Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா சினிமா
#51
'கண்ணீரில் நடமாடும் சுவாசிக்கும் பிணம்"
-அம்மா! நலமா? பட விமர்சனம்-

<img src='http://www.tamilnaatham.com/special/naatham/amma.jpg' border='0' alt='user posted image'>

அந்நிய நாட்டுப் படைப்புகளை பார்த்து, கேட்டு லயித்துப்போய்விட்டது எம் சமூகம்.

எதற்கெடுத்தாலும் இந்தியப் படைப்புகளையே உதாரணம் காட்டி வந்த நம்மவர்களுக்கு சாட்டையடியாக நம் நாட்டிலும் நல்ல பல படைப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

இலங்கைக் கலைஞர்கள் என்றாலே முகம் சுழிக்கும் பலரின் மத்தியில், ஊடகங்கள் பல நம் கலைஞர்களை புறந்தள்ளும் இச்சூழ்நிலையில் எமது ஈழமண்ணிலிருந்து உருவான தரமான படைப்புத்தான் ~அம்மா நலமா|.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் கலைப்பிரிவு அண்மையில் வெளியிட்டு வைத்த முழு நீளத் திரைப்படமான ~அம்மா நலமா| ஈழத்துக் கலைஞர்களின் கலைத்திறனை உலகெங்கும் எதிரொலிக்கச் செய்திருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உணர்வுகளையும், போராளிகளின் உள்ளத்து உணர்வுகளையும் பட்டைதீட்டிக் காட்டுவனவாக அமைந்திருக்கிறது இத்திரைப்படம்.

வடக்கில் வாழும் தமிழ் குடும்பங்களில் அநேகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளிலேயே வாழ்கின்றனர். இவர்களின் பெற்றோர் மட்டும் வன்னி மண்ணிலும், யாழ். மண்ணிலும் உயிர்வாழ்கின்றனர்.

பேருக்கு மட்டும் சொல்லிக் கொள்வர் ~எனக்கென்னப்பா... என் பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கினம்... அவங்க காசு அனுப்பிவினம்... நாங்கள் சந்தோஷமாக இருக்கம்..." என்று.

ஆனால் ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளின் பிரிவை எண்ணி நித்தம் நித்தம் கண்ணீர் வடிப்பது எத்தனை உள்ளங்களுக்குத் தெரியும்?

இப்படிச் சொல்லும் தாய்மார்கள் மத்தியில் தம்பிள்ளைகளை போர் முனைக்கு அனுப்பி மார்தட்டி என் பிள்ளை மாவீரன் என்று சொல்லும் தாய்மாரும் ஈழத்தில் இல்லாமலில்லை.

அப்படிப்பட்ட ஒரு வீரத்தாயின் உள்ளக் குமுறல்தான் ~அம்மா நலமா| ஒரு நடுத்தரக் குடும்பம். இரண்டு மகன், ஒரு மகள், பொதுவாக எல்லா கணவன் மார் போலவே ஒரு கணவன்.
மகளின் கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார். மகளுக்கும் விசா கிடைத்து வெளிநாடு செல்லத் தயாராகிறாள். இதே சமயம் இரண்டு மகன்மாரும் ஈழமண்ணை மீட்டெடுக்கப்போராடும் போராளிகள்.

தந்தை ஊதாரித்தனமானவர். மகளின் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்படக் கூடியவர். மகள் வெளிநாடு செல்லப்போகிறாள் என்பதற்காக கூழ் காய்ச்ச வேண்டும் என்று சொல்லி புறப்படுகிறார்.

அவருடைய நண்பர்கள் சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவருக்கும் வீட்டிற்கு விருந்திற்கு வரும்படி அழைக்கிறார். ஊரவர்களுடன் அப்படியொரு நெருக்கமான உறவை வைத்திருப்பவர்தான் தந்தை.

