04-18-2004, 05:31 PM
72 மணித்தியாலங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் வந்த கிழக்கு
கருணா தனிவழி செல்வதாக அறிவித்து பின்னர் மட்டக்களப்பு பிராந்தியத்தில் இடம் பெற்ற பேயாட்டம் 41 தினங்களில் முடிவுக்கு வந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவராக கருதப்பட்ட வரும், ஆறு சுற்று பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவராக கலந்து கொண்டவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கேணல் கருணா, மார்ச் மாதம் 3ஆம் திகதி புலிகள் தலைமை மீது பிரதேசவாத முலாம் ப10சப்பட்ட குற்றப்பத்திரத்தை முன்வைத்து, தாம் விலகுவதாக அறிவித்தார்.
புலிகள் தலைமையை எந்தளவுக்கு அவமதிக்க முடியுமோ அந்தளவுக்கு அவமதிக்கும் வகையில் கொடும்பாவி எரிப்பு, பேரினவாத ஊடகங்களுக்கு தீனிபோடும் வகையில் பேட்டிகள், அறிக்கைகளை வழங்கி, தமிழ் தேசியத்தை மாசுபடுத்தினார் கருணா. அது மட்டுமல்ல உச்சமாக யாழ்ப்பாண வர்த்தகர்கள், பொதுமக்களை மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசத்திலிருந்து வெளியேற்றி ஆடிய பேயாட்டம் முடிவுக்கு வந்து, இப்போது கிழக்கு மண்ணிலிருந்து பேயாட்டம் ஆடியோர் விரட்டப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழும் நிலை புலிகள் தலைமையால் மீளவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிந்து ஏழு தினங்களாக யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி குறித்து நாடு கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது இம்மாதம் 9ஆம் திகதி வெள்ளி அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் அணி தென் தமிழீழத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கையைத் தொடங்கியது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனால் மிகவும் துல்லியமாக உயிரிழப்புகள் இல்லாது அல்லது மிகமிக குறைவாக இருக்கக்கூடியதாக மீட்பு வியூகம் அமைக்கப்பட்டது.
மீட்பு நடவடிக்கை வாகரை பிரதேசத்திலேயே ஆரம்பமாகும் என்பதை நன்கு அறிந்த முன்னாள் தளபதி கருணா தரவை மீனகம் தளத்திலிருந்து படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஏ-11 மரதன்கடவல - திருக்கண்டி மடுநெடுஞ் சாலையை (கொழும்பு வீதி) ஊடறுத்து போர்த் தளபாடங்களையும், தமது உறுப்பினர்களையும் அனுப்பி வைத்தார். இதற்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாக புலிகள் அமைப்பில் மீண்டும் இணைந்துள்ள மகளிர் படைத்துறை நிர்வாகப் பொறுப்பாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருவாரங்களுக்கும் மேலாக கருணா குழுவினர் தயார் நிலையில் இருந்த அதேவேளை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இதனை வீரப் பிரதாபங்களுடன் மடல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளிப்படுத்தின. தேர்தலன்று நள்ளிரவு மீட்பு நடவடிக்கை ஆரம்பமாகுமென்று பலரும் எதிர்பார்த்திருந்த போதிலும் நாட்கள் நகர நகர எதிர்பார்ப்பு தளர்ந்த நிலையில் அதிரடியாக மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
வெருகல்துறை வலது பக்கமாக தளபதி நாகேஸ் தலைமையில் ஒரு அணியும், கதிரவெளி கடற்கரைப் பக்கமாக தளபதி பிரபா தலைமையில் இன்னொரு அணியும் பால் சேனை ஊடாக nஐயந்தன் படையணித் தளபதி றியாத்தன் தலைமையில் மூன்றாவது அணியும் பெட்டி வடிவில் வியூகம் அமைத்தே மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு கட்டளை தளபதியாக சிறப்பு தளபதி ரமேஸ் செயற்பட்டதுடன் இழப்புகளை இயன்றவரை குறைக்கும் வகையிலான கட்டளை அவ்வப்போது விடுத்துக் கொண்டிருந்தார். புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளான சொர்ணம், பானு ஆகியோரும் மீட்புத் தாக்குதலுக்காக வாகரை வந்து சென்ற தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. nஐயந்தன் படையணியே வாகரை மீட்பில் முக்கிய பங்கு வகித்தது.
