04-21-2004, 08:31 AM
இளைஞன் Wrote:வணக்கம்...[align=center:ee2e8603ad]
சில பேர் தன் மனைவி விவாகரத்து (அல்லது ஓடுதல், விலகல்) பெற்றதால், அவள் கூடாதவள், அவளைப் போல் தான் மற்றைய பெண்களும் என்று தூற்றுவார்கள். மனைவி கணவனை விட்டு விவாகரத்துப் பெற்றுவிட்டாள் (அல்லது ஓடிவிட்டாள்?) என்ற கவலையில் சில ஆண்கள் குடிக்கிறார்கள். சில பேர் தற்கொலை செய்கிறார்கள்.
அதைப் போல பெண்களுக்கும் கவலை இருக்குந்தானே? கணவன் குடிச்சுப் போட்டு அடிக்கிறார், அல்லது இன்னொரு பெண்ணுடன் தகாத தொடர்பு வைத்திருக்கிறார் என்று நிறைய கவலைகள் இருக்குந்தானே?
சில ஆண்கள் சந்தோசத்துக்காதக குடிக்கிறார்கள். பெண்ணும் மனிதப்பிறவிதானே? அவளுக்கும் துக்கம் சந்தோசம் இருக்குந்தானே!? குருவி என்பதால் கூட்டுக்குள்ள பிடிச்சு வச்சு நீ கூட்டுக்குள்ளதான் இருக்கோணும் என்று சொன்னால் எந்தக் குருவி ஏற்றுக்கொள்ளும்!?
!!!
[/align:ee2e8603ad]<span style='font-size:22pt;line-height:100%'>நறுக்காக நாலு வார்த்தை சொல்லியிருக்கிறீர்கள் இளைஞன்.மகிழ்ச்சி..........
களத்துக்கு வருவோரையே பருந்து என நினைத்து புதிதாக வரும் கோழிக் குஞ்சுகளைத் துரத்தி சந்தோசப்படும் சில மனநோயாளிகள் தமக்கு கிடைத்தவளை இதே போல் துன்புறுத்தி கோட்டை விட்டு விட்டு அத்தனை பெண்களையும் அதே நோக்கில் அவதூறு கூறுவதில் வியப்பில்லை.
ஒவ்வொரு ஜீவராசிக்கும் உயிரும் உணர்வுகளும் இருக்கிறது என்று உணர முடியுமானால் பகுத்தறிவு என்று ஒருவருக்கு இருக்குமானால் பெண்களது உரிமைகளை மறுப்பதற்கு எவருக்கும் பிரச்சனை இருக்காது.
ஒருவரை அடிமைப்படுத்த நினைப்பதைவிட, ஒரு புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள முனைவதே மகிழ்வான வாழ்வுக்கு அடித்தாளம்.................</span>
![[Image: votes-women.jpg]](http://images.google.ch/images?q=tbn:CUyxYN9gRSwJ:www.ancestorsmagazine.co.uk/graphics/votes-women.jpg)
[size=14]ajeevan

