Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா சினிமா
#53
<img src='http://www.kumudam.com/reporter/250404/pg1-t.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:27pt;line-height:100%'>\"உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாதே!
உயிரே பிரிந்தாலும் உறவேதும் பிரியாதே!\"</span>

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும்போது இந்த வரிகளுடன்தான் அறிமுகமானார் சௌந்தர்யா! "நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு..." என்ற பாடல் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் பரிச்சயமான சௌந்தர்யா, இன்று....?

<img src='http://www.kumudam.com/reporter/250404/pg1.jpg' border='0' alt='user posted image'> கடந்த சனிக்கிழமை காலையில் சோகத்தில் மூழ்கிய தென்னிந்திய சினிமா உலகம், இன்னமும் துக்கத்திலிருந்து மீளாமல்தான் உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என எந்த மொழியையும் விட்டுவைக்காத அந்த தேவதையை, இன்று காலனும் விட்டுவைக்கவில்லை. தென்னிந்திய சினிமாவின் சௌந்தர்யத்தை விழுங்கிய அந்த விமான விபத்தை விவரமாய்ப் பார்ப்பதற்குள் சௌந்தர்யாவின் ஃப்ளாஷ்பேக்கை பார்த்துவிடலாம்.

நமக்கெல்லாம் சௌந்தர்யா என்ற பெயரில் அறிமுகமான அவரது உண்மையான பெயர், சௌம்யா. 1976 ஜூலை 18_ல் ஓர் ஆந்திர பிராமண குடும்பத்தில் பிறந்த சௌந்தர்யாவின் அப்பா கே.எஸ்.சத்தியநாராயணா, ஒரு ஏழை திரைக்கதையாசிரியர்.

பெங்களூரிலுள்ள மகாராணி கல்லூரியில் ஹோம்சயின்ஸ் படித்த சௌந்தர்யா, அடுத்து கோலாரிலுள்ள தேவராஜ் யு.ஆர்.எஸ். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஒரு பக்கம் சினிமா வாழ்க்கை போய்க்கொண்டிருந்தாலும், மறுபுறம் படிப்பிலும் தூள் கிளப்பிக்கொண்டிருந்தார். ஆனால், ஒருகாலத்துக்கு மேல் அந்த தேவதையால் ஒரே சமயத்தில் இரட்டைக் குதிரை சவாரி முடியாமல் போக, முழு நேரமும் சினிமாவிலேயே குதித்தார். மருத்துவம் படித்திருந்தால், எத்தனை உயிரைக் காப்பாற்றியிருப்பாரோ தெரியவில்லை. ஆனால், சினிமா அவர் உயிரைக் குடித்துவிட்டது. ஆம்! சினிமா நடிகை என்ற ஒரே காரணத்துக்காகத்தானே அவரை அரசியல் வலைபோட்டுப் பிடித்தது!

முழு நேர சினிமாவில் குதித்த சௌந்தர்யாவுக்கு மளமளவென வாய்ப்புகள் வந்து குவிந்தன. குறுகிய காலத்தில் தெலுங்குத் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகியானார். தெலுங்கு ரசிகர்களை கிரங்கடித்துக்கொண்டிருந்த சௌந்தர்யாவை, 1993_ல் தன் ' பொன்னுமணி' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்துக்கு அழைத்து வந்தார் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார். படம் சூப்பர் ஹிட்டானது. எப்போதும் வெற்றிலையைக் குதப்பியது போலிருந்த சௌந்தர்யாவின் உப்பிய கன்னங்களும் சிவந்த உதடுகளும் தமிழ் ரசிகர்கள் ஒவ்வொருவரையும் உறங்கவிடவில்லை. தமிழ் சினிமாவில் சௌந்தர்யாவுக்கென நிரந்தர ரசிகர் பட்டாளம் உருவானது.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தார் சௌந்தர்யா. அதிலும் இரண்டாவது படமான 'படையப்பா,' தென்னிந்திய திரையுலக வரலாற்றில் ஒரு புதிய சரித்திரம் படைத்தது. சூப்பர் ஸ்டாரின் ராசியான ஹீரோயினானார்.

