04-21-2004, 05:23 PM
<span style='color:red'>சகித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
ஜே.வி.பிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையே கடந்த வருட இறுதியில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தேர்தலில் வெற்றிபெற்று முதல் நடவடிக்கையிலேயே மீறப்பட்டுவிட்டதாக அல்லது அதில் குறிப்பிட்டதற்கு மாறான நயவஞ்சக நடவடிக்கையில் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஈடுபட்டு விட்டதாக ஜே.வி.பி குற்றம் சாட்டியிருக்கிறது.
அதாவது நான்கு அமைச்சர்களும் நான்கு பிரதியமைச்சர்களும் தமது கட்சிக்கு வழஙக்கப்படும் எனப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது. அவ்வாறே அமைச்சுக்கள் பிரதி அமைச்சுக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவ்அமைச்சுகளிலிருந்து முக்கியமான பொறுப்புக்கள் நீக்கப்பட்டு அவற்றை தமது ஆட்களுக்கு சந்திரிகா வழங்கிவிட்டதாக ஜே.வி.பி குற்றம் சாட்டியுள்ளது. உதாரணமாக விவசாய, காணி அமைச்சை ஜே.வி.பிக்கு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அதிலிருந்து மகாவலி அபிவிருத்தி நீக்கப்பட்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கிராமிய வங்கிகள் நிதி அமைப்புக்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜே.வி.பி தனக்கு வழங்கப்பட்ட நாக்கு அமைச்சுக்கள் பற்றியும் குறைகூறியுள்ளது.
இதேவேளை பேச்சுக்களின் போது லக்ஸ்மன் கதிர்காமரை பிரதமராக நியமிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்போது மகிந்தராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். பௌத்தர் ஒருவர்தான் பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமானால் அநுரா பண்டாரநாயக்காவை அல்லது மைதிரிபால சிறிசேனவை நியமித்திருக்கலாமே எனக்கூறியிருக்கின்றது.
சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவ்வாறான யுக்தியான காரியங்களைச் செய்ய வல்லவர் என்பது குறித்து இதுவரை காலமும் ஜே.வி.பி.யினர் உணர்ந்துகொள்ளாதது ஆச்சரியம்தான். எனினும் ஜே.வி.பியினருடன் சந்திரிகா முன்னரே எவ்வாறு நடந்துகொண்டதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.
2001 ஆம் ஆண்டு இறுதியில் பொதுசன ஜக்கிய முன்னணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்ட வேளை சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜே.வி.பியுடன் நன்நடத்தை அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான இணக்காப்பாட்டுக்கு வந்தார். இதன்போது ஒப்பந்தம் ஏற்பட்டதிலிருந்து இத்தனை நாட்களில் இன்னஇன்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது என ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதன்படி அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இருபதாக குறைப்பது என ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அதிலும் அதிகமாக ஒரு சில உறுப்பினர்களை சந்திரிகா நியமித்துவிட்டு தன்னைவிட 20 பேர்தான் உள்ளார்கள் என சாதித்துவந்தார்.
இதைவிட முக்கியமான சுயாதீன ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பானதாகும். அதாவது 1994ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொதுசன ஜக்கிய முன்னணி ஜந்து சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதாக கூறியிருந்தது. தேர்தல், பொலிஸ், நிதி, நிர்வாகம், ஊடகம் ஆகிய துறைகளுக்கு சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதாக உறுதியளித்தபோதும் அதன் ஆறு ஆண்டு ஆட்சிக்காலத்தில் அதனைச் செய்யவில்லை.
பின்னர் மேலே கூறப்பட்ட நன்னடத்தை அரசாங்கம் தொடர்பான உடன்பாட்டில் ஊடகத்துறை தவிர்ந்த ஏனையவற்றிற்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கமைய அரசியலமைப்பில் 17ஆவது சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஜ.தே.கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளும் ஆதரவளித்தன.
ஆனால் இன்று வரை இந்த ஆணைக்குழுக்கள் சரிவரச்செயற்பட சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றார். நிறைவேற்று அதிகாரம்கொண்ட சனாதிபதிமுறை நீக்க 1994ல் ஆறுமாத அவகாசத்தை சனாதிபதி சந்திரிகா கோரிய போது அதற்கு ஜே.வி.பி ஆதரவாக இருந்தது. ஆனால் அவரது ஒரு பதவிக்காலம் முடிந்து இரண்டாவது பதவிக்காலத்தில் தந்திரமான முறையில் இருமுறை சத்தியப்பிரமாணம் செய்து பதவிக்காலத்தை நீடித்துள்ள அவர் இப்போது மீண்டும் மாற்றுப்பெயரில் நிறைவேற்று அதிகாரம்கொண்ட பிரதமராகும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
எனவே முன்னரே ஜே.வி.பியை பலதடவைகள் ஏமாற்றியபோதும் தொடர்ந்தும் ஏமாறுவது ஜே.வி.பியின் குற்றமே ஒழிய சந்திரிகாவின் குற்றமல்ல. அடுத்ததாக பிரதமரை நியமித்தவிடயத்தில் ஜே.வி.பி தனத செல்வாக்கு கூடிய பிரதேசம் எனக்கருதும் தென்மாகாணத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவர் பிரதமராவதை விரும்பாததே அவர்கள் மகிந்தராஜபக்சவை பிரதமராக்க விரும்பாததற்கு காரணமாகும். வேறொரு காரணத்துக்காக மகிந்த ராஜபக்சவை பிரதமராக்காது கதிர்காமரை பிரமராக்க சனாதிபதி விரும்பினாலும் சு.க.விற்குள் உள்ள நிலை அதற்கு இடமளிக்கவில்லை.
எவ்வாறாயினும் ஜே.வி.பி சந்திக்கப் போகும் ஏமாற்றம் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை. ஆனால் அவற்றையெல்லாம் சகிக்கவேண்டிய பொறிக்குள் ஜே.வி.பியும் சிக்கிக்கொண்டுள்ளது மட்டும் உண்மை. அதாவது சந்திரிகாவின் ஏமாற்று நடவடிக்கைகளுக்கு உடன்பட்டே ஆகவேண்டிய கட்டாயம் ஜே.வி.பிக்கு உள்ளது. அவ்வாறில்லாது முரண்பட்டு வெளியேறினால் ஆட்சியை இழக்கப்போவது சிறிலங்கா சுதந்திரக்கட்சி மட்டுமல்ல ஜே.வி.பியும்தான்.
எனவே முகத்தை நீட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்வதைத் தவிர சு.க., ஜே.வி.பிக்கு ஆட்சியைத்தொடர வேறுவழியில்லை.</span>
வேலவன்
sooriyan.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>