04-22-2004, 11:46 AM
சபாநாயகர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி நிலை
13வது பாராளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவு தொடர்ந்தும் இழுபறி நிலையில் காணப்படுகின்றது. இரண்டாவது முறையாகவும் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாக்கெடுப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை மூன்றாவது முறையாக வாக்கெடுப்பு இடம்பெறவில்லை.
சபையில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் வெளியே சென்றிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் 1.25 அளவில் இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பு சபையில் ஏற்பட்ட அமளிதுமளி காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது வாக்குப்பத்திரங்களை எதிர்க்கட்சிப் பக்கம் காண்பித்ததன் காரணமாக சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் கோஷம் எழுப்பியதுடன், சபை நடுவில் இருந்த வாக்குப்பெட்டிகள் ஏறி அமர்ந்தும் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து வாக்களிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இன்று காலை இடம்பெற்ற முதலாவது வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் டபிள்யு. J.M லொக்கு பண்டாரவிற்கு 108 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட டி.ஈ.டபிள்யு.குணசேகரவிற்கு 108 வாக்குகளும் கிடைத்தன. ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டதுடன், 8 வாக்குகள் அளிக்கப்படவில்லை.
இருவரும் சம எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றதன் காரணமாக, மீண்டும் இரண்டாவது தடவையாகவும் இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. எனினும், அந்த வாக்கெடுப்பும் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>