04-21-2004, 09:02 PM
<b>குறுக்குவழிகள்-46</b>
Intel Processor Frequency ID Utility
கம்பியூட்டர்களின் உள்ளே காணப்படும் சிப் (Chip) களில் பெரிதானதுதான் கம்பியூட்டரின் மூளை எனப்படும் CPU (Central Processing Unit) அல்லது Microprocessor எனப்படுவது. Year of make, Model என்பன கார்களுக்கு எப்படியோ அப்படித்தான் இந்த processor க்கும் பெயர் வைக்கப்படுகிறது. Processor என்பது சக்திவாய்ந்த கல்குலேட்டர்தான்:வேறொன்றுமில்லை.
இதன் வேகம்தான் இதன் சக்தி. ஒரு செக்கண்டில் பல இலட்சம் கணக்குகளை இது போடும். இந்த processor ல் இணைக்கப்படிருக்கும் மயிர்க்கனமுள்ள ஒரு Clock Wire எனும் கம்பியில் ஏற்படும் ஒரு மின் துடிப்பை ஒரு cycle என்கிறோம். சூடேறி பழுதாகாமல், ஒரு விநாடியில் அதிக பட்சம் துடிக்கக்கூடிய எண்ணிக்கையே clock speed என்கிறோம். Clock speed ஐ Mega Hertz ல் அளக்கின்றோம். (1 Cycle= 1 Hertz). இந்த அளவு procrssoer உற்பத்தியாகும் தொழிற்சாலையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
1970 ல் வெளிவந்த Intel ன் 8088 என்ற processor ன் வேகம் 4.77 MHz. இதன் பின் 80286, 80386, 80486. Pentium, Pentium pro, Pentium MMX, Pentium I, Pentium II, Pentium III, Pentium IV என பல அளவுகளிலும், பெயர்களிலும் வந்துவிட்டது. அண்மையில் வெளிவந்த Pentium IV என்பதன் வேகம் 1500 MHz ஆகும்.
சரி உங்களிடம் ஒரு 8 வருடம் பழைய கம்பியூட்டர் இருக்கின்றது. அதன் வேகம் என்ன? அதோடு தரப்பட்ட கையேடும் தொலைந்துவிட்டது. Microprocessor ன் மேல் தூசுபடிந்து எழுத்துக்களும் மங்கிவிட்டது. யாது செய்யலாம்? இருக்கவே இருக்கிறது Intel Processor Frequency ID Utility எனப்படும் ஒரு சிறிய புறோகிறாம் (838 KB). கீழே உள்ள் Intel ன் வெப்தளத்திலிருந்து டவுண்லோட்பண்ணி உங்கள் கம்பியூட்டரில் பொருத்தி இயக்கி பார்க்கவும். Processor, System bus இவை இரண்டின் வேகத்தையும் காண்பிக்கும். கம்பியூட்டரை மேம்படுத்ததும்போது புதிதாக Motherboard ல் jumper setting செய்தபின் சரியாக செட்டிங் செய்துள்ளீர்களா எனவும் இதன் மூலம் செக் பண்ணிப்பார்க்கலாம்.
http://support.intel.com/support/processor...b/CS-007623.htm