04-21-2004, 01:45 AM
<b>தமிழரசுக் கட்சியின் தீர்மானம்யுத்த பீதியை ஏற்படுத்துகின்றது
''ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அறிக்கை </b>
""இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு மேற்கொண்டதாகக் கூறப்படும் தீர்மானம் தமிழ் பேசும் மக்களை மீண்டும் யுத்தசகதிக்குள் தள்ளிவிடுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது''
""இவ்வாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) தான் விடுத்துள்ள ஊடகங்களுக்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அது அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
கடந்த 16 ஆம் திகதி கொழும்பில் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சந்தித்துப் பேசிய தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஜனநாயக நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் புலிகளிடம் வடக்கு,கிழக்கு மாகாண தன்னாட்சி உரிமை கையளிக்கப்பட உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இவர்கள் வடக்கு,கிழக்கு மாகாணத்திலிருந்து இலங்கையின் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருப்பது ஐக்கிய இலங்கைக்குள் சமாதான வாழ்வை காண்பதற்காகவே தவிர பிளவுபட்டுப் பிரிந்துபோவதற்கு அல்ல.
தமிழரசுக் கட்சியின் சார்பாக வடக்கு,கிழக்கு மாகாணத்திலிருந்து இருபது உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். எனினும் மாற்றுக் கட்சிகளிலிருந்தும் பல உறுப்பினர்கள் இந்த பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை உறுப்பினர்களாகத் தெரிவு செய்த மக்களின் தலைவிதியை புலிகள் தன்னிச்சையாகத் தீர்மானிப்பதற்கு இன ஐக்கியத்தையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் விரும்பும் எவரும் இடமளிக்க முடியாது.
இத்தகைய நிலையில் அரசாங்கம் அமைச்சரவை நியமனத்தின் ஊடாக நேரடியாக மக்களுடன் தொடர்பு கொள்வதை இந் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டிக்கிறார்கள். இதன் உள்நோக்கம் குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் சிந்திக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்துவதுபோல ஓர் இதழுக்கு கஜேந்திரன் பொன்னம்பலம் பேட்டி வழங்கியுள்ளார். இதில் இடைக்கால நிர்வாகத்தை புலிகளிடம் வழங்கத் தயாராக அரசு இல்லையெனின் பிரிவினை பற்றிச்சிந்திக்க வேண்டிவரும் எனக் கூறியிருக்கிறார். இவர்கள் புலிகளின் ஆளுகைக்குள் உட்பட்டு வாழ எந்தளவிற்கு தயாராக இருக்கின்றனர் என்பது ஒரு புறம் புலிகளை மீண்டும் யுத்தத்திற்கு தள்ளிவிட இவர்கள் முயற்சி எடுக்கின்றனர் போலிருப்பது மறுபுறம் இது சமாதான சகவாழ்வை வலியுறுத்தும் மக்களின் விருப்பத்திற்கு எதிரான செயலாகவே இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>