04-19-2004, 09:09 AM
இந்திய படையின் நித்திகைக்குள முற்றுகையை உடைத்தெறிந்த பிரபாகரன் - 'றோ'வுக்கு ஏற்பட்ட அவமானம்
தலைவர் பிரபாகரனின் மனஉறுதியையும் திடமிடும் திறனையும், போர் உத்திகளின் சிறப்பையும் சரியாகக் கணிக்கத் தெரியாதோர் மட்டுமே கருணாவின் விலகலால் அல்லது பிளவால் விடுதலைப்புலிகளின் பலம் பலவீனமடையும் என்று கூறுவர். பிரபாகரனின் மனஉறுதிக்கும் - போர் உத்திக்கும் ஒரேயொரு சிறந்த உதாரணம் மட்டும் போதுமானது என்று நான் நினைக்கிறேன்.
1988ல் இந்தியப் படைகளுடனான மோதலின்போது வன்னியின் அடர்ந்த காட்டுப்பிரதேசமான நித்திகைக்குளத்தில் தலைவர் பிரபாகரனதும் சில நூறு கெரில்லாப் புலிப் போராளிகளும் சுமர் இருபதினாயிரம் போர் வீரர்களைக் கொண்ட இந்திய அமைதிப்படையினரால் மூன்று அடுக்கு வலைச் சுற்றிவளைப்பில் சிக்கியிருந்தவேளை இந்தியச் செய்தி அமைதிப்படைத்தளபதி மூலம் அப்போதைய இந்தியப் பிரதமரான ராஜீவ்காந்திக்கு உடனடியாக வான் அலை மூலம் அனுப்பப்டுகிறது.
அடுத்தகணம்!..... அகில இந்திய இராணுவ கடல் ஆகாப்படைகளின் தளபதிகளுக்கும் இச்செய்தி கிடைக்கிறது. முற்றுகையை மேலும் இறுக்குமாறும் பிரபாகரனை தப்பிவிடாது பார்த்துக் கொள்ளுமாறும் ஈழ-வன்னிக்களத்திற்கு செய்தி காற்றில் பறந்துவந்து சேர்கின்றது. முப்படைத்தளபதிகள் யாவரும் தத்தமது படைகளின் தளபதிகளுடன் வான் அலைமூலம் திட்டங்களை மேலும் கூர்மையாக வகுத்துச்செயல்படத் தொடங்கினர். இதன்மூலம் மேலதிகமாக மன்னார் -வவுனியா கிளிநொச்சிப் பிரதேசங்களிலிருந்து 10000 படையினர் நித்திகைக்குளத்தை நோக்கி விரைந்தனர்.
இருபதுக்கு மேற்பட்ட வான் ஊர்திகள், பதினைந்துக்கு மேற்பட்ட குண்டுவீச்சு விமானங்கள். சுமார் ஜந்து வேவு விமானங்கள். முல்லைத்தீவு-திருமலை கடல் எல்லையை காவல் செய்தவாறு சுமார் எட்டுப்போர்க்கப்பல்கள்- இருபதுக்கு மேற்பட்ட அதிநவீன தாக்குதல் விசைப்படகுகள் (தாக்குதலுக்கு தயார் நிலையில்) நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இவற்றைவிட 1000 மராத்திய அதிரடிப்படையினரும் 1000 கூர்க்கா அதிவிசேட அதிரடிப் படையினரும் அச்சுற்றிவளைப்புப் பிரதேசத்துக்கு விரைந்து அனுப்பப்பட்டனர்.
இச்செய்தி 'றோ' RAW வுக்கும் தெரிவிக்கப்படுகிறது. பிரபாகரனை உயிருடனோ, சடலமாகவோ, பிடித்துவிடவேண்டுமென்ற அவா எப்போதுமே இந்திய அமைதிப்படையை விட 'றோ'வுக்கு அதிகம் உண்டு. ஏன் தெரியுமா? 1987ல் 'றோ'வின் பின்பலத்துடன் ராஜீவ் -ஜே ஆரால் சமர்ப்பிக்கப்பட்ட சமரசத்திட்டத்தை 'டெல்லி' ஹோட்டல் ஒன்றில் வைத்து நிராகரித்தவர் பிரபாகரன்.
இது ராஜீவுக்கு ஏற்பட்ட தோல்லி என்பதைவிட 'றோ'வுக்கு ஏற்பட்ட அவமானம் என்று கூறுவது மிகவும் பொருத்தமானது. கிட்டத்தட்ட ஒரு கைதியின் நிலையில்தான் பிரபாகரன் அன்று டெல்லி ஹோட்டலில் வைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு 'றோ' வற்புறுத்தியது. பின்புற அழுத்தங்களும் - துப்பாக்கிகளும் பலமாக இருந்த சூழலில் மிகத்துணிவுடன் அவ்வொப்பந்தத்தில் கையெழுத்துப்போட மறுத்தமை பிரபாகரனின் துணிச்சலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
தலைவர் பிரபாகரன் டெல்லி ஹோட்டலில் காவிலில் வைத்திருப்பதைக் கண்டித்து ஈழமக்கள் எழுச்சிப்போராட்டத்தில் உடனடியாகக் குதித்தனர். சகல இந்திய அமைதிப்படை முகாம்களின் முன்பும் வீதியில் வரும் இந்திய அமைதிப்படையின் டாங்கிகள் - வாகனங்கள் முன்பும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டுவந்து அமர்ந்து மறியல் போராட்டம் செய்யத்தொடங்கினர்.
