04-22-2004, 06:44 PM
<span style='color:red'>ஐ.தே.மு.யின் பிரதிநிதி லொக்கு பண்டார, சபாநாயகராக நியமனம்
13வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக, மூன்றாவதாக இடம்பெற்ற தெரிவில், சிறீலங்காவின் 16வது சபாநாயகராக ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதி திரு.டபிள்யூ.J.எம்.லொக்கு பண்டார தெரிவாகியுள்ளார்.
வியாழக்கிழமை மாலை 7:25ற்கு இந்தத் தெரிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 110 வாக்குகளைப் பெற்று இவர் தெரிவாகியுள்ளார். ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதி டியூ. குணசேகர 109 வாக்குகளைப் பெற்று இரண்டாம் நிலையில் காணப்பட்டார்.
முன்னாள் நீதியமைச்சரும் சட்டவல்லுனருமான திரு.லொக்கு பண்டாரவிற்கு 110 வாக்குகள் நான்காவது சுற்றில் கிடைத்தன. முதல் இரு தடவைகள் வாக்களிப்பு நடைபெற்றபோது வாக்களிக்காது மறுப்புத்தெரிவித்த ஹெல உறுமயவின் இரு பௌத்த பிக்குகள், மூன்றாவது சுற்றில் வாக்களித்தனா
திரு.லொக்கு பண்டாரவை புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற செயலாளர் நாயகம் பிரியானி விஐயசேகர அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மூன்றாவது சுற்றில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக, வாக்குப்பெட்டியை பாராளுமன்ற செயலாளர் நாயகம் பிரியானி விஐயசேகர அவர்கள், தனக்கு அருகே வைத்திருந்ததாகவும், இரகசிய வாக்கெடுப்பை மிகவும் உன்னிப்பாகவும் அவதானமாகவும் நடாத்தி, நான்காவது சுற்றில் 220 வாக்குகள் பெறப்பட்டதாகவும் தெரியவருகிறது. இவற்றில் ஒரு வாக்கு செல்லுபடியற்றதாகக் காணப்பட்டதையடுத்து, ஐ.தே.மு. 110 வாக்குகளையும், ஐ.ம.சு.மு. 109 வாக்குகளையும் பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, லொக்குபண்டார அவர்கள் ஒரு வாக்கை அதிகப்படியாகப் பெற்று புதிய சபாநாயகராகத் தெரிவானார். </span>
----------------------
<img src='http://sooriyan.com/images/stories/jvp/speaker.jpg' border='0' alt='user posted image'><img src='http://sooriyan.com/images/stories/jvp/pikku1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://sooriyan.com/images/stories/jvp/pikku2.jpg' border='0' alt='user posted image'>
(Images from sooriyan.com)
<span style='color:red'>சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் கூச்சலும் குழப்பமும்
சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர், கட்சித் தலைவர்கள் சபாநாயகரை வாழ்த்துவதற்காக அழைக்கப்பட்டபோது, பலத்த கூச்சலும் குழப்பமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றதாக எமது நிருபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய சபாநாயகரை வாழ்த்துவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு.ஆர்.சம்பந்தன் அழைக்கப்பட்டார். தமது கட்சியின் ஒத்துழைப்பு புதிய சபாநாயகருக்கு முழுமையாக வழங்கப்படும் என்று உறுதிகூறி, அவரை வாழ்த்தினார் சம்பந்தன்.
தொடர்ந்து உரையாற்றுகையில், டக்ளஸ் தேவானந்தாவை ஒரு அமைச்சராக நியமித்திருப்பது ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அவமதிக்கும் ஒரு செயல் என்றும், யாழ்.தேர்தல் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளை விடக் குறைவான தொகை வாக்குகளை மட்டுமே பெற்ற ஒருவர், அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது தவறானது என்றும் குறிப்பிட்டார்.
