04-19-2004, 09:17 AM
யாழ்/yarl Wrote:தேசிய முன்னனி பாராளமன்ற உறுப்பினர் ஒருவர் சுய விருப்பின் பெயரில் விலகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
(முழுமையான செய்திகள் இன்னமும் கிடைக்கவில்லை)
மட்டு. மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான கிங்ஸ்லி இராஜநாயகம் இராஜிநாமா
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கிங்ஸ்லி இராஜநாயகம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக இராஜிநாமாக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 38 633 வாக்குகளைப் பெற்றுள்ள தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமாச் செய்வதாக தெரிவித்து அதற்கான கடிதத்தை நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதேநேரம், இவரது இராஜிநாமா தொடர்பாக அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது நாட்டி ன் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டும் சுயவிருப்பின் பேரிலும் இராஜிநாமாச் செய்துள்ளதாக குடும்பத்தினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதேவேளை, இராஜிநாமாச் செய்துள்ள கிங்ஸ்லி இராஜநாயகத்தின் இடத்திற்கு தமிழ் அலை பத்திரிகையின் பணிப்பாளராகவிருந்து இராஜிநாமாச் செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் நியமிக்கப்படலாமென்றும் அங்கிருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மற்றொரு பெண் பாராளுமன்ற உறுப்பினரான செல்வி.க.தங்கேஸ்வரியும் இராஜிநாமாச் செய்துள்ளதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் வெளிவந்தன. ஆனால், அவரிடம் கேட்ட போது அவர் இதனை மறுத்திருக்கிறார்.
நாளை செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளுடன் நடைபெறும் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக அழைப்புக் கிடைத்துள்ளதாகவும், தான் வன்னிக்குச் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை கிழக்கில் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எவரையும் தாம் இராஜிநாமாச் செய்யுமாறு கோரவில்லையென்று தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா நேற்று தினக்குரலுக்குத் தெரிவித்தார்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

