04-20-2004, 10:14 PM
வணக்கம்...
சில பேர் தன் மனைவி விவாகரத்து (அல்லது ஓடுதல், விலகல்) பெற்றதால், அவள் கூடாதவள், அவளைப் போல் தான் மற்றைய பெண்களும் என்று தூற்றுவார்கள். மனைவி கணவனை விட்டு விவாகரத்துப் பெற்றுவிட்டாள் (அல்லது ஓடிவிட்டாள்?) என்ற கவலையில் சில ஆண்கள் குடிக்கிறார்கள். சில பேர் தற்கொலை செய்கிறார்கள்.
அதைப் போல பெண்களுக்கும் கவலை இருக்குந்தானே? கணவன் குடிச்சுப் போட்டு அடிக்கிறார், அல்லது இன்னொரு பெண்ணுடன் தகாத தொடர்பு வைத்திருக்கிறார் என்று நிறைய கவலைகள் இருக்குந்தானே?
சில ஆண்கள் சந்தோசத்துக்காதக குடிக்கிறார்கள். பெண்ணும் மனிதப்பிறவிதானே? அவளுக்கும் துக்கம் சந்தோசம் இருக்குந்தானே!? குருவி என்பதால் கூட்டுக்குள்ள பிடிச்சு வச்சு நீ கூட்டுக்குள்ளதான் இருக்கோணும் என்று சொன்னால் எந்தக் குருவி ஏற்றுக்கொள்ளும்!? மன்னிக்கவும்! குருவிக்கு பகுத்தறிவு இல்லை என்பதைக் கொஞ்சம் மறந்து போட்டன். எண்டாலும் ஒரு உதாரணத்துக்கு சொன்னான்.
ஒரு ஆண் செய்வதைப் பார்த்து இன்னொரு ஆண் செய்கிறான். ஒரு சமூகம் கலாச்சாரத்தைப் பார்த்து சமூகம் செய்கிறது. ஒரு நாடு அணுகுண்டு தயாரிப்பதைப் பார்த்து இன்னொரு நாடு செய்கிறது. அவன் செய்யிறான், நான் செய்யக்கூடாதா? அவர்கள் செய்கிறார்கள் நாங்கள் செய்யக்கூடாதா? அந்நாடு செய்கிறது நம்நாடு செய்யக்கூடாதா? என்ற கேள்விகள்தானே இவற்றிற்கு அடித்தளம்!? அப்படியிருக்கும்போது பெண்ணும் அப்படி எண்ணுகிறாளோ என்னவோ!
அப்பா சிகரெட் பத்துறார் என்றால் அதைக் கவனிக்கும் பிள்ளையும் "அப்பா பத்துறார் தானே நான் பத்தினால் என்ன" என்று தான் கேட்கும். அதற்கு அம்மா "சின்னப்பிள்ளைகள் பத்தக்கூடாது" என்று பதில் சொன்னால், அவன் வளர்ந்ததும் "நான் வளர்ந்திட்டன்" சிகரெட் பத்தலாம் என்று சிகரட் பத்த வெளிக்கிடுவான்/ள். இது இயல்பு!!!