பிரபல டைரக்டர் சுந்தர் சி., சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய பேட்டி ஒன்றில், தனக்குப் பிடித்த ஹீரோயின்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தபோது, தன் இயக்கத்தில் நடித்த பல நடிகைகளின் குறைகளைப் பட்டியல் போட்டபடி வந்தவர், சௌந்தர்யாவைப் பற்றிப் பேசும்போது மட்டும் ரொம்பவே சிலாகித்துப்போனார். "உண்மையில சொல்றேன்க.... ஷ¨ட்டிங் ஸ்பாட்ல நான் லயிச்சுப் போய் சைட் அடிக்கிற ஒரே ஹீரோயின் சௌந்தர்யாதாங்க. உண்மையிலேயே அவ்வளவு அழகாயிருப்பாங்க" என்றார் வெளிப்படையாக. தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடிவிட்டார் சௌந்தர்யா.

தமிழ் சினிமாவில் அசிங்கமான ஆடைக் குறைப்பில் இறங்காமல், ஓரளவு கவர்ச்சியுடன் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய திறமை சௌந்தர்யாவுக்கு மட்டுமே உண்டு. ஆர்ப்பாட்டமான, ஆட்டபாட்ட படம் மட்டுமல்லாமல், அம்மன் புகழ்பாடும் ஆன்மிகப் படத்திலும் நடித்தார் சௌந்தர்யா. 1995_ல் வெளியான 'அம்மன்' படத்தில் குங்கும மயமாக அவர் அழுது புரண்ட காட்சிகள், தியேட்டரில் பல பெண்களை சாமியாட வைத்தன. தெலுங்கில் அவர் நடித்த படங்கள் பல அவார்டுகளை வாங்கிக் குவித்தபடியிருக்க, அவர் தயாரித்த "த்விபா" என்ற கன்னடப் படம் தேசிய விருது வாங்கியது. அந்தப் படம், மரணத்திற்கு அஞ்சாத ஒரு பெண்ணின் கதை என்பது டச்சிங்கான விஷயம்.

"வந்தோம்... ரெண்டு பாட்டுக்கு ஆடினோம் என்றில்லாமல், மற்ற கதாநாயகிகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட நடிகையாகத்தானிருந்தார் சௌந்தர்யா. ஒவ்வொரு காட்சியிலும் நுட்பமான ஈடுபாட்டுடன் நடிப்பதுதான் சௌந்தர்யாவின் தனித்துவம். காட்சியின் வெற்றிக்கு அவர் காட்டும் ஆர்வமும் உழைப்பும் பாராட்டப்பட வேண்டியவை. எப்போதுமே தன்னை ஒரு சாதாரண நடிகையாக மட்டும் காட்டிக்கொள்ள அவர் விரும்பியதில்லை. எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவரிடமிருந்தது!" என்றார், நாம் பெங்களூரில் சந்தித்த பிரபல இயக்குநர் க்ரீஸ் காசரவல்லி. சௌந்தர்யாவை தமிழில் அறிமுகம் செய்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரோ, "சௌந்தர்யா இறந்ததைக் கேள்விப்பட்டு துடித்துவிட்டேன். சமீபத்தில் எனது 'கற்க கசடற' படத் தொடக்க விழாவுக்கு வருவதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அந்த சௌந்தர்யா இன்று இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை!" என்றார் துக்கம் தாளாமல்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சௌந்தர்யாவின் ரசிகர்களுக்கு தலையில் இடி இறங்கியது போன்று திடீரென்று ஒரு செய்தி வந்தது. அது.... சௌந்தர்யாவின் திருமணச் செய்திதான். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சௌந்தர்யா தன் அம்மா வழி உறவினரான ரகுவைத் திருமணம் செய்து கொண்டார். சாஃப்ட்வேர் இன்ஜினீயரான ரகுவைத் திருமணம் செய்துகொண்ட சிறிய இடைவெளிக்குப் பின், மீண்டும் நடிக்க வந்தார் சௌந்தர்யா. இப்போது தனது முதலாமாண்டு திருமண நாளைக் கொண்டாட வெறும் பத்து நாட்களே மிச்சமிருக்க, ஏகப்பட்ட கனவுகளுடன் விமானம் ஏறியவர், அடுத்த சில நிமிடங்களில் கரித்துண்டுகளாக சிதறுண்டது கொடுமையிலும் கொடுமை.
<img src='http://www.kumudam.com/reporter/250404/pg1-2.jpg' border='0' alt='user posted image'>சௌந்தர்யாவின் குடும்பத்துக்கு ஆர்.எஸ்.எஸ். மேல் ஒரு பற்று உண்டு. இதை நிரூபிக்கும் வகையில்தான் சமீபத்தில் பி.ஜே.பி.யில் இணைந்தார் சௌந்தர்யா. கடந்த பதினாறாம் தேதியன்று பெங்களூர் மல்லேஸ்வரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மத்திகரேயில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். பதினேழாம் தேதியன்று ஆந்திர மாநிலம் கரீம் நகரில், பி.ஜே.பி. மற்றும் தெலுங்கு தேசக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதாகத் திட்டமிட்டிருந்தார்.

