Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய நாடாளுமன்றத் தேர்தல்...2004
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40058000/jpg/_40058633_voting_203body_bbc.jpg' border='0' alt='user posted image'>

<b>முதல் கட்ட வாக்குப் பதிவு மும்முரம் வன்முறைக்கு 12 பேர் பலி</b>

நாட்டின் 14வது மக்களவைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதுவரை நடந்த தேர்தல் வன்முறைகளில் 6 துணை ராணுவப் படை வீரர்கள், தேர்தல் அதிகாரி, ஒரு நக்ஸலைட், லாலு கட்சியின் தொண்டர்கள் இருவர் உள்பட மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மொத்தமுள்ள 534 மக்களவைத் தொகுதிகளில் இன்று 140 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 13 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப் பதிவு நடக்கிறது.

ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் இன்று சட்டப் பேரவைகளுக்கான முதல் கட்டத் தேர்தலும் நடக்கிறது. பகல் 2 மணி வரை அஸ்ஸாமில் 42 சதவீதமும், கர்நாடகத்தில் 40 சதவீத வாக்குகளும், ஆந்திராவில் 35 சதவீத வாக்குகளும், சட்டீஸ்கரில் 40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

குஜராத்தில் மிக மோசமாக மதியம் 2 மணி வரை 23 சதவீத வாக்குகளே பதிவாயின.

இன்று காலை சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நான்கு இடங்களில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை உடைத்துவிட்டுச் சென்றனர்.

இங்கு நக்சல்கள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 4 துணை ராணுவப் படையினர் காயமடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்குச் சாவடியைத் தாக்கி அதிகாரிகளை விரட்டிய நக்சல்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு நக்சலைட் கொல்லப்பட்டார். ராஞ்சியில் தேர்தல் அதிகாரி ஒருவர் கிரனைட் குண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.

அதே போல பிகாரில் மத்திய ரயில்வே அமைச்சர் போட்டியிடும் குர்சாகிரி மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு தொடங்கியவுடன் ஒரு வாக்குச் சாவடியின் வெளியே குண்டு வெடித்தது. இதையடுத்து அங்கு கலவரம் வெடிக்க, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார்.

மேலும் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தொண்டர்கள் இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாமில் வாக்குப் பதிவு படு விறுவுறுப்பாக நடந்து வருகிறது. காலை 10 மணிக்குள் அங்கு 20 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் வாக்குச் சாவடிகளின் மீது தீவிரவாதிகள் நடத்திய கிரனைட் குண்டு தாக்குதலில் இரு வீரர்கள் பலியாயினர். தீவிரவாதிகள் வைத்த கண்ணி வெடியில் இருந்து காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஒமர் பரூக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அதே போல மிசோரமிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதுவரை மொத்தம் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகத்தில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டருக்கு கத்திக் குத்து விழுந்தது. மணிப்பூரில் ஒரு வாக்குச் சாவடி அதிகாரி கடத்திச் செல்லப்பட்டார்.

இன்று குஜராத், மகாராஷ்டிரத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

ஆந்திராவில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் இன்று 21 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. அதே போல 147 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

கர்நாடகத்தில் உள்ள மொத்தம் 28 தொகுதிகளில் இன்று 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 120 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடக்கிறது.

பிகார், ஒரிஸ்ஸா, சட்டீஸ்கரில் தலா 11 மக்களவைத் தொகுதிகளிலும் அஸ்ஸாம். ஜார்க்கண்ட் மாநிலங்களில் தலா 6 தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடக்கிறது.

காஷ்மீர், மேகாலயாவில் 2 தொகுதிகளிலும் தாதர், டையூ தாமன், அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்கள்ல் உள்ள தலா ஒரு தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடக்கிறது.

வாக்குப் பதிவு நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

காஷ்மீர் மற்றும் அஸ்ஸாமில் 316 கம்பெனிகள் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 20,000 போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிகாரில் மட்டும் 6,400 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதே போல கர்நாடகத்தில் 5,000 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்பதால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39866000/jpg/_39866316_machine.jpg' border='0' alt='user posted image'>

மாலை 5 மணி வரை இந்த வாக்குப் பதிவு நடக்கும். சுமார் 17.5 கோடி பேர் இன்று வாக்களிக்க தகுதி பெற்றவர்களாவர். இந்த முறை முழுக்க, முழுக்க மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலமே ஓட்டுப் பதிவு நடக்கிறது.

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40056000/jpg/_40056815_vend203.jpg' border='0' alt='user posted image'>

[size=9]Our thanks to thatstamil and bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இந்திய நாடாளுமன்றத் த - by kuruvikal - 04-20-2004, 12:02 PM
[No subject] - by kuruvikal - 04-21-2004, 10:53 PM
[No subject] - by kuruvikal - 04-21-2004, 10:57 PM
[No subject] - by kuruvikal - 04-21-2004, 10:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)