா, சமாதானப் பேச்சுக்களைத் தொடர்வதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அதிக உரிமைகளைக் கொடுக்க முயற்சிப்பதாக ரணிலைக் குற்றம் சாட்டியதுடன், இதற்கு நோர்வேயும் உடந்தையாக இருப்பதாகவும் பகிரங்கமாக ஊடகங்களில் குற்றம் சாட்டி வந்தார்.
பாதுகாப்பு, ஊடகத்துறை உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை ஐனாதிபதி திடிரெனப் பொறுப்பேற்றதன் காரணமாக, யுத்த நிறுத்தத்தைத் தொடரவோ உறுதிசெய்யவோ தம்மிடம் போதிய அதிகாரம் இல்லை என்று காரணம்காட்டி, சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதை ரணில் அரசு தற்காலிகமாக நிறுத்திக்கொண்டது.
இதைத்தொடர்ந்து, சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் நோர்வே அரசின் பிரதிநிதிகளும், சிறிலங்காவில் எழுந்துள்ள அதிகாரப்பீட இழுபறிகள் தீர்ந்து ஒரு சுமூக நிலை ஏற்படும்வரை தங்களது மத்தியஸ்தத்தை தற்காலிகமாக விலக்கிக்கொள்வதாக அறிவித்தார்கள்.
தங்களது மத்தியஸ்தத்தை நோர்வே விலக்கிக்கொண்ட போதும், யுத்த நிறுத்தக் கண்காணிப்பில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயற்பட்டுவந்த ஸ்கன்டிநேவிய கண்காணிப்பாளர்களின் பணியை விலக்கிக்கொள்ளாது செயற்பட அனுமதித்ததால், மீண்டும் போர் மூளும் அபாயம் தவிர்க்கப்பட்டே வந்தது.
ஏப்ரல் முதல் வாரத்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, இரு பிரதான கட்சிகளுமே மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான சமிக்ஞைகளைக் காட்டியிருந்தார்கள்.
இருந்தபோதும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. உட்பட, ஹெல உறுமய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள் நோர்வேயின் மத்தியஸ்தத்தை நிராகரிக்கும்படியே கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது ஆட்சியமைத்துள்ள ஐ.ம.சு.மு.யின் தலைவரும், நாட்டின் ஐனாதிபதியுமான சந்திரிகா குமாரணதுங்க, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலும், ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலும், மீண்டும் விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தான் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதி கூறியிருந்தார். இருந்தாலும், ஏனைய அனைத்துக்கட்சிகளின் தலைமையையும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்தும் எண்ணத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்தியிருந்தார்.
இதற்கிடையில், அமெரிக்கா, யப்பான், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை போன்றன நேரடியாகவே ஐனாதிபதி சந்திரிகாவுக்கு, பேச்சுவார்த்தைகளை உடனடியாக விடுதலைப் புலிகளுடன் ஆரம்பிக்கும்படி அழுத்தம் கொடுத்தன.
இந்நிலையில், இன்று சந்திரிகா நோர்வேயின் பிரதம மந்திரி திரு.கியெல் மக்னே பொன்டெவிக் அவர்களைத் தொடர்புகொண்டு, நோர்வேயின் சமாதானப் பிரதிநிதிகள் 'மூன்றாம் நிலை" மத்தியஸ்தத்தைத் தொடருவதற்கு உடனே முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த நோர்வே பிரதமர், சிறிலங்காவின் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுகாண நோர்வே முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்தும் வழங்கும் என்றும், இப்போது மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு மத்தியஸ்தம் வழங்குவதாக இருந்தால், விடுதலைப் புலிகளின் தலைமையிடமிருந்தும் தமக்கு இதே அழைப்பு வரவேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது என்றார்.
இரு பகுதியும் விண்ணப்பித்து தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கும் பட்சத்தில் மட்டுமே நோர்வே மத்தியஸ்தர்கள், இரு பகுதிகளையும் சந்தித்து, எத்தகைய புதிய நிபந்தனைகள் கட்டுக்கோப்புக்கள் நிலைப்பாடுகளுக்குக் கீழே பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும் என்று ஆராய்வார்கள் என்று நோர்வே பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>