வீதியின் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த தன் நண்பரை விருந்துக்கு அழைத்தபோது எதிர்பாராமல் பின்னால் வந்த காரில் மோதுண்டு இறந்து போகின்றார்.

அவ்வளவு நேரமும் குதூகலமாக நகர்ந்து கொண்டிருந்த கதையில் சோகக்கோடு இழையோடுகிறது.

போராளிகளான அண்ணனுக்கும் தம்பிக்கும் தகவல் அனுப்பப்பட்டபோதிலும் தம்பியினால் மரணவீட்டிலே கலந்து கொள்ள முடியவில்லை.

விடுதலைப் போராளி என்பவன் சொந்த பந்தங்களின் இன்ப துன்பங்களைவிட தாய் மண்ணை நேசிப்பவனாகத்தான் இருக்க வேண்டும். இந்தத் தத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக இந்தக் காட்சி அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு குழுவுக்குத் தலைமைதாங்கி போர்க்களத்தில் இருக்கும் அப்போராளியின் மனோநிலையை அப்படியே அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குநர் கேசவராஐன்.

தந்தையின் மரணச் செய்தி கேள்விப்பட்டும் போக முடியாத நிலையில் மண்ணின் நலன்காக்க போராடும் போராளியின் மனோநிலையை பிரதிபலிக்கும் பாடல்களும் அருமையாக உள்ளன. இவ்விடத்தில் பாடலாசிரியர் வீராவிற்கு சபாஷ் போடவேண்டும்.

'அம்மா நலமா - நாம் அலையும்
மண்ணே நலமா
வேப்பமரணிம் நலமா
என் வீட்டுக் கிணறே நலமா"

என்ற பாடல் வரிகள் படம் பார்ப்பவர்களின் காதுகளில் எப்பொழுதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும் என்பது திண்ணம்.

சந்தோஷமான குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. மகள் வெளிநாடு செல்கிறாள். மூத்த மகனும் மீண்டும் போர்க்களம் போகின்றான்.

தாய் தனிமரமாகின்றாள். பெரியவீடு, வசதிகள் இருந்தும் உதவிக்கென்று ஆளில்லாமல் வாடிப் போகின்றாள்.

எல்லாப் பிள்ளைகளையும் வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு ஊரில் தனிமரமாக இருக்கும் அண்ணனும் நோயினால் வாடுகின்றார். இந்நிலையில் பக்கத்துவீட்டுக்காரர் உதவி செய்வதாகச் சொல்லி தாயைப் பொறுப்பெடுக்கின்றனர்.

இந்தக் கதை ஒரு புறம் போய்க்கொண்டிருக்க மறுபுறத்தில் காதல் கதையொன்றும் நகர்கின்றது.

கால் ஊனமான ஒருவனுக்கும் பக்கத்து வீட்டுக்காரரின் தங்கைக்கும் காதல் மலர்கிறது. இந்தக் காதலை ஊனத்தை சாட்டாகக் காட்டி எதிர்க்கின்றான் தமையன். இந்நிலையில் காதலர்கள் பெரிதும் தவித்துப் போகின்றனர்.

தனிமரமாகவிருக்கும் தாய் ஊனமான காதலனுக்கு ஆறுதல் சொல்கின்றாள். ஆனால் மறுநாள் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அண்ணன், தாய் கூறித்தான் அவர்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று கூறி அவருக்கு உதவி செய்வதை தடுத்து விடுகின்றான்.

பட்டகாலிலேயே படும் என்பார்களே அதேபோல் மீண்டும் மீண்டும் சோதனைகள் அவளை வாட்டி எடுக்கின்றது. உதவிக்கு இருந்த சிறுமியையும் தகப்பன் தடுத்து விடுகின்றான்.

ஆனாலும் குழந்தைப் பாசத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாதல்லவா? தனது வீட்டிற்குத் தெரியாமல் அந்தத் தாய்க்கு கிணற்றில் தண்ணீர் அள்ளிக்கொடுப்பதும், ப10iஐக்கு ப10ப்பறித்துக் கொடுப்பதும் பார்ப்பவர் நெஞ்சை நெகிழ வைக்கின்றது.

ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும், எவ்வளவுதான் பணம், செல்வம் இருந்தாலும் தனிமை என்னும் கொடுமையை எவராலும் தாங்கிக் கொள்ள முடியாது. அந்தக் கொடுமையை இந்தத் தாய் அனுபவிக்கின்றாள். திரைப்படத்தினைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் நெஞ்சினில் ஈட்டி பாய்வதுபோல் ஒவ்வொரு காட்சியும் அற்புதமாய் அமைந்திருக்கின்றன.

கதை நகர்வில் தொய்வில்லாமல் பின்னப்பட்டிருக்கின்றது. இடையிடையே சண்டைக் காட்சிகளும், நகைச்சுவைக் காட்சிகளும் யதார்த்தமாக அமைந்திருக்கின்றன.

டயஸின் ஒளிப்பதிவு அற்புதமாக அமைந்திருக்கிறது. டயஸ்தான் இத்திரைப்படத்தின் துணை இயக்குநரும் கூட. ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து படமாக்கியிருக்கிறார் டயஸ்.

தனிமையிலே தவித்துக் கொண்டிருக்கும் தாய் பாடுகின்ற பாடல்வரிகள் அற்புதமாக அமைந்திருக்கின்றது. இந்தப் பாடல்களை நிரோஐன், இசையரசன், பஞ்சமூர்த்தி, குமரன் ஆகியோர் பாடியிருக்கின்றனர்.

'கண்ணீரின் மேல் கோபம் கொண்டு
கண்களை வெறுக்க முடியுமா?
கண்ணீருக்கு காரணம் இந்த
கண்கள் இல்லைத் தெரியுமா?
தாய்மை இங்கே
தனிமையாகிப்போச்சு - இந்த
தூய்மையான மனசுக்கென்ன ஆச்சு
நந்தவனப் ப10க்கள் கூட்டம்
இவளின் உறவுத் தோட்டம்
நாலு திசையும் சிதறிப்போச்சு
போரில் வந்த சோகம்..."

என்று தொடர்கிறது அந்தப் பாடல். இந்தப் பாடலில் மற்றுமொருவரி 'கண்ணீரில் நடமாடும் சுவாசிக்கும் பிணம்" என்பதாகும். இந்தவரி அந்தத் தாயின் முழு மனதின் ஆதங்கத்தையும் ஒன்று திரட்டி எடுத்துக்காட்டியிருக்கிறது.

அம்மா நலமா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்திற்கும் ~இசைப்பிரியன்| இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையினை இசைத்தென்றல் வழங்கியிருக்கிறார்.

அதே சமயம் யுத்த முனையில் இருக்கும் இளைய மகனின் குழுவில் ஒரு போராளி காயப்படுகின்றான். அவன் தன் தாய்க்காக ஒவ்வொரு சித்திரமாக வரைந்து பொக்கிஷப்படுத்திக் கொள்கிறான். தன் தாய் எங்கிருக்கிறாள் என்று தெரியாமல் தவிக்கும் அந்தமகனின் நிலையை தத்ரூபமாய் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

அந்தப் போராளி வீரச்சாவடையும் தறுவாயில் தன் தாய்க்காக பாதுகாத்த சுவட்டினை கொடுத்துவிட்டு எப்படியாவது தன் தாயிடம் கொடுக்கும்படி கூறுகின்றான்.

இளையமகனும் நோய் வாய்ப்பட்டிருக்கும் சமயத்தில் அந்தத் தாய் மகனைத் தேடி வருகிறாள். அச்சமயத்தில் மகனின் அந்த சுவட்டினைக் கொடுத்து வீரச்சாவடைந்த விடயத்தையும் சொல்கிறான். அப்போது அந்தத்தாய் ~எனக்கு நீயும் மகன் தானப்பா| என்று கூறி தான் கொண்டுவந்த பொருட்களை கொடுத்துவிட்டுச் செல்லும் காட்சி மனதை உருக்குவதாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளிலும் பல நுணுக்கங்களைக் கையாண்டிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளரும், இயக்குநரும்.

