04-23-2004, 10:36 AM
<span style='color:red'>எதிர்க்கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதை நிரூபித்தால் ஐனாதிபதி அதுகுறித்து பரிசிலீப்பார்: சுசில் பிரேம ஜெயந்த்
பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இன்மையால் பெரும்பான்மையைப் பெற்ற தனிக்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் ஒன்றை அமைத்ததாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜெயந்த் தெரிவித்தார்.
சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவிய போதும், தமது கட்சிக்கு உள்ள மக்கள் பலம் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறுகின்றார்.
அரசாங்கம் அதிகாரத்தில் இருக்கும் வரை உறுதி அளித்தவாறு மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது என்பதை நிரூபித்தால் அதுகுறித்து ஐனாதிபதி பரிசீலிப்பார் என்றும் சுசில் பிரேம ஜெயந்த் தெரிவிக்கின்றார்.
எதிர்க்கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது என்பதை இலங்கை தமிழரசுக் கட்சியும், ஜாதிக ஹெல உறுமயவும் இணைந்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>