Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய நாடாளுமன்றத் தேர்தல்...2004
#2
முதல் கட்ட தேர்தல் 'எக்ஸிட் போல்': பாஜக முன்னிலை

நேற்று முதல் கட்டத் தேர்தல் நடந்த 140 மக்களைத் தொகுதிகளிலும் நடத்தப்பட்ட 'எக்ஸிட் போல்' முடிவுகளின்படி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.

காங்கிரசுக்கு எதிர்பார்த்ததை விட அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிகிறது.

வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் இந்தக் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன.

பிரபல கருத்துக் கணிப்பாளர் பிரணாய் ராயின் என்.டி.டி.வி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏ.சி. நீல்சன் அமைப்பு ஆகியவை நடத்திய எக்ஸிட் போல் கணிப்பின்படி,

தேர்தல் நடந்த 140 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணிக்கு 75 இடங்களும், காங்கிரஸ் கூட்டணக்கு 53 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 12 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகத்தில் பா.ஜ.கவுக்கு பெரும் எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்கவுள்ளன. குறிப்பாக கர்நாடகத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.

அதே நேரத்தில் ஆந்திராவிலும் பிகாரிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஆந்திராவின் ஹைடெக் முதல்வர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் தோல்வி கிடைக்கும் என எக்ஸிட் போல் முடிவுகள் காட்டுகின்றன.

பிகாரில் லாலு பிரசாத் யாதவின் உதவியாலும், ஆந்திராவில் தனி மாநிலம் கோரும் தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதியுடன் கூட்டணி அமைத்ததாலும் காங்கிரசுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இந்த முதல் கட்டத் தேர்தல் முடிவுகள் மற்ற 4 கட்டங்களிலும் தொடர்ந்தால், பா.ஜ.க கூட்டணிக்கு மொத்தம் 260 முதல் 280 இடங்கள் கிடைக்கலாம் என்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 160180 இடங்கள் கிடைக்கலாம் என்றும் பிரணாய் ராய் கூறுகிறார்.

மற்ற கட்சிகளுக்கு 100 இடங்கள் கிடைக்கலாம் என்று தெரிகிறது. 260 இடங்கள் மட்டுமே கிடைத்தால் பா.ஜ.கவுக்கு ஆட்சியமைக்க 12 இடங்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

மற்ற எக்ஸிட் போல் முடிவுகள் விவரம்:

என்.டி.டிவைப் போலவே இந்தியா டுடேயின் ஆஜ் தக் டிவியும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.

அதன்படி 140 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணிக்கு 93 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 44 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 3 இடங்களும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜீ டிவி நடத்திய எக்ஸிட் போலின்படி பா.ஜ.க கூட்டணிக்கு 63 முதல் 78 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 35 முதல் 50 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 16 இடங்களும் கிடைத்துள்ளது.

ஸ்டார் டிவி நடத்திய எக்ஸிட் போலின்படி பா.ஜ.க கூட்டணிக்கு 80 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 53 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 7 இடங்களும் கிடைக்கும்.

சகாரா டிவி நடத்திய எக்ஸிட் போலின்படி பா.ஜ.க கூட்டணிக்கு 82 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 55 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைக்கும்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 04-21-2004, 10:53 PM
[No subject] - by kuruvikal - 04-21-2004, 10:57 PM
[No subject] - by kuruvikal - 04-21-2004, 10:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)