தனிமையிலே வாடும் தாயின் நிலைகண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் ஒரு போராளி மகனை தாயுடன் இருப்பதற்கு அனுமதிக்கிறது. தாயின் விருப்பத்திற்கிணங்க யாராவது ஒரு மகனை தன்னுடன் வைத்துக் கொள்ளும்படி தலைமைப்பீடம் அறிவிக்கிறது. தன்னுடைய மகன்மார் வரப்போகிறார்கள் என்ற சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் துடிக்கிறாள் தாய்.

அதேசமயம் யுத்த முனையிலே இராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையே பாரிய யுத்தம் மூழ்கிறது.

யுத்தத்தின் முடிவு என்னாகிறது? மகன்மார் தாயுடன் இணைகின்றார்களா? என்பது படத்தின் க்ளைமாக்ஸ்.

கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம் அனைத்தையுமே பொறுப்பேற்றிருக்கிறார். ந.கேசவராஐன்.

அம்மா நலமா திரைப்படத்தின் நடிகர்களாக தங்கேஸ்வரி, சின்னவிழிகள் செல்வம், வீரா, சிந்து, மேரி, ராணி, nஐஸ்மின், நிருபன், செபரட்ணம், நிசாந்தன், தவநீதன், கணேஸ்மாமா போன்றோர் நடித்திருக்கின்றனர்.

நம் நாட்டுக் கலைஞர்களின் முழுப்பங்களிப்புடன் உருவாகியிருக்கும் முழுநீளத் திரைப்படம் உலகளாவிய ரீதியில் பலராலும் பாராட்டப்படிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நல்ல படைப்புகள் இங்கில்லை என்று தவமிருந்தவர்களுக்கு தீனிகிடைத்ததுபோல் இப்படம் அமைந்திருக்கிறது. கட்டாயமாக ஒவ்வொருவரும் இத்திரைப்படத்தினைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இதனுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும்.