அதற்காக கடந்த பதினேழாம் தேதியன்று பெங்களூர் புறநகர்ப் பகுதியிலுள்ள ஜக்கூர் விமான தளத்திலிருந்து அக்னி ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான செஸ்னா 180 என்ற மினி விமானத்தில் ஏறி ஆந்திரா புறப்பட்டார். அவருடன் அவரது அண்ணன் அமர்நாத், ஹிந்துஜாக்ரான் வேதிகேயைச் சேர்ந்த ரமேஷ்கதம் ஆகியோரும் சென்றனர். விமானத்தை ஜாய் பிலிப்ஸ் என்ற விமானி இயக்கினார். ஜக்கூர் விமான தளத்திலிருந்து பதினேழாம் தேதி, காலை 11.05 மணியளவில் கிளம்பிய அந்த மினி விமானம், சுமார் நூறடி உயரத்தை எட்டிப் பிடித்திருந்த நேரத்தில், மின்னி மறையும் வேகத்தில் தரையை நோக்கிப் பாய்ந்து வெடித்துச் சிதறியது. விமானம் விழுந்த இடம், ஜக்கூர் விமான தளம் எதிரேயுள்ள காந்தி க்ரிஷி விக்யான் கேந்திரா என்ற விவசாயப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலம். மினி விமானத்திற்குள்ளிருந்த நான்கு பேரும் அடையாளம் தெரியாமல் கருகி, கிட்டத்தட்ட சாம்பலானார்கள். விவரத்தைக் கேள்விப்பட்டு பெங்களூர் ஜக்கூர் விமான நிலையம் அருகிலுள்ள அந்தச் சம்பவ இடத்தில் மின்னலாய்ப் போய் நின்றோம். புகைந்துகொண்டிருந்த அந்தச் சாம்பல் குவியலின் நடுவில் ஆங்காங்கே சவச்சிதறல்கள். கைகளும் கால்களும் தனித்தனியாய் பிய்ந்துபோய்க் கிடக்க, சுற்றி நின்று கதறியபடியிருந்தனர் சௌந்தர்யாவின் உறவினர்கள். கட்டுக்கடங்காத கூட்டம் அந்த இடத்தைச் சுற்றி நிற்க, அந்த அழகு தேவதை சௌந்தர்யாவின் அங்கங்கள் வெந்துபோய்க் கிடந்த துயரத்தை என்னவென்று சொல்வது!

விமானம் விபத்திற்குள்ளானபோது சௌந்தர்யா தன் கைகளை அசைத்து உதவி கேட்டதாகவும், ஆனால் அதற்குள் ஆடையில் பற்றிய தீ, மளமளவென்று பரவி அவரை எரித்துவிட்டதாகவும், விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். அதேபோல் இந்தக் கோரக் காட்சியை நேரில் பார்த்த சௌந்தர்யாவின் கார் டிரைவர் அப்பே கவுடர், "அவங்க உள்ளே ஏறி உட்கார்ந்ததும் பேக் எல்லாத்தையும் சரியா உள்ளே அடுக்கிட்டு, சீட் பெல்ட்டை மாட்டிவிட்டுட்டு தள்ளிப்போய் நின்னுக்கிட்டேன். ஃப்ளைட் கிளம்பி மேலே போன கொஞ்ச நேரத்துல அப்படியே கீழே விழுந்து நெருப்பு பத்திக்கிச்சு. ஷாக்காகி ஓடினேன். ஆனா என்னால எதுவும் பண்ண முடியலை!" என்று பதற்றம் தணியாமல் விவரித்தார்.

