04-19-2004, 09:15 AM
புலிகளைப் பிரிக்கும் முயற்சியில் ஜனாதிபதிக்குப் படுதோல்வி!
ஆப்பிழுத்ந குரங்கின் நிலையில் அவர் என்று ஹக்கீம் வர்ணனை
போர்க்களத்தில் மட்டுமன்றி இப்போது அரசியல் களத்திலும் பலம் பெற்றி ருக்கும் விடுதலைப் புலிகளைப் பிரித்துவைத்து அதன்மூலம் குளிர்காய முனைந்தார் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. அந்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது. அதனால், அவர் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இருந்து தவிக்கிறார் என்றார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்ச ருமான ரவூப் ஹக்கீம்.
புத்தளம் மஜிதுல்ஹீதா பள்ளி வாசல் மைதானத்தில் இடம்பெற்ற வடமேல் மாகாணசபையின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியா கக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரவ10ப் ஹக்கீம் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐ. தே.முன்னணியின் சின்னத்தில் புத் தளம் மாவட்டத்தில் போட்டியிடும் எஸ்.ஏ.எஹியா, எஸ்.எச்.எம்.நியாஸ், எம்.ராதாகிரு~;ணன் ஆகியோரை ஆதரித்து இக்கூட்டம் கடந்த வெள் ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு புத்தளம் நகரசபை யின் முன்னாள் தலைவர் ஏ.எம்.எச். ஹ{சைன் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு முன்பதாக ரவ10ப் ஹக்கீம் மற்றும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மு.காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் கே.ஏ.பாயிஸ் ஆகியோருக்குப் புத்தளம் வாழ் மக் களால் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திறந்த ஜீப் வண்டியில் சுமார் 11 கிலோமீற்றர் து}ரமான புத்தளம் நகர வீதிகளில் மோட்டார் பவனியும் இடம்பெற்றது.
கூட்டத்தில் உரையாற்றிய ரவ10ப் ஹக்கீம் மேலும் கூறியதாவது:-
அறுதிப் பெரும்பான்மையற்ற நிலையில் ஆட்சி செய்யும் ஜனாதிபதி யின் அரசுக்கு நாம் முண்டுகொடுத்து உதவுவோம் என்று அரசுத் தரப்பினர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்; பாவம், ஏமாறப் போகிறார்கள்.
ஆட்சியமைத்தவுடன் அவசர அவ சரமாகப் புதிய அரசமைப்பைக் கொண்டுவர ஜனாதிபதி முயற்சி செய் கின்றார். இரண்டு முறைகளுக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது என் பதை உணர்ந்த அவர் இதனை அவச ரமாக மேற்கொள்ளவிருக்கின்றார்.
தேர்தல் சட்டங்களை மாற்றுவதன் மூலம் சிறுபான்மை இன மக்களுக்கு அவர் சாவுமணி அடிக்கப்பார்க்கின் றார். அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்தி அதன்மூலம் புதிய அரசி யல் யாப்பினைக் கொண்டுவருவதை முஸ்லிம்காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கின்றது. இதற்கு நாம் ஆத ரவு வழங்கமாட்டோம்.
முஸ்லிம் காங்கிரஸின் ஒருசில முக்கிய உறுப்பினர்களைத் தன் வசம் இழுத்துக்கொண்ட ஜனாதிபதி, அதனை விடுதலைப் புலிகளிடமும் பயன்படுத்த முயன்று இன்று அது நடக்காததால் அவர் ஆப்பிழுத்த குரங்கு போன்று திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமாதான முயற்சிகளை முன்னெ டுத்துச் செல்வதாகக் கூறிய ஜனாதி பதி இன்று அது பற்றி எதுவும் பேச மறுக்கின்றார். எந்த வகையில் அவர் சமாதானத்தைக் கொண்டுவரப் போகின் றார் என்பது கேள்விக்குறியாகவே உள் ளது.
முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி எனக் கருதப்படும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகள் குறையவில்லை. மாறாக, அதிகரித்துள்ளன என்பதைப் பெரு மையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
தற்போது இடம்பெறவுள்ள வட மேல் மாகாண சபைத் தேர்தல் அலட் சியப் படுத்தப்படக்கூடிய ஒரு தேர் தல் அல்ல. குருநாகல் மாவட்டத் தில் மரச்சின்னத்திலும், புத்தளம் மாவட்டத்தில் ஐ.தே.முன்னணியுடன் இணைந்தும் போட்டி போடுகின்றோம். அங்கு ஆட்சியை அமைப்பது எமது நோக்கமல்ல. எமது கட்சி உறுப்பி னர்களின் எண்ணிக்கையை அதிக ரித்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது குறிக்கோள் - இப்படி ஹக்கீம் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஏ. பாயிஸ், வடமேல் மாகாணசபை வேட் பாளர்களான எஸ்.ஏ.ஏஹியா, எஸ். எச்.எம்.நியாஸ், எம்.ராதா கிரு~;ணன், பத்திரிகையாளர் சுகுமார், சட்டத் தரணி எம்.பி.இப்தீகார் முஹம்மது, பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட் டத்தில் போட்டியிட்ட ராஜாப்டீன் முன் னாள் மாகாணசபை உறுப்பினர் டீ. எம்.இஸ்மாயில் ஆகியோரும் உரை யாற்றினார்கள்.
உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>