04-20-2004, 03:45 PM
இடைக்கால தன்னாட்சி முறை அங்கீகரிக்கப்படாது விட்டால் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இராஐpனாமா செய்வார்கள்: சிவநாதன் கிஷோர்
ஜ வவுனியாவிலிருந்து சுகுணன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 20 ஏப்பிரல் 2004, 22:01 ஈழம் ஸ
தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள இடைக்கால தன்னாட்சி முறை அங்கீகரிக்கப்படாது விட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களது பதவிகளை இராஐpனாமா செய்வார்கள் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கூறியுள்ளார்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தன்னாட்சிக் கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கு சர்வதேச சமூகத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னாட்சிக் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்து விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தோடு தாம் இணைந்து செயற்படப் போவதாகவும் தமிழீழத் தேசியத் தலைவரிடம் கூறியதாக கிஷோர் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை தமிழீழத் தேசியத் தலைவர் தனித்தனியே சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட நிலைமை குறித்து, தேர்தல் நோக்கம் காரணமாகவே உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தலைவர் தன்னிடம் தெரிவித்ததாகவும், அவர் கூறினார்.
இதேவேளை விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஆயுத hPதியாக மிகவும் பலம் வாய்ந்த நிலையில் இருந்த போதும், தமது அரசியல் பலத்தை சர்வதேச சமூகத்திற்கும், தென்னிலங்கைக்கும் காட்டுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு விடுதலைப் புலிகள் ஆதரவு அளித்ததாக தமிழீழத் தேசியத் தலைவர் தம்மிடம் தெரிவித்ததாகவும், கிஷோர் கூறினார்.
இதேவேளை, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 உறுப்பினர்களும் மக்களின் நலனுக்காக மக்களோடு மக்களாக இருந்து செயற்பட வேண்டும் என்று தமிழீழத் தேசியத் தலைவர் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>