04-21-2004, 01:51 AM
குறுகிய பிரதேசவாதங்கள் இனி எம்மக்களிடையே தலைது}க்காது!
மட்டு-அம்பாறை மாவட்ட போராளிகளும், பொதுமக்களும் வழங்கிய பூரண ஆதரவினால் அங்கு ஏற்பட்ட சிக்கலை இலகுவாக வெல்ல முடிந்தது. இவ்வாறு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
நேற்றுக்காலை கிளிநொச் சியிலுள்ள அரசில்துறை நடுவகப் பணிகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இக்கலந்துரையாடலில் புலிகளின் தரப்பில் தேசியத் தலைவர் அவர்களுடன், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான், தளபதி கேணல் சொர்ணம், தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி, மகளிர் படையணித் தளபதிகளான கேணல் விதுஷா, கேணல் துர்க்கா, மற்றும் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன், மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி ஆகியோருடன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன் உட்பட ஐந்து மாவட்டங்களின் அரசியல்துறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். சுமார் 2 மணிநேரம் இக் கலந்துரையாடல் நடைபெற்றது. அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துரை வழங்கினார். அவர் தனது உரையில் தெரிவித்ததாவது, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் புலிகள்தான் என்பதை உலகிற்கு உணர்த்தியமைக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் எனக் குறிப்பிட்டார். அவர் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தாலும், அர்;பணிப்பாலும் நாம் இந்த பெறும் வெற்றியை பெற்றிருக்கிறோம். எம்முள் இருந்த சிறு சிறு முரண்பாடுகள் எல்லாம் மறந்து நாம் எல்லோரும் ஒன்றுபட்டு ஒரு பெரும் சக்தியாக நிற்பதையிட்டு நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். நீண்ட காலமாகவே நாம் எமது ஒற்றுமைக் குறைப்பாட்டாலே எதிரிக்கு பல சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளோம் அண்மையில் கூட எமது போராட்டத்தில் இருள் சூழ்ந்தது. ஆனால் அதே வேகத்தில் அது கலைந்ததையும் நீங்கள் அறிவீர்கள். மட்டு. அம்பாறை போராளிகளும் அங்குள்ள மக்களுமே இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்து தீர்வுகாண இணைந்ததோடு எமக்கு பூரண ஆதரவையும் தந்தனர். இதனாலேயே மிகவும் இலகுவாக இந்தச் சிக்கலை வெல்ல முடிந்தது. இதில் கிடைத்த வெற்றிஇனி வரும் காலங்களில் சாதி,மாத. பிரதேசவாம் போன்ற குறிய வாதங்கள் எதுவும் எம் மக்களிடையே இருக்கப் போவதில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. எனவும் குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில் பொது நலனுக்காக விட்டுக்கொடுக்கப் பழக வேண்டும். இதற்கு நாம் துயிலும் இல்லங்களில் இருக்கும் மாவீரர்களின் கல்லறைகளை பார்ப்போமேயானால் புரிந்துகொள்ள முடியும். தமக்கென்று எதையும் பாராது மண்ணிற்காகதமது உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். இவர்கள் போன்றே நாமும் எதனையும் எதிர்பாராமல் பொது நலனுக்காக எமது கடமையைச் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இறுதியாக எப்பொழுதும் எமது பிரச்சினைக்கு எமது பலம் தான் தீர்வைப் பெற்றுத் தரும் எனவும் குறிப்பிட்டு உங்கள் பணிகளை திறம்படச் செய்ய மாவீரர்கள் துணை நிற்பார்கள் என கூறி தமது உரையை நிறைவுசெய்தார். இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்து;களை வழங்கினர். தேசியத் தலைவரின் ஒரே அணியாக நின்று மண்ணினதும் மக்களதும் விடுதலைக்காக உழைப்போம் எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் அலை

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>