04-20-2004, 11:51 AM
<span style='color:red'>அன்று இருந்த நிலைப்பாட்டிலேயே இன்றும் இந்திய இருக்கின்றது: சி.எழிலன்
[size=16]இந்திய அரசுக்கு எதிராக இரண்டு அம்ச கோரிக்கையினை முன்வைத்து அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து தனது உயிரைத் தியாகம் செய்தார். அன்று இந்திய அரசு எந்த நிலைப்பாட்டில் இருந்ததோ அதே நிலைப்பாட்டில் தான் இன்றும் இந்திய அரசாங்கம் இருக்கின்றது.
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று நடைபெற்ற அன்னை பூபதியின் நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்ட வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இன்று இந்தியா சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்தியா தனது நிலைபாட்டிலிருந்து மாறினால் தான் முடியும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் கொடுக்கக்கூடாது என்றும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என்ற நிலைபாட்டில் உள்ள இந்தியாவால் இது எவ்வாறு சாத்தியமாகும்.
நாங்கள் இந்தியாவை விரோதமாகப் பார்க்கவில்லை இந்தியர்களை விரோதமாக பார்க்கவில்லை இந்தியா தான் அவ்வாறு பார்க்கின்றது இந்த நிலை மாற வேண்டும். இந்தியாவுக்கு நாங்கள் நேசக்கரம் நீட்டியுள்ளோம் என்று அவர் தனதுரையில் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு, வவுனியா மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவையின் தலைவர் எஸ்.என்.ஐP.நாதன் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிஷோர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பெருமளவில் கலந்துகொண்டனர்.
ஆரம்பத்தில் பொதுச்சுடரினை முக்கியஸ்தர்களும், ஈகைச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தகப்பனாரும் ஏற்றினர். படத்திற்கான மாலையினை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரியும், கிளிநொச்சி மாவட்ட மாணவர் அமைப்பின் பொறுப்பாளர்களான நளன், கௌரி ஆகியோரும் அணிவித்தனர் </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>