விபத்து நடந்த தகவலைக் கேள்விப்பட்டும் தீயணைப்புப் படையினரோ, காவல்துறையோ விரைந்து வரவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் எழுந்தாலும், யார் வந்தும் எந்த விதத்திலும் யாரையும் காப்பாற்ற முடியாத அளவிற்கு விபத்தின் வீரியம் இருந்தது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். குவிந்து கிடந்த அந்த கரிக்குவியல்களிலிருந்து ஒவ்வொருத்தரின் உடலையும் ஏதோ குத்துமதிப்பாக அடையாளம் கண்டபடி அள்ளிச் சென்றனர் மீட்புப் படையினர். பெங்களூர் பவுரிங் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டு சௌந்தர்யா மற்றும் அவரது அண்ணன் அமர்நாத் இருவரின் உடல்களும் உறவினர் வசம் ஒப்படைக்கப்பட்டன. விபத்து நடந்த இடத்திற்குக் கதறியபடி வந்த சௌந்தர்யாவின் உறவினர்களின் கதறல், முடிவின்றி தொடர்ந்தவண்ணமேயிருந்தது.

உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள், பெங்களூர் டாலர்ஸ் காலனியிலுள்ள சௌந்தர்யாவின் வீட்டை நோக்கி நகர ஆரம்பித்தனர். சௌந்தர்யாவின் வீட்டின் முன்புறமாக சௌந்தர்யாவின் பளிச் போட்டோ ஒன்று வைக்கப்பட்டிருக்க, "இந்த மலரா கருகிவிட்டது...?" என்ற புகைச்சலான கேள்விதான் ஒவ்வொருவருக்குள்ளும்.

கதறியழுதபடியே தன் மனைவியின் கருகிப்போன அங்கங்கள் குவிக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு இறுதிக் காரியம் செய்தார் சௌந்தர்யாவின் கணவர் ரகு. நடிகர் ராஜ்குமார், தன் மனைவி பர்வதம்மாளுடன் வந்து ரகுவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு மௌனமாய் நின்றுகொண்டார். பின்பு வெளியில் வந்தவர், "சௌந்தர்யா தானே கட்டியுள்ள இந்த அழகான வீட்டுக்கு என்னை வரச்சொல்லி அழைத்தார். அதற்கு எனக்கு சரியான நேரம் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால், கடைசியில் இப்படியரு நாளில் அவரது வீட்டிற்கு வரவேண்டியதாகிவிட்டதே!" என்றார் கலங்கிய கண்களுடன்.

சௌந்தர்யாவுடன் இறந்த அவரது அண்ணன் அமர்நாத்தின் மனைவி கண்ணீர் மல்க, "கிளம்பும்போது அவங்க அம்மா கால்ல விழுந்து ஆசி வாங்கிட்டுப் போனாங்க. புதன்கிழமை திரும்பி வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனாங்க. ஆனா, சனிக்கிழமையே வந்துட்டாங்க... இப்படி அவங்க முன்னாடியே வந்ததுக்காக எங்களால் சந்தோஷப்பட முடியலையே!" என்று கதறினார்.

சௌந்தர்யாவின் வீட்டுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்த வந்தபடியிருக்க, மாலை சுமார் ஆறு மணியளவில் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட, இருவரின் உடல்களும் ஸ்ரீராமபுரத்திலுள்ள ஹரிசந்திரகாட் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டன. தென்னிந்திய சினிமா ரசிகர்களை திகட்டத் திகட்ட கலக்கிய அந்த அழகுப் புயல், இப்படி அகாலத்தில் கரை கடந்தது கண்ணீர்மயமான ஒன்றுதான்.

விபத்து பற்றி முழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.

