04-20-2004, 03:13 PM
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/mps_meet_01_24874_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/mps_meet_07_24898_435.jpg' border='0' alt='user posted image'>
(Images from tamilnet)
<span style='color:red'>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தேசியத் தலைவருடன் சந்திப்பு
நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வெற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வழங்கப்பட்ட மாபெரும் அங்கீகாரம் என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கூறியுள்ளார்.
இதனை மேலும் வலுவடையச் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியுடன் செயற்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவகப் பணியகத்தில், இன்று சந்தித்து உரையாடிய போதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட கள நிலவரங்கள் கடுமையாக இருக்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் போராளிகளினதும், பொதுமக்களினதும் ஆதரவுடன் பாரிய சேதங்கள் இன்றி இலகுவாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் விடுதலைப் புலிகளின் தலைவர் இச்சந்திப்பின்போது கருத்துக் கூறினார்.
போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிராமப்பற்று, பிரதேசப்பற்று, நாட்டுப்பற்று என்பன ஏற்படும் போதே விடுதலைப்பற்று அதிகரிப்பதாகச் சுட்டிக்காட்டிய தேசியத் தலைவர், பிரதேசவாத வெறி என்கிற நோக்கில் கருணா செயற்பட்டதாலேயே அநாவசிய, எதிர்பாராத சூழ்நிலைகள் தோன்றியதாகத் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது, மட்டக்களப்பில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் மட்டக்களப்பு மக்களோ அரசியல்வாதிகளோ காரணமாக இருந்தால், அதற்காக தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக திரு.பாக்கியசெல்வம் அரியேந்திரன், தேசியத் தலைவரைக் கேட்டுக்கொண்டார். அத்துடன், கிழக்கில் இடம்பெற்ற மீளக்கைப்பற்றும் சமரின்போது இருபகுதியிலும் உயிர்நீத்த போராளிகள் அனைவரையும் மாவீரர்களாக அங்கீகரிக்கும்படியும் அவர் தேசியத் தலைவரிடம் பரிந்துரைத்தார். கருணா பக்கத்தில் தற்காலிகமாக செயற்பட்டாலும், தேசியத்தலைவரின் கீழ் செயற்படவே அவர்களை அவர்களது பெற்றோர் அனுப்பி வைத்ததனால், அவர்களது அறியாமையை மன்னித்து, அவர்களுக்கும் மாவீரர் பட்டம் வழங்கி ஏற்றுக்கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், ஈ.கௌசல்யன், கேணல் பானு, கேணல் துர்க்கா, கேணல் விதுசா, பி.நடேசன், எஸ்.தமிழேந்தி உட்பட மாவட்டப் பொறுப்பாளர்களும் முக்கிய அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர். </span>
நன்றி புதினம்...!
----------------
[url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11785][shadow=red:1bb2b12651]For more and Clear Pictures...Click here and vist..[/shadow:1bb2b12651]

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>