04-20-2004, 11:38 AM
<span style='color:red'>தமது பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப் போவதில்லையென ஜே.வி.பி. தெரிவிப்பு.
[size=9]ஐ.பி.சி தமிழ் செவ்வாய்க்கிழமை, 20 ஏப்பிரல் 2004, </span>
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் தோன்றியுள்ள தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளப் போவதில்லையென ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
சிறிலங்கா ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமக்கு உறுதியளித்த அமைச்சுக்களில் காணப்படும் குறைபாடுகளை நீக்குவதற்காகவே தாம் ஐனாதிபதியுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருவதாகவும் ஜே.வி.பி.யினர் தெரிவித்துள்ளார்கள்.
அமைச்சுப் பொறுப்புக்கள் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள நிலைப்பாடுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அக்கட்சியின் குரல்தரவல்ல அதிகாரி ஒருவர்,அமைச்;சுப் பதவிகளின் பின்னால் அலையும் அவசியம் ஜே.வி.பி.க்குக் கிடையாது எனக் கூறியுள்ளார்.
இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது மக்கள் தமக்கு அதிகளவிலான ஆதரவினை வழங்கியிருப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு நன்றிக்கடனாக தமக்கு கிடைத்துள்ள குறைந்தளவிலான அமைச்சுப் பொறுப்புக்களின் ஊடாக, மக்களிற்கு சேவை செய்யவே தாம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் மகாவலி அபிவிருத்தி அமைச்சு விவசாய அமைச்சிலிருந்து பிரிக்கப்பட்டமை போன்ற சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையே ஜே.வி.பி விரும்புவதாகவும் அவர் தெரிவித்;துள்ளார்.
இந்நிலையில் புதிய நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னரே ஜே.வி.பி.யின் அமைச்சர்களை பதவியேற்க வைக்கும் முயற்சியாக ஐனாதிபதியின் உயர்மட்டக் குழுவினர் நேற்றும் ஜே.வி.பி யுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடடிருந்தனர்.
ஆனால் தமக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்புக்களில் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்படும் வரை தாம் பதவியேற்கப் போவதில்லையெனவும் ஜே.வி.பி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>