04-21-2004, 10:59 PM
ஆண்டாளம்மா.. ஜெயலலிதா
ஜெயலலிதாவை மலடி என்று வர்ணித்து, கருணாநிதி தனது வயிற்றெரிச்சலை அள்ளிக் கொட்டியிருப்பதாக பொதுப் பணித்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெண்கள் மத்தியில் முன்னுதாரணமாகத் திகழ்கிறார் புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா.
எங்கள் அம்மாவை, வராது வந்த மாமணியை, நம்மில் ஒருவராக வாழ்ந்து வரும் காவியத் தலைவியை, என்றும் கருணாநிதி விமர்சித்து, வயிற்றெரிச்சலை வாரிக் கொட்டியுள்ளார்.
நான் திருப்பி அடித்தால் யாரும் தாங்க முடியாது என்று, கைகளைத் தூக்கக் கூட முடியாத, தள்ளாத வயதில், இவர் கொக்கரிக்கிறார் என்றால், இவரது இறுமாப்பை என்னவென்று சொல்வது?
கலியுக ஆண்டாளாக வாழ்ந்து வரும் எங்கள் தலைவியைப் பற்றி ஒன்றும் தெரியாத கருணாநிதி இனியும் அப்படிப் பேசினால், மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார் ஓ.பி.
--------------------------------
பெண்களை இழிவுபடுத்துவது யார்?: கருணாநிதி
எதிர்க்கட்சி தலைவர்களை மரியாதை இல்லாமல் மமதையோடு முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:
நம்முடைய கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு தருகிறார்கள். அதைப் பார்த்து ஆளுங்கட்சி பொறாமையில் ஏதேதோ பேசுகிறார்கள்.
நாம் இப்போது இரண்டு ஆளுங்கட்சிகளை தேர்தலில் சந்திக்கின்றோம். தேர்தலை முன்கூட்டியே நடத்தப்போகிறோம் என்பதைக் கணித்து முன்பே விளம்பர வெளிச்சம் போட்டுக்கொண்டார்கள். அவர்கள் சொல்லுகிறார்கள் இந்தியா ஒளிர்கிறதாம்.
பிரதமர் வாஜ்பாய் அண்மைக்காலமாக ஏதேதோ பேசுகிறார். வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டு எனக்கு பிரதமராக விருப்பம் இல்லை என்கிறார். பிறகு அத்வானிதான் பிரதமர் என்கிறார். கூட்டணி ஆட்சி பிடிக்கவில்லை, பா.ஜ.க மட்டும் தனித்து ஆள வேண்டும் என்று கூறுகிறார்.
பின்னர் அவர் கூறிய கருத்தை அவரே மறுக்கிறார். அப்படி சொல்லவில்லை என்கிறார். அவருக்கே இப்படி குழப்பம் ஏற்பட்டால் மற்றவர்களின் நிலை?
அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கைகளில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். நான் பெண்களை இழிவுபடுத்துகிறேன் என்று கூறியிருக்கிறார். நமது கூட்டங்களில் பெண்கள் அதிகளவில் கூடுவதை தடுப்பதற்காக இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டை கூறி உள்ளார்.
பெண்கள் யாரையும் இழிவாக பேசுகிறவன் கருணாநிதி அல்ல. மாறாக அதைக் கண்டிப்பவன் நான். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் பற்றி தரக்குறைவாக பேசிய முதல்வர் ஜெயலலிதாவை நான் கண்டித்ததால் பெண்களை இழிவுபடுத்துகிறேன் என்று அர்த்தமா?
ராகுல்காந்தியின் கன்னிப்பேச்சைக் கேட்டு நான் உருக்கமுடன் கூறியதை கிண்டல் செய்த ஜெயலலிதாவிற்கு நான் பதில் அளித்து பேசியது, பெண்களை இழிவுபடுத்துவதா?
பெண்களை இழிவுபடுத்துவது யார்? நானா? ஜெயலலிதாவா? கணவர் ராஜீவ்காந்தி மறைவுக்குப் பின்னும் நான் வீழ்ந்தாலும் இந்தியாவில் வீழ்வேனே தவிர வேறு எங்கேயும் செல்ல மாட்டேன் என்று கூறி இங்கேயே வாழ்ந்து வருகிறாரே? அவரை பதிபக்தி இல்லாதவர் என்று கூறுவது இழிவான பேச்சு அல்லவா?
ஜெயக்குமாரின் துணைவியார் என்னுடைய சகோதரியைப் போன்றவர். அவருக்கு பதிபக்தி கிடையாது என்று சொன்னால் சொன்னவர் நாக்கை ஜெயக்குமார் அறுக்க மாட்டாரா? இதையெல்லாம் விட, சோனியாகாந்தியைப் பற்றி பேச ஒரு தகுதி வேண்டாமா?
நான், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், சோனியா காந்தி, மதிமுக பொதுச் செயலாளர் தம்பி வைகோ, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை எல்லாம் மமதையோடு மரியாதை இல்லாமல் ஜெயலலிதா பேசுகிறார். மே 10ம் தேதி வரை தான் அவர் அவ்வாறு பேச முடியும். அதற்கு பிறகு இவ்வாறு பேச முடியுமா என்பதை ஜெயலலிதா எண்ணிப்பார்க்க வேண்டும் என்றார் கருணாநிதி.
ஆற்காடு வீராசாமி கண்டனம்:
இந் நிலையில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கருணாநிதி ராகுல்காந்தியின் கன்னிப்பேச்சைப் பற்றி உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். அது குறித்து ஜெயலலிதா கருணாநிதியை கேலி செய்து அநாகரிகமாகப் பேசியதைத் தொடர்ந்து கருணாநிதி ஜெயலலிதாவை விமர்சனம் செய்திருந்தார்.
அந்த விமர்சனத்தையே தாங்கிக் கொள்ள முடியாத அதிமுகவினர் தன்னுடைய தலைவியை திருப்திபடுத்துவதற்காக கருணாநிதி சொல்லாததையும், பேசாததையும் இட்டுக்கட்டி அறிக்கை என்ற பெயரால் ஒரு பக்கத்திற்கு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
எம்ஜிஆர் உயிரோடு இருக்கும்போதே பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி அவர்களுக்கு ஜெயலலிதா, சேலம் கண்ணன் மூலம் ஒரு கடிதம் அனுப்பி, அந்தக் கடிதத்தில் என்னுடைய வளர்ச்சியை கண்டு பொறடமைப்படுகிறார் என்றும் அவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் தன்னை முதலமைச்சராக ஆக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார்.
எம்ஜிஆர் இறந்தவுடன் அவருடைய மனைவி ஜானகி மோரில் விஷம் கொடுத்து கொன்றுவிட்டார் என்று பழி சுமத்தியவர் தான் ஜெயலலிதா.
இத்தகைய அநாகரிகமான பேச்சுகளுக்கெல்லாம் இலக்கணமாக விளங்கிக்கொண்டிருக்கின்ற ஜெயலலிதாவுக்கு வக்கலத்து வாங்கி அறிக்கை விடுகின்றவர்களின் பரிதாப நிலையைக் கண்டு நாட்டு மக்கள் சிரிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>