04-21-2004, 05:11 PM
<span style='color:red'>கருணா சிறீலங்காவிலேயே இருக்கிறார்
கருணா தற்போது சிறீலங்காவிலேயே இருக்கிறார் என்பதை தாங்கள் உறுதிப்படுத்தியதாக ஒரு தகவலகம் செய்தி தெரிவித்துள்ளது.
கருணாவுடனும் அவரது பேச்சாளரான வரதனுடனும் தாம் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்துள்ள மேற்படி தகவலகம் இவர் இருக்கும் இடம்பற்றிய தகவலேதையும் வெளியிடவில்லை.
கருணா குழுவினருக்கும் அரசாங்கத்திற்குமிடையே தொடர்புகள் இருந்ததைத் தெரிவிக்கும் இத் தகவலகத்தின் செய்திக் குறிப்பு, புலிகளின் நடவடிக்கையின் போது சிறீலங்கா தமக்கு ஆதரவாகச் செயற்படாதது பற்றிய கவலையை கருணா கொண்டிருப்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளது.
இது தொடர்பாக இங்குள்ள பத்திரிகையாளர் ஒருவரிடம்; கருத்துக் கேட்ட போது, கருணா பெண் பிரச்சினையால் தான் இந்தளவு சிக்கலிற்குள்ளும் மாட்டிக் கொண்டார் என்பது கிழக்கு மக்களிற்கு ஏற்கனவே தெரியும் என்றும், அதனை மறைப்பதற்காகவே அவர் பிரிவினையைக் கையாண்டார் என்பதை கிழக்கு மக்கள் பலரும் உணர்ந்துள்ளனர் என்பதைக் கிழக்கு மாகாணத்திற்கு தான் அண்மையில் பயணம் செய்தபோது அறியமுடிந்ததாகத் தெரிவித்த அவர்,
பெண் தொடர்பு உட்பட பல இழிவான செயல்களில் கருணா ஈடுபட்டது பற்றி அவர் பிரிவினை பற்றிக் கதைக்க ஆரம்பித்த போதே எங்களிற்குத் தெரியும், ஆனால் பயம் காரணமாக நாங்கள் யாருமே இதைப் பற்றிக் கதைக்கவில்லை என ஒரு கல்விமான் தெரிவித்ததாகவும் மேலும் தெரிவித்தார்.
கருணா தனது மனைவி, பிள்ளைகளுடன் மீள இணைய விரும்பினாலும், அவர்கள் கருணாவை ஏற்பார்கள் என்று அங்குள்ள விசமறிந்தவர்கள் கருதவில்லையென்பதை தான் நேரடியாகவே அறியக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்ததோடு, கருணாவை எந்த வெளிநாடுகளும் ஏற்கும் என்று கொழும்பிலுள்ள இராஐதந்திரிகள் சிலர் கருதவில்லையென்றும் கருணா சிறீலங்காவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க வேண்டும் என்பது சகலரும் அறிந்த விடயமே என்றும் தெரிவித்தார்.
ஆனால், சிறீலங்காவே கருணாவை மறைத்து வைத்திருக்கிறது என்ற உண்மை வெளிவரும் நிலையில் அது சிறீலங்கா-புலிகள் சமாதான முயற்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படும் நிலை காணப்படுவதால், கருணா எங்கோ மறைந்து இருப்பதாகக் காட்டவே அரசு செய்தி நிறுவனங்களினூடாக முயற்சித்து வருகிறது எனவும் ஊகம் தெரிவித்தார்.
இதனொரு கட்டமாகவே கருணா தனக்கு நெருங்கிய சுமார் 100 தளபதிகளின் பாதுகாப்பில் இருப்பதாக செய்தியை வெளியிடும் வகையிலான நிர்ப்பந்தங்களை கருணா சம்பந்தப்பட்டோருக்கு சிறீலங்கா வழங்கி வருவதாகவும், கருணாவிற்குத் தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தி குறிப்பிட்ட சிலருக்கு இலக்கங்களை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால், கருணாவுடன் கிழக்கை விட்டு வெளியேறிச் சென்றவர்களில் ஏழு பேரைத் தவிர மிகுதியானவர்கள் விடுதலைப்புலிகளிடமே திரும்பி, தாங்கள் சிறீலங்கா இராணுவப் பாதுகாப்பிலேயே தப்பிச் சென்றோம் என்ற தகவலையும், யார் யார் இதில் நேரடியாக சிறீலங்காவின் சார்பில் பங்குபற்றினர் என்ற தகவலையும் தெரிவித்து நிற்கும் இந்த நேரத்தில் கருணாவும், அவரது ஏழு சகாக்களும் தங்களின் பாதுகாப்பில் இல்லையென்பதைக் காட்ட முனையும் சிறீலங்கா அரசின் இவ்வாறான செயற்பாடுகள் நகைப்பிற்கிடமான முடிவுகளையே இறுதியில் தரும் என்பதை உறுதியாக நம்பலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு கருணா தங்களின் பாதுகாப்பில் உள்ளார் என்பது அறியப்பட்டு, அது தங்களிற்குச் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் கருணாவையும் அவரது சகாக்களையும் கொலை செய்வது கூட சிறீலங்கா இதிலிருந்து தப்புவதற்கான வழியாகக் கூட அமைந்தாலும் அமையலாம் என்றும் கருத்துத் தெரிவித்தார்.
கருணா தங்களிடம் இல்லையென்பதைக் காட்டுவதற்கான நடவடிக்கையிலும், கருணா தோற்று ஓடவில்லை என்பது போன்ற செய்திகளைப் பரப்பும் நடவடிக்கையிலும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களைப் பரப்பும் பத்திரிகையாளர்களையே சிறீலங்கா அரசு பயன்படுத்தி வருகிறது என்பதை தற்போது வெளிப்படையாகக் காணக்கூடியதாகவுள்ளது எனவும்,
கருணாவின் மீதான நடவடிக்கையானது பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சிறீலங்கா அரசின் செய்திகளைப் பரப்பும் பலரையும் வதந்திகளையும், கற்பனைகளையும் செய்தியாக்க நிர்ப்பந்தித்துள்ளது எனவும், இவர்கள் வெளியிடும் செய்திகளின் தன்மை பற்றிய சந்தேகங்களை சமாதானத்தில் அக்கறையுடைய சில இராஐதந்திரிகள் கொண்டிருப்பதை தன்னால் உணரக்கூடியதாகவுள்ளதாகத் தெரிவித்த மேற்படி ஆய்வாளர், இவ்வாறான பத்திரிகையாளர்களின் செய்திகளைப் பிரதானப்படுத்தி சிறீலங்காவின் முக்கிய ஊடகங்கள் வெளியிட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார். </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>