யாழ்.கோட்டை இராணுவ முகாமின் முன்பாக ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. அதில் கவிஞர் காசி ஆனந்தன், லோறன்ஸ் திலகர், தியாகி திலீபன் உட்பட பலர் சிறப்புரையாற்றினர். தலைவர் பிரபாகரனை உடனடியாக ஹோட்டல் காவலில் இருந்து விடுவித்து ஈழத்துக்கு அனுப்பி வைக்குமாறு பேச்சாளர்கள் மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பேசினார். அன்று... தியாகி திலீபன் பேசும்போது......
'தலைவர் பிரபாகரன் ஈழத்தமிழர்களின் மட்டுமல்ல உலகத்தமிழர்களின் இணையற்ற தலைவர் அவரைப் போல் ஓர் அற்புதமான வீரரும் சிந்தனைத்திறனும் - செயலாற்றலும் நிறைந்த ஒரு தலைவரை உலகத்தமினம் இதுவரை கண்டதில்லை. அப்படிப்பட்ட ஒரு தலைவரை டெல்லி ஹோட்டலில் அடைத்துவைத்து அழுத்தங்களைப் பிரயோகிப்பதால், உப்புச்சப்பற்ற அந்த ஒப்பந்தத்தில் பிரபாகரன் பயந்து, கையெழுத்து போடுவார் என்று இந்திய அரசும் அதன் பிரதமர் ராஜீவ்காந்தியம் -றோவும் நினைத்தால் அது நிச்சயம் நடைபெறப்போவதில்லை.
தலைவர் தன்னுயிரை கொடுப்பாரே தவிர ஈழத்தமிழரின் நலனுக்கு கேடுவிளைவிக்கும் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போடமாட்டார்.....
என்று மிக உணர்ச்சி வசமாகப் பேசியபோது அலை, அலையாக மக்கள் எழுந்து ஆர்ப்பரித்து கைதட்டி அதை வரவேற்றதை என்றும் மறக்கமுடியாது. (இனி நித்திக்குளம் முற்றுகைக்கு வரும்வோம்)
தலைவர் பிரபாகரனைப் பிடிப்பதற்காக போடப்பட்ட எல்லா முற்றுகைகளிலும் நித்திக்குளம் முற்றுகைதான் மிகப்பெரிய முற்றுகை. கடல்-தரை - ஆகாப்படைகள் இணைந்து நடத்திய முக்கிய முற்றுகை அது. முற்றுகைச் செய்தி 'றோ'வுக்கு அறிவிக்கப்பட்டதும் 'ஓ... பிரபாகரன் தொலைந்தார். இனி ஈழப்போராட்டம் முடிந்துவிடும்" என்று நினைத்த றோவின் முக்கிய அதிகாரிகள் சிலர் உடனடியாக டெல்லியிலிருந்து சென்னை நோக்கிப் பறந்துசென்றனர்.
சென்னை திருவான்மியூரில் வீட்டுக்காவலில் இருந்த முன்னாள் யாழ். மாவட்டத்தளபதி கேணல் கிட்டுவை 'றோ"வும் கியூ Q அமைப்பின் சில அதிகாரிகளும் நள்ளிரவில் சென்று சந்தித்தனர்.
'உங்கள் தலைவர் நித்திக்குளத்தில் மூன்று வலைப்பின்னல் முற்றுகைகுள் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறார். அவர் சில ஆயுதங்களை மட்டும் பத்திரிகையாரள் முன்பாக எம்மிடம் ஒப்படைந்துவிட்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகக் கையெழுத்துப்போடுவதாக இருந்ததால் எமது படையினர் உடனடியாக முற்றுகையை நீக்கிவிட்டார்கள். இல்லையேல் 200தொன்களுக்கு மேல் வெடிப்பொருட்களை நிரப்பிய பொம்பர்களும், ஹெலிகொப்டர்களும் -முப்பதினாயிரம் படையினரும் அவரையும் - அவரைக்காக்கும் புலிகளையும் நித்திக்குளக் காட்டையும் பதினைந்து நிமிடங்களில் அழித்து சாம்பராக்கிவிடுவார்கள்.
பின்னர் பிரபாகரனின் உடலைக்கூட உங்களால் பார்க்கமுடியாது. நாங்கள் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் நீங்களே அவருடன் பேசிச் சந்தேகத்தைத் தீர்ந்துக்கொள்ளுங்கள்" என்று கூறினர். கிட்டு இதைக்கேட்டு அதிர்ந்துவிட்டார். உடனே வான் அலை மூலம் பிரபாகரனுடன் தொடர் கொண்டார் றோவும்-கியூவும் கூறியதை அப்படியே பிரபாகரனிடம் ஒப்புவித்தார். அதற்கு பிரபாகரன் என்ன சொன்னார் தெரியுமா?
