04-22-2004, 05:05 PM
<b>அரசியல்துறைப் பொறுப்பாளர் ஐ.நா. பிரதிநிதிகளுடனான சந்திப்பு </b>
[ வன்னியிலிருந்து கிருபா, சங்கீத் ] [ வியாழக்கிழமை, 22 ஏப்பிரல் 2004, 20:14 ஈழம் ]
இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பில், விடுதலைப்புலிகள் தரப்பில், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன், அரசசார்பற்ற நிறுவன இணைப்பாளர் திரு.மு.பாவரசன் (தியாகராஐh), விடுதலைப்புலிகளின் திட்டமிடல்ச் செயலகப் பணிப்பாளர் திரு.கு.து}யவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளாக nஐனீவாவிற்கான யு.என்.எச்.சி.ஆர்.பிரதிநிதி திரு.டெனிஸ் மைக்நமாரா, வனேசா மார்ட்டர், மார்ட்டின் லொப்ஃட்டஸ், பீற்றர் ஐhன்சன், நீல் றைற், ஆர்வஷி பட்டேல், மேவி மேர்ஃபி, கேய் முராட்டா, அனிசேட் டைசஃபி, எட்வேர்ட் பென்சன் ஆகியோர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தற்போதைய அரசியல் நிலை, மக்களின் இயல்பு வாழ்க்கை, இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் பாதுகாப்பு வலயம், மீள்குடியேற்றத் திட்டங்கள், மீண்டும் நாட்டிற்கு வந்து குடியேறும் அகதிகள் போன்ற பல்வேறு விடயங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விபரமாக ஆராயப்பட்டன.
வறுமையிலும் வறுமையின் அடிமட்டத்தில் வாழும் ஏழைத்தமிழ் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே தொடர்ந்தும் வாழ்வதைத் தான் அவதானித்ததாகத் தெரிவித்த யு.என்.எச்.சி.ஆர். nஐனீவாவுக்கான பிரதான வதிவிடப் பிரதிநிதி, இதற்கான அவசிய நடவடிக்கைகளை அவசரமாகக் கவனிக்கவேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்தார்.
நன்றி புதினம்
<b>ஐ.தே.மு.யின் பிரதிநிதி லொக்கு பண்டார, சபாநாயகராக நியமனம் </b>
[காவலுர் கவிதன் ] [ வியாழக்கிழமை, 22 ஏப்பிரல் 2004, 20:29 ஈழம் ]
13வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக, மூன்றாவதாக இடம்பெற்ற தெரிவில், சிறீலங்காவின் 16வது சபாநாயகராக ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதி திரு.டபிள்யுூ.Nஐ.எம்.லொக்கு பண்டார தெரிவாகியுள்ளார்.
வியாழக்கிழமை மாலை 7:25ற்கு இந்தத் தெரிவு உத்தியோகபுூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 110 வாக்குகளைப் பெற்று இவர் தெரிவாகியுள்ளார். ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதி டியுூ. குணசேகர 109 வாக்குகளைப் பெற்று இரண்டாம் நிலையில் காணப்பட்டார்.
முன்னாள் நீதியமைச்சரும் சட்டவல்லுனருமான திரு.லொக்கு பண்டாரவிற்கு 110 வாக்குகள் நான்காவது சுற்றில் கிடைத்தன. முதல் இரு தடவைகள் வாக்களிப்பு நடைபெற்றபோது வாக்களிக்காது மறுப்புத்தெரிவித்த ஹெல உறுமயவின் இரு பௌத்த பிக்குகள், மூன்றாவது சுற்றில் வாக்களித்தனா
திரு.லொக்கு பண்டாரவை புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற செயலாளர் நாயகம் பிரியானி விஐயசேகர அவர்கள் உத்தியோகபுூர்வமாக அறிவித்துள்ளார்.
மூன்றாவது சுற்றில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக, வாக்குப்பெட்டியை பாராளுமன்ற செயலாளர் நாயகம் பிரியானி விஐயசேகர அவர்கள், தனக்கு அருகே வைத்திருந்ததாகவும், இரகசிய வாக்கெடுப்பை மிகவும் உன்னிப்பாகவும் அவதானமாகவும் நடாத்தி, நான்காவது சுற்றில் 220 வாக்குகள் பெறப்பட்டதாகவும் தெரியவருகிறது. இவற்றில் ஒரு வாக்கு செல்லுபடியற்றதாகக் காணப்பட்டதையடுத்து, ஐ.தே.மு. 110 வாக்குகளையும், ஐ.ம.சு.மு. 109 வாக்குகளையும் பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, லொக்குபண்டார அவர்கள் ஒரு வாக்கை அதிகப்படியாகப் பெற்று புதிய சபாநாயகராகத் தெரிவானார்.