சௌந்தர்யாவின் மரணச்செய்தி தரும் துக்கம் ஒருபுறமிருக்க.. விபத்துக்குள்ளான அந்தக் குட்டி விமானத்தைப் பற்றிய பெரிய சந்தேகங்கள் இப்போது கலங்கடித்து வருகின்றன. குறிப்பாக, அந்த செஸ்னா 180 விமானம், வியாபார ரீதியாக பயன்படுத்துவதற்குண்டானதல்ல. தனியார் தேவைக்காக வைத்துக்கொள்ளவே ஏற்றது என்றும், அந்த விமானம் இன்ஸ்யூர் செய்யப்பட்டதல்ல என்றும், இந்த ரக விமானங்களின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள்தான்... ஆனால் 1955_ம் ஆண்டில் தயாரான இந்த விபத்துக்குள்ளான விமானம், ஐம்பது ஆண்டுகளாகிவிட்ட நிலையில், எப்படி பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது என்றும் ஏகப்பட்ட கேள்விக்கணைகள் எழுப்பப்படுகின்றன.

மேலும் இந்த மினி ரக விமானத்தில் விபத்து நடந்தது பற்றிய உண்மையை அறிய உதவும் கறுப்புப்பெட்டி இல்லாததால், உண்மையை அறியும் வாய்ப்பின் வழிகள் அடைபட்டுள்ளன.

விபத்துக்கான காரணத்தை அறிய மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் அந்த விமானத்தை வைத்திருந்த அக்னி ஏவியேஷன் நிறுவனத்திடம் சில ஆவணங்களைக் கேட்டுள்ளனர். மேலும் இந்த விசாரணையை விமானப் போக்குவரத்துத் துறை சார்பில் டெல்லியிலிருந்து வந்துள்ள தனிக்குழு ஏற்று நடத்தும் என்றே தெரிகிறது.

ஆனால், அக்னி ஏவியேஷன் நிறுவனத்தின் அதிகாரியான கேப்டன் அரவிந்த் சர்மா, "எங்களுக்கும் சரியான காரணம் தெரியவில்லை. விமானி தவறுசெய்ததிலிருந்து பருவநிலை மாற்றம் வரை எதுவும் காரணமாக இருக்கலாம். அந்த விமானம் பழைமையானதாக இருந்தாலும் நன்றாய்ப் பறக்கும் தகுதியுடன்தானிருந்தது. விமானம் பழுதடையும் முன் விமானியும் கட்டுப்பாட்டு அறை அதிகாரியும் பேசிக்கொண்டதைக் கேட்டோம். அது சாதாரணமாகத்தானிருந்தது. அதில் விமானி, விமானம் பழுதானதாகவோ அல்லது உதவி கேட்டோ எதுவும் சொல்லவில்லை. இருந்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்!" என்கிறார்.

யார் என்ன நியாயம் சொல்லி என்ன செய்ய? பறித்துக்கொண்ட அழகு தேவதையை காலன் திருப்பித் தரவா போகிறான்?

படங்கள் : ஆகாஷ்
விபத்து படங்கள் உதவி: காலைக்கதிர், பெங்களூர்.

