04-21-2004, 11:08 PM
kuruvikal Wrote:பெண்களை நாங்கள் தூக்கவும் இல்லை தூற்றவும் இல்லை <b>நாறடிக்கவும் இல்லை</b>... ஏமாத்ததுவும் இல்லை ஏமாறவும் இல்லை...ஆனா சமூகவியல் ஆய்வறிக்கையை வெளியிட்டு <b>BBC நாறடிக்குது</b>....!
முரண்பாடுகள்: BBC நாறடிக்குது என்று சொன்ன அதே கருத்தை, நீங்கள் களத்தில் மீண்டும் அதை இட்டால் அதன் பொருள்தான் என்ன? வீதியில் நாய் மலம் கழித்தது. அது துர்நாற்றம் வீசியது. ஆனால் அந்த மலத்தை வீட்டுக்குள் நீங்கள் கொணந்து வைத்துவிட்டு நான் நாறடிக்கவில்லை நாய்தான் நாறடிக்கிறது என்றால், என்ன சொல்வது?
உண்மையில் BBC தனது ஆய்வறிக்கையை ஒரு சமூகக் கண்ணோட்டத்தோடுதான் பார்த்ததே தவிர, நாறடிக்கவில்லை. அதற்கு மேலும் சுயவெறுப்பை வெளிக்காட்டும் சாயம் பூசி சுயஇன்பம் காண்பதையே இங்கு சுட்டிக்காண்பிக்க முனைகிறேன்.
அடுத்தது, ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் புகைப்பிடிவதற்கு இங்கு முன்வைக்கப்பட்ட உங்கள் காரணம் கண்மூடித்தனமான ஒரு விளக்கம். BBC தனது ஆய்வறிக்கையிலேயே(?) சில விளக்கங்களை முன்வைத்துள்ளது. அதில் இருந்து தெளிவாவது ஆண்மையவாத சமூகத்தின் விளம்பரப் போக்கே தவிர, ஆண்கள் செய்வதால் தாங்களும் செய்யவேண்டும் என்கிற போக்கு அல்ல. ஆண்மையவாத சமூகத்தின் விளம்பர யுக்தியில் பெண்களேயே முதன்மையாகப் பயன்படுத்துவதும், அதை முன்னுதாரணமாக எடுப்பதுமே முக்கிய காரணமாக அறியப்படுகிறது.
சுதந்திரம் என்பது பலவேளைகளில் அநேகமானோரால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை. அதில் பால் வேறுபாட்டை முன்னிறுத்துவது ஆண்மையவாதப் போக்கே தவிர சமூகக் கண்ணோட்டமல்ல. இளைஞர்களைப் பொறுத்தவரையில் சகதோழியிடம் இருந்தோ, தோழனிடம் இருந்தோ, பெற்றோர்களிடம் இருந்தோ பழக்கவழக்கங்கள் உள்வாங்கப்படுகின்றன. ஆண் புகைப்பிடிப்பதால் நாங்கள் புகைப்பிடிக்கிறோம் என்று எந்த இளைஞியும் சொல்வதில்லை. புகைப்பிடிப்பதற்கும், மதுபானம் அருந்துவதற்கும் காரணங்கள் இருபாலாருக்கும் ஒரே அடிப்படைதான்.
"ஒரு பெட்டச்சியே இது செய்யிறாள், நான் செய்யிறதுக்கு என்ன" என்று சொல்லிக்கொள்வது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் ஊறிஉறைந்த சில ஆண்கள். --> இதை என்ன சொல்வது? இது ஆணாதிக்க சமூகக் கொழுப்பு!?
இது சமூகத்தின் ஒரு உதாரணம் தான். இதே மாதிரி நிறைய சுட்டிக்காட்டல்களை முன்வைக்கலாம். சமூகப் பிரச்சினைகளை எப்போதும் தமது சுயவிருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று கவனிக்க வேண்டும். கருத்து வைக்கவேண்டும். சுயவிருப்பு வெறுப்புகளின் பெயரில் ஒரு சமூகத்தைக் காயப்படுத்தினால் அந்தக் காயத்தின் கிருமிகள் அதே சமூகத்தில் அங்கத்துவராக இருக்கும் தன்னையும் ஒருநாள் தொற்றிக்கொள்ளும் என்பதை மனிதர்கள் உணரவேண்டும்!