வெள்ளி அதிகாலை புலிகளின் மீட்பு அணி பெட்டிவியூகம் அமைத்தபின் மெகா போன் மூலம் 'நாங்கள் nஐயந்தன் படையணி வந்துள்ளோம். வாருங்கள் எம்மோடு, எம்மோடு இணைந்து உயிராபத்தை தவிருங்கள் என்ற அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக நூற்றுக்கணக்கான மெகா போன்களை புலிகள் தலைவர் வே.பிரபாகரன் விசேடமாக தருவித்து மீட்பு அணியினரிடம் வழங்கியிருந்தார்.
பலமுனைகளிலும் இருந்து வந்த அழைப்பை தொடர்ந்து கருணா அணியிலிருந்த உறுப்பினர்கள் சாரி சாரியாக அழைப்பு வந்த முனைகளை நோக்கி சென்றார்கள். கதிரவெளியிலுள்ள கட்டளைத் தளபதி ரெஐpயின் தளத்திலிருந்தும், மார்க்கன் தளத்திலிருந்தும் சூட்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதால் சிறு மோதல்கள் இடம்பெற்றன.
கதிரவெளியில் இடம்பெற்ற தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூவர் வீரமரணம் அடைந்ததாக புலிகள் அறிவித்தனர். 2ஆவது லெப்டினன் சங்கொலியன், (கந்தசாமி அருட்செல்வம்), லெப்டினன் பொதிகைத்தேவன் (பாண்டியன் வேலு), வீரவேங்கை மலர்க்குமரன் (தங்கராசா குகன்) ஆகியோரின் வித்துடல்கள் சம்ப10ர் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டன.
வாகரை பிரதேசத்தில் ஐந்து மணித்தியால நேர நடவடிக்கையில் கருணா தரப்பில் ஆறு பேர் பலியானதுடன் 8 பேர் காயமடைந்தனர். தளபதி பாரதிராஐ; என்பவரும் படுகாயமடைந்தார். (இவர் இப்போது புலிகள் அமைப்பின் பராமரிப்பில் உள்ளார்.) புலிகள் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்தால் நு}ற்றுக் கணக்கில் உயிர்ச் சேதம் ஏற்படுமென பல தரப்பினரும் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தவேளை அதுவும் உயிரிழப்புகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் பலத்த சவால்களை எதிர்கொள்வார்களென பலரும் எதிர்பார்த்திருந்த வேளை. மிக மிக சொற்பமான இழப்புடன் ஐந்து மணித்தியாலத்திற்குள் வாகரைப் பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மீண்டது.