Kumudam.com
Reply


Messages In This Thread
சினிமா சினிமா - by Mathan - 02-29-2004, 11:32 PM
[No subject] - by Mathan - 03-13-2004, 11:45 AM
[No subject] - by Mathan - 03-13-2004, 02:17 PM
[No subject] - by Mathan - 03-19-2004, 09:41 PM
[No subject] - by kuruvikal - 03-20-2004, 11:51 AM
[No subject] - by AJeevan - 03-20-2004, 12:49 PM
[No subject] - by Mathan - 03-21-2004, 01:06 AM
[No subject] - by Mathan - 03-21-2004, 06:39 PM
[No subject] - by Mathan - 03-21-2004, 06:41 PM
[No subject] - by Mathan - 03-21-2004, 06:45 PM
[No subject] - by Mathan - 03-22-2004, 12:08 PM
[No subject] - by Paranee - 03-22-2004, 12:51 PM
[No subject] - by Mathan - 03-22-2004, 01:43 PM
[No subject] - by kuruvikal - 03-22-2004, 06:52 PM
[No subject] - by kuruvikal - 03-22-2004, 07:06 PM
[No subject] - by AJeevan - 03-22-2004, 08:43 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 02:00 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 04:40 PM
[No subject] - by Eelavan - 03-23-2004, 05:04 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 06:46 PM
[No subject] - by Eelavan - 03-24-2004, 05:18 AM
[No subject] - by Mathan - 03-24-2004, 08:29 AM
[No subject] - by AJeevan - 03-24-2004, 10:12 AM
[No subject] - by AJeevan - 03-24-2004, 11:07 AM
[No subject] - by Mathan - 03-26-2004, 02:13 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 03:16 AM
[No subject] - by Mathan - 03-28-2004, 08:44 AM
[No subject] - by Eelavan - 03-29-2004, 02:15 PM
[No subject] - by vallai - 03-29-2004, 03:57 PM
[No subject] - by kuruvikal - 03-29-2004, 04:53 PM
[No subject] - by Mathan - 03-29-2004, 05:35 PM
[No subject] - by Mathan - 04-04-2004, 10:15 AM
[No subject] - by shanmuhi - 04-04-2004, 10:25 PM
[No subject] - by AJeevan - 04-05-2004, 10:44 AM
[No subject] - by AJeevan - 04-05-2004, 11:03 AM
[No subject] - by Mathan - 04-05-2004, 11:21 AM
[No subject] - by Mathan - 04-05-2004, 11:23 AM
[No subject] - by Mathan - 04-05-2004, 11:32 AM
[No subject] - by AJeevan - 04-05-2004, 11:43 AM
[No subject] - by Mathan - 04-05-2004, 11:49 AM
[No subject] - by AJeevan - 04-05-2004, 05:05 PM
[No subject] - by AJeevan - 04-05-2004, 05:29 PM
[No subject] - by AJeevan - 04-05-2004, 05:38 PM
[No subject] - by Mathan - 04-07-2004, 11:24 AM
[No subject] - by Mathan - 04-08-2004, 10:41 PM
[No subject] - by Mathan - 04-14-2004, 02:15 PM
[No subject] - by Mathan - 04-17-2004, 10:53 AM
[No subject] - by Mathan - 04-17-2004, 12:46 PM
[No subject] - by Mathan - 04-20-2004, 08:37 AM
[No subject] - by Mathan - 04-20-2004, 02:00 PM
[No subject] - by Mathan - 04-21-2004, 02:46 AM
[No subject] - by AJeevan - 04-21-2004, 04:34 PM
[No subject] - by AJeevan - 04-22-2004, 10:04 AM
[No subject] - by Paranee - 04-22-2004, 03:00 PM
[No subject] - by vasisutha - 04-23-2004, 08:45 PM
[No subject] - by Mathan - 04-27-2004, 06:36 PM
[No subject] - by Mathan - 04-27-2004, 09:05 PM
[No subject] - by Mathan - 04-28-2004, 06:00 PM
[No subject] - by vasisutha - 04-29-2004, 10:57 AM
[No subject] - by sWEEtmICHe - 05-01-2004, 07:08 AM
[No subject] - by sWEEtmICHe - 05-01-2004, 11:47 AM
[No subject] - by sWEEtmICHe - 05-01-2004, 11:50 AM
[No subject] - by AJeevan - 05-04-2004, 03:33 AM
[No subject] - by Mathan - 05-14-2004, 01:14 AM
[No subject] - by Mathan - 05-14-2004, 01:18 AM
[No subject] - by Mathan - 05-14-2004, 01:21 AM
[No subject] - by Eelavan - 05-14-2004, 05:18 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 04:47 PM
[No subject] - by Eelavan - 05-29-2004, 05:09 PM
[No subject] - by Mathan - 05-30-2004, 06:57 AM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:00 AM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:05 AM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:39 AM
[No subject] - by Mathan - 06-01-2004, 04:31 AM
[No subject] - by Mathan - 06-01-2004, 04:53 AM
[No subject] - by vasisutha - 06-03-2004, 12:21 AM
[No subject] - by Eelavan - 06-03-2004, 08:29 AM
[No subject] - by vasisutha - 06-03-2004, 05:15 PM
[No subject] - by Mathan - 06-04-2004, 01:29 AM
[No subject] - by Eelavan - 06-04-2004, 06:32 AM
[No subject] - by Mathan - 06-04-2004, 08:11 AM
[No subject] - by Mathan - 06-11-2004, 06:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)