-ஏ.பி.மதன்


நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (18.04.04)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
சினிமா சினிமா - by Mathan - 02-29-2004, 11:32 PM
[No subject] - by Mathan - 03-13-2004, 11:45 AM
[No subject] - by Mathan - 03-13-2004, 02:17 PM
[No subject] - by Mathan - 03-19-2004, 09:41 PM
[No subject] - by kuruvikal - 03-20-2004, 11:51 AM
[No subject] - by AJeevan - 03-20-2004, 12:49 PM
[No subject] - by Mathan - 03-21-2004, 01:06 AM
[No subject] - by Mathan - 03-21-2004, 06:39 PM
[No subject] - by Mathan - 03-21-2004, 06:41 PM
[No subject] - by Mathan - 03-21-2004, 06:45 PM
[No subject] - by Mathan - 03-22-2004, 12:08 PM
[No subject] - by Paranee - 03-22-2004, 12:51 PM
[No subject] - by Mathan - 03-22-2004, 01:43 PM
[No subject] - by kuruvikal - 03-22-2004, 06:52 PM
[No subject] - by kuruvikal - 03-22-2004, 07:06 PM
[No subject] - by AJeevan - 03-22-2004, 08:43 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 02:00 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 04:40 PM
[No subject] - by Eelavan - 03-23-2004, 05:04 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 06:46 PM
[No subject] - by Eelavan - 03-24-2004, 05:18 AM
[No subject] - by Mathan - 03-24-2004, 08:29 AM
[No subject] - by AJeevan - 03-24-2004, 10:12 AM
[No subject] - by AJeevan - 03-24-2004, 11:07 AM
[No subject] - by Mathan - 03-26-2004, 02:13 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 03:16 AM
[No subject] - by Mathan - 03-28-2004, 08:44 AM
[No subject] - by Eelavan - 03-29-2004, 02:15 PM
[No subject] - by vallai - 03-29-2004, 03:57 PM
[No subject] - by kuruvikal - 03-29-2004, 04:53 PM
[No subject] - by Mathan - 03-29-2004, 05:35 PM
[No subject] - by Mathan - 04-04-2004, 10:15 AM
[No subject] - by shanmuhi - 04-04-2004, 10:25 PM
[No subject] - by AJeevan - 04-05-2004, 10:44 AM
[No subject] - by AJeevan - 04-05-2004, 11:03 AM
[No subject] - by Mathan - 04-05-2004, 11:21 AM
[No subject] - by Mathan - 04-05-2004, 11:23 AM
[No subject] - by Mathan - 04-05-2004, 11:32 AM
[No subject] - by AJeevan - 04-05-2004, 11:43 AM
[No subject] - by Mathan - 04-05-2004, 11:49 AM
[No subject] - by AJeevan - 04-05-2004, 05:05 PM
[No subject] - by AJeevan - 04-05-2004, 05:29 PM
[No subject] - by AJeevan - 04-05-2004, 05:38 PM
[No subject] - by Mathan - 04-07-2004, 11:24 AM
[No subject] - by Mathan - 04-08-2004, 10:41 PM
[No subject] - by Mathan - 04-14-2004, 02:15 PM
[No subject] - by Mathan - 04-17-2004, 10:53 AM
[No subject] - by Mathan - 04-17-2004, 12:46 PM
[No subject] - by Mathan - 04-20-2004, 08:37 AM
[No subject] - by Mathan - 04-20-2004, 02:00 PM
[No subject] - by Mathan - 04-21-2004, 02:46 AM
[No subject] - by AJeevan - 04-21-2004, 04:34 PM
[No subject] - by AJeevan - 04-22-2004, 10:04 AM
[No subject] - by Paranee - 04-22-2004, 03:00 PM
[No subject] - by vasisutha - 04-23-2004, 08:45 PM
[No subject] - by Mathan - 04-27-2004, 06:36 PM
[No subject] - by Mathan - 04-27-2004, 09:05 PM
[No subject] - by Mathan - 04-28-2004, 06:00 PM
[No subject] - by vasisutha - 04-29-2004, 10:57 AM
[No subject] - by sWEEtmICHe - 05-01-2004, 07:08 AM
[No subject] - by sWEEtmICHe - 05-01-2004, 11:47 AM
[No subject] - by sWEEtmICHe - 05-01-2004, 11:50 AM
[No subject] - by AJeevan - 05-04-2004, 03:33 AM
[No subject] - by Mathan - 05-14-2004, 01:14 AM
[No subject] - by Mathan - 05-14-2004, 01:18 AM
[No subject] - by Mathan - 05-14-2004, 01:21 AM
[No subject] - by Eelavan - 05-14-2004, 05:18 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 04:47 PM
[No subject] - by Eelavan - 05-29-2004, 05:09 PM
[No subject] - by Mathan - 05-30-2004, 06:57 AM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:00 AM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:05 AM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:39 AM
[No subject] - by Mathan - 06-01-2004, 04:31 AM
[No subject] - by Mathan - 06-01-2004, 04:53 AM
[No subject] - by vasisutha - 06-03-2004, 12:21 AM
[No subject] - by Eelavan - 06-03-2004, 08:29 AM
[No subject] - by vasisutha - 06-03-2004, 05:15 PM
[No subject] - by Mathan - 06-04-2004, 01:29 AM
[No subject] - by Eelavan - 06-04-2004, 06:32 AM
[No subject] - by Mathan - 06-04-2004, 08:11 AM
[No subject] - by Mathan - 06-11-2004, 06:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)