வாகரை மீட்பு சுலபமாக வீழ்ந்தாலும் புலிகள் மீனகம் இராணுவத்தளம் உள்ளிட்ட படுவான்கரைப் பிரதேசத்தை கைப்பற்ற முற்படும்போது பல இழப்புகளை எதிர்நோக்க நேரிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை, புலிகள் தரப்பு, வாகரையிலிருந்து தரவை நோக்கி நகர்வை மேற்கொள்ளலாமென்ற எதிர்பார்ப்பில் ஏ-11 நெடுஞ்சாலையில் இராணுவத்தினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
எவ்வாறு படுவான்கரை நோக்கிய நகர்வு இடம்பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதிப்புகளுக்கு நிவாரணமளிக்கும் வகையில் அனர்த்த குழுவும் அரச அதிபரால் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், வாகரை வீழ்ந்த 72 மணித்தியாலங்களுக்குள் அம்பாறை மாவட்டமும், படுவான்கரை பிரதேசமும் எந்த யுத்தமுமின்றி புலிகளிடம் வீழ்ந்தது. ஏற்கனவே வெல்லாவெளி பக்கமாக ஊடுருவியிருந்த தளபதி ரமணன் தலைமையிலான குழுவினர் கொக்கட்டிச்சோலை நோக்கி நகர்ந்து அரசியல்துறை மாவட்ட செயலகம், தமிழ் அலை தினசரி காரியாலயம் என்பவற்றை ஞாயிறு மாலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
வன்னியோடு வழங்கல் மார்க்கத்தை ஏற்படுத்திய புலிகள் அமைப்பு, வாகரையிலிருந்து எப்படியாவது படை நகர்வை ஏற்படுத்தி, தன்னைச் சுற்றிவளைக்கும் என்பதை நன்குணர்ந்த கருணா ஞாயிறு மாலையே பின்வாங்கும் தீர்மானத்தை படிப்படியாக செயற்படுத்த தொடங்கிவிட்டார். அவ்வேளை ஐனாதிபதியின் ஆலோசகர் கே. பாலபெட்டபந்தி, இராணுவத் தளபதி லயனல் பல்கல்ல ஆகியோர் 23. 3ஆவது படைப்பிரிவு கட்டளைத் தலைமையகம் இயங்கும் மட்டக்களப்பு மாநகரசபை கட்டிடத்தில் தங்கியிருந்தார்கள். ஞாயிறு இரவு முழுவதும் இருந்த அவர்கள் மறுநாள் காலையே கொழும்பு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகரை புலிகளிடம் வீழ்ந்ததையடுத்து போராளிகளின் பெற்றோர்களும் மீனகம் தளத்திற்கு சென்று, பிள்ளைகளை தருமாறு கருணாவை நச்சரித்ததாகவும், அதனை சமாளிக்க முடியாத அளவுக்கு பெருந்தொகையான பெற்றோர்கள் சூழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்தே திங்கள் அதிகாலை தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து பின்வாங்கும் முடிவை கருணா அறிவித்ததுடன் விரும்பியவர்கள் கொழும்புக்கு வரலாமென்றும் தெரிவித்தார். அறிவிப்பை அடுத்து போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்தும் சிலர் நின்ற இடத்தில் போட்டு விட்டும் தமது வீடுகளை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள்.
இதனையடுத்து படுவான்கரைப் பிரதேசத்திலும் படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும் ஆங்காங்கே ஊடுருவியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அணிகள் படுவான்கரை பிரதேசத்தில் நுழைந்து தமது கட்டுப்பாட்டை ஒரு துளி இரத்தமும் சிந்தாது நிலைநாட்டினார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தேனகம், மீனகம், மற்றும் கருணா அணி நிலைகொண்ட தளங்களில் தேடுதல் மேற்கொண்டார்கள்.
மீனகம் தளத்திலும், மீனகத்திற்கு செல்லும் வழியிலும் உழவு இயந்திரங்களில் ஆயுதங்கள் ஏற்றப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்தததை கண்டார்கள். ஆட்லறி, மல்ரிபரல், சினைப்பர் என்பன சேதமாக்கப்படாத நிலையில் காணப்பட்ட போதிலும் சக்தி வாய்ந்த அதேவேளை படைத்தரப்பினரிடம் இல்லாத நவீன மோட்டார் எறிகணைகள் சில வெளியேற்றப்பட்டிருப்பதை மீட்பு அணியினர் கண்டு வேதனைப்பட்டனர். படைத்தரப்பிற்கு கையளிக்கவே உழவு இயந்திரங்களில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டிருக்கலாமென்றும் அதற்கு அவகாசம் கிட்டாத நிலையில் கைவிட்டிருக்கலாமென்றும் நம்பப்படுகிறது.
ஆனால், பலகோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. மீனகம் தளம், இலுப்படிச்சேனை நிதிப்பிரிவு அலுவலகம் என்பவற்றில் பல வாகனங்கள் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. மீனகம் முகாமுக்கு செல்லும் வழியிலும் பல வாகனங்கள் எரியூட்டப்பட்டு சேதமான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் பொது மக்கள் சொத்தாகும். இதனை அழிக்கும் குரோத மனப்பான்மை கண்டனத்திற்குரியது. மன்னிக்க முடியாதது என்று அரசியல் துறை கருத்துத் தெரிவித்துள்ளது.