'சரணடைவதோ ஆயுதங்களை ஒப்படைப்பதோ அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதோ என்ற பேச்சுக்கே இடமில்லை. இயக்கத்தில் வீரமரணமடைந்த ஒவ்வொரு வீரனும் தனது உயிரைக்கொடுத்து வளர்த்த போராட்டம் இது. இதை ஒரே நொடியில் விலைபேசி விற்க எனக்கு உரிமை இல்லை. என்னால் முடிந்தால் முற்றுகையை உடைத்தெறிந்து வெளியில் வருவேன்.
....சிலவேளை இந்த முயற்சியில் நான் இறந்தால் உங்களுக்குள் ஒரு தலைவரை தெரிவு செய்து போராட்டத்தை தொடர்ந்து நடத்துங்கள்... ஓவர்" கிட்டுவின் பதிலுக்குக்கூடக் காத்திராமல் வான் அலை தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
பிரபாகரனின் முடிவு 'றோ'வுக்கும் கியூவுக்கும் அறிவிக்கப்படுகிறது. 'றோ' மூலம் ராஜீவ்காந்திக்கும் - இந்தியப்படைக்கும் தளபதிகளுக்கும் இலங்கை அமைதிப்படைத் தளபதிகளுக்கும் செய்தி உடனடியாகப் பறந்து செல்கிறது.
அன்று விடியற்காலை.... ! நான்கு மணி இருக்கும். குண்டுவீச்சு விமானங்கள் குண்டு மழைபொழிய கடற்படைக்கப்பல்கள் பீரங்கி குண்டுகளை கிரிக்கெட் பந்துகளைப்போல் விரைவாக வீச- இந்தியப்படை சிப்பாய்கள். காட்டின் நடுவே ஆயுதபாணிகளாக முன்னேறத் தொடங்கினர். அந்தோ!..முன்னேறியயோரில் பலர் 'ஆ....ஊ..." அம்மா! என்று அலறியபடி நிலத்தில் துடிதுடித்தவாறு விழத்தொடங்கினர்.
புலிகளின் ஜொனி கண்ணிவெடியிலும் கிளைமோர் வெடிகளிலும் சிக்கி கால்களை இழந்தவர்களையும் உயிரிழிந்தவர்களையும் ஏற்றிக்கொண்டு வான் ஊர்திகள் அடிக்கடி பலாலி முகாமை நோக்கிப் பறந்த வண்ணமிருந்தன.
கத்தியை எடுத்தால் இரத்தம் காணாமல் வைக்கமாட்டார்கள் என்ற வைராக்கியம் கொண்ட கூர்க்காப் படையினர் நித்திகைக்குளத்தின் காடுகளில் உள்ள கறையான் புற்றுகளின் அருகே இரத்தம் காணாத கத்திகளுடன் துடிதுடித்துச் செத்துக்கொண்டிருந்தார்கள்.
காடு! ஆம்! அது யுத்தகளமாகிவிட்டது. நித்திகைக்குளத்துக் காட்டின் மரங்கள் செடிகள் கொடிகள் ஒவ்வொன்றுமே இந்திய அமைதிப்படையினருக்குப் புலிகளாகத்தெரிந்தனர். கண்ணிவெடிகள் அங்கே புதைக்கப்பட்டிருக்கவில்லை. விதைக்கப்பட்டிருந்தன. பாரதயுத்தமே பார்த்திருக்கமுடியாத யுத்தத்தின் சத்தம் அங்கே மொத்தமாக வந்து காதுகளை அடைந்தன.
புலிகளின் வீரர்கள் ஒரு புதிய அர்ச்சுணனை இந்த ஈழத்துக் கீதையில் பார்த்த வரலாறு அந்த நித்திகைக்குளத்தில் தான் நடந்தேறியது.
ஆம்; அந்த முற்றுகையிலிருந்து பிரபாகரனும் வீரர்களும் வெற்றிகரமாகத் தப்பினர். வரலாறு தனது பொன் ஏட்டில் ஒருவீர அத்தியாயத்தின் நினைவை மௌனமாகவே குறித்துக்கொண்டது.! தொடர்ந்து நடத்த யுத்தங்களும் ஊரடங்குச்சட்டங்களும் இரண்டு வருடங்களுக்குமேல் நீடித்த இந்திய அமைதிப்படை நடவடிக்கைகளும் வெளிநாட்டு பத்திரிகை நிருபர்களின் வரவுநின்று போனதும் உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததும் அன்று இந்த நிகழ்வு சரித்திரம் பெருமளவில் வெளிவராமல் போனதற்கான முக்கிய காரணங்களாகும்.
கவிஞர் மு.வே.யோ.வாஞ்சிநாதன். தினக்குரல்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>