உடனே கூச்சலிட்டபடி அந்தக் கூற்றை வாபஸ் பெறும்படி ஐ.ம.சு.மு.யினர் சத்தமிட்டனர். அதைப் பொருட்படுத்தாது சம்பந்தன் அவர்கள் தனது உரையைத் தொடர்ந்தார். தங்கள் எதிர்ப்பை அவர் பொருட்படுத்தவில்லை என்பதை அவதானித்த ஐ.ம.சு.மு.யினர் இன்னும் அதிகமாகக் கூச்சல் போட ஆரம்பித்தனர். இருந்தபோதும், தனது கூற்றை வாபஸ் பெறாமலேயே பேச்சைத் தொடர்ந்த சம்பந்தன் அவர்கள், முழுமையாக உரையாற்றிய பின்னர், உற்சாகத்துடன் ஆசனத்திற்குத் திரும்பினார்.
ஹெல உறுமயவின் சார்பில் பேச அழைக்கப்பட்டபோது, இரு பௌத்த பிக்குகள் ஒரே நேரத்தில் எழுந்து புறப்பட்டனர். அதனால் யார் பேசுவது என்ற சர்ச்சை எழுந்தது. விரும்பியவர் யாரும் பேசமுடியாது, கட்சித் தலைவரே பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது, ஐ.தே.மு.க்கு சார்பாக வாக்களித்த பிக்குகளுக்கும், ஐ.ம.சு.மு.க்கு ஆதரவாக வாக்களித்த பிக்குகளுக்கும் இடையில், யாருடைய பக்கமிருந்து பேசுவதற்குப் போவது என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தது.
இறுதியில் ஐ.தே.மு.யின் சார்பில் போட்டியிட்ட லொக்குபண்டாரவிற்கு வாக்களித்த பிக்கு பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டு, முன்னே சென்றார். உடனே ஐ.ம.சு.மு.யினர் பலத்த எதிர்ப்பும் கூச்சலுமிட்டு, பௌத்த பிக்குகளைக் கேவலப்படுத்தும் வகையில் ஏசினார்கள். ஐ.ம.சு.மு.யின் சில உறுப்பினர்கள், அந்தப் பிக்குகளை நோக்கி பத்திரிகைகளையும் பைல்களையும் கடுதாசிகளையும் வீசினார்கள்.
பௌத்த பீடத்திற்கு எதிராக அவதூறாக ஐ.ம.சு.மு.யினர் காரசாரமாகச் சத்தமிட, முன்னே பேசுவதற்கு எத்தனித்த அதிவண.அத்துரலிய ரத்தன பெரிய சத்தமாகச் சொன்னார்: 'இப்படி ஹெல உறுமயவிற்கு எதிராக இவ்வளவு அவமரியாதை தரும் ஐ.ம.சு.மு.க்கு ஹெல உறுமயவின் ஆதரவு எப்படிக் கிடைக்கும்" என்று.
அந்தப் பிக்கு எவ்வளவு கூறியும், அவரது உரை முடியும்வரை ஐ.ம.சு.மு.யினரின் காட்டுக் கூச்சல் ஓயவில்லை. பிக்குவின் உரையை யாரும் கேட்கவிடாது சத்தமிட்டுக்கொண்டே இருந்தார்கள் அவர்கள்.
முன்னர் சபாநாயகருக்கான வாக்களிப்பு இடம்பெற்ற நேரத்தில், பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி.பவித்ரா வன்னியாராச்சி, வாக்குப்பெட்டிக்கு மேலே ஏறியமர்ந்துகொண்டு, ஐ.தே.மு. அங்கத்தவர்கள் வாக்களிக்க முடியாது தடுத்து, பத்திரத்தைக் கிழித்தெறிய முற்பட்டதாலும் குழப்பங்கள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, சந்திரிகாவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்தவர்கள் மிகவும் ஆக்ரோசமாகக் காணப்பட்டதாகவும், கேவலமான வார்த்தைகளால் ஏசியும், கூச்சல் போட்டும், பேப்பர்களை வீசியெறிந்தும் பலவித குழப்பங்களிலும் ஈடுபட்டதனால், பாராளுமன்றத்தில் மிகுந்த களேபரங்கள் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் பிரியானி விஐயசேகர இந்த ரகளைகளை அடக்க கடும் பிரயத்தனப்பட்டதை அவதானிக்க முடிந்ததாக எமது நிருபர் மேலும் தெரிவித்துள்ளார். </span>
நன்றி புதினம்..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>