இதைவிட கருணாவினால் மார்ச் முதலாம் திகதி முதல் சிறையில் வைக்கப்பட்டிருந்த உதவி புலனாய்வு பொறுப்பாளர் லெப். கேணல் நீலனின் வித்துடல் கருணாவின் மருதம் முகாமினில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவரான லெட்டினன் கேணல் நீலன், பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் பங்கெடுத்தவர். புலனாய்வு துறையில் துல்லியமான அனுபவஸ்தரான இவரின் இழப்பு புலிகளுக்கு அதிர்ச்சியானதாகவே அமையும். கருணா குழுவினர் மேலும் நால்வரை கொலை செய்து களுவன்கேணியில் புதைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புளொட் அமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பு என்பவற்றிலிருந்து பிரிந்து சென்ற சிலர் இராணுவத்திற்கு பக்கபலமாக செயற்பட்டு வரும் நிலையில் இப்போது கருணா எங்கு சென்றுள்ளார் என்ற கேள்வி மட்டக்களப்பு மக்களிடம் திகிலாக எழுந்துள்ளது. ஆரம்பத்தில், அவர் நெருக்கமான சிலருடன் ஹெலிகொப்டரில் ஏறி கொழும்புக்கு சென்றதாக செய்திகள் வெளிவந்தன. பின்னர் அமெரிக்கா சென்றதாகவும் ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டன.
அம்பாறை-மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளர் இ.கௌசல்யன் கதிரவெளியில் வைத்து மீட்பு நடவடிக்கையின் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கருணா எங்கே என்ற கேள்விக்கு 'கருணா எங்கு போனார் என்பது தெரியாது. மட்டக்களப்பு பிராந்தியத்தில் இல்லை என்று மட்டும் தெரிவித்தார்.
கருணா, பொலநறுவை எல்லையில் வடமுனை பிரதேசத்திலுள்ள காட்டில் இருப்பதாகவே செய்திகள் தெரிவித்தன. திருமலையில் சரணடைந்த கருணா அணி உறுப்பினர்கள் 18 பேரை புனானை முருக்கன் என்ற இடத்தில் ஐPவேந்திரன் என்ற கருணா அணித் தளபதியிடம் படையினர் ஒப்படைத்ததாக கசிந்த தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
கருணா பாவித்து வந்த 47 லட்சம் ரூபா பெறுமதியான பஐPரோ வாகனம் வந்தாறுமூலை உப்போடை பக்கமாக தீக்கிரையான நிலையில் காணப்பட்டமை அவர் ஏ-15 நெடுஞ்சாலைக்கு வந்து படைத்தரப்பினரின் அனுசரணையுடன் தப்பிச் சென்றிருக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மாவடிவேம்பு படைமுகாமுக்கு சமீபமாக திங்கள் காலை கருணா குழுவினரின் நடமாட்டம் காணப்பட்டதை பொதுமக்கள் தரப்பும் உறுதிப்படுத்துகிறது.
கருணாவும் அவருக்கு நெருக்கமான சகாக்களும் வடமுனைக்கும் வெலிக்கந்தவுக்குமிடையிலான அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் முகாமிட்டிருப்பதாகவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கும் பட்சத்திலும், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களை பெறக்கூடியதுமான விநியோக மார்க்கத்தை அருகிலுள்ள படை முகாம்களோடு ஏற்படுத்தக்கூடிய இடத்திலேயே தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
கருணா தப்பிய விவகாரம் தொடர்பாக புலிகள் தரப்பிற்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து இன்னொரு தகவலும் கசிந்துள்ளது. தரவை மீனகம் இராணுவத் தளத்திலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்திலிருந்த கருணாவின் மருதம் முகாமிலிருந்து வெள்ளை நிற டொல்பின் வாகனத்தில் தப்பிச் அவர் சென்றார்.
பஞ்சுமரத்தடி வீதியூடாக வாகனேரி வீதிக்கு சென்று ஏ-11 நெடுஞ்சாலையை அடைந்து படையினரின் உதவியுடன் ஞாயிறன்று மின்னேரியா 2ஆவது படைப்பிரிவு தலைமையக வளாத்தில் தங்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விவகாரம் வெளியே கசிந்ததையடுத்து தலைநகருக்கு சமீபமாகவுள்ள முக்கிய படைத்துறை பயிற்சி முகாமில் தங்கவைக்கப்பட்டதாகவும் ஊகங்கள் எழுந்துள்ளன.
கருணா படைத்தரப்போடு இணைந்து செயற்படுவாரா அல்லது வெளிநாட்டிற்கு செல்வாரா என்பதே மக்கள் மத்தியில் எழுந்துள்ள வினா, ஏனைய மாவட்டங்களை விட, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இயக்கங்களிலிருந்து பிரிந்து படையினரோடு இணைந்தவர்களால் பெரும் பாதிப்புகளையும் அனர்த்தங்களையும் சந்தித்திருக்கிறார்கள். தமிழீழ விடுலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துள்ள அணியினரும் படையினரோடு இணைந்து செயற்படுவார்களேயானால் அதுவும் பிராந்திய தளபதியாக இருந்த ஒருவர் தலைமையில் இணைவார்களேயானால் மக்கள் பெரும்பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டியேற்படலாமென்ற அச்சம் எழுந்துள்ளது.
எது எப்படியிருந்தாலும், புலிகள் தலைமை 72 மணித்தியாலங்களுக்குள் மட்டக்களப்பு, அம்பாறை பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறது. இதன்மூலம் புலிகள் தலைமை தனது இறைமையை இராணுவ சமபலத்தை மீண்டும் தக்கவைத்துள்ளது. அத்தோடு யுத்த சூழலில் முன்னர் இத்தகைய சவால்களை முறியடித்த புலிகள் தலைமை போர் நிறுத்த சூழலிலும் எந்த சூழலிலும் சவால்களை முறியடிக்கும் வலு தனக்கு உள்ளதென்பதை நிரூபித்துள்ளது.
கருணாவின் வெளியேற்றத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலவீனப்பட்டுவிடும் என்று பேரினவாத சக்திகள் மட்டுமல்ல சில வெளிநாட்டு சக்திகளும் பகற்கனவு கண்டன. பிரதேசவாதத்தில் குளிர்காய விரும்பிய சக்திகளும் உற்சாகமடைந்தன. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு எந்த சக்தியும் எதிர்காலத்தில் நெருக்கடி கொடுக்கமுனையக்கூடாது என்பதற்கான பதிலை புலிகள் வழங்கியுள்ளனர்.
இனிமேல் எந்தச் சந்தர்ப்பத்திலும் புலிகள் அமைப்புக்குள் இருந்து புலிகள் தலைமைக்கு எதிரான நெருக்கடி முளை விடமாட்டாது என்பதற்கு கருணா விவகாரம் சிறந்த முன் உதாரணமாக திகழும். அதேவேளை, புலிகள் அமைப்பும் கருணா விவகாரம் கற்றுத்தந்த பாடங்களை கருத்தில் கொண்டு அமைப்பு பற்றிய அணுகுமுறைகளை மாற்றியமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.
பிராந்திய hPதியான படையணிகள், உருவாக்கம் எதிர்காலத்தில் மீளாய்வு செய்யப்பட வேண்டி ஏற்படலாம். அத்தோடு அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களை தொடர்ந்து ஒரே இடத்தில் செயற்படுவது பற்றியும் சிந்திக்கத் தூண்டலாம். அத்தோடு பிராந்திய தலைமைகள் முனைப்பு பெறுவதும் மட்டுப்படுத்தப்பட வேண்டுமென்ற சிந்தனை ஏற்படலாம்.
கருணா விவகாரத்தை புலிகள் தலைமை வெற்றிகரமாக சமாளித்தாலும் தமிழ் தேசியத்தை மக்கள் மனங்களில் ஆழமாக பதியச் செய்வதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியத்திலும் அவசியமாகும். மட்டக்களப்பு பிராந்திய மக்கள் மனங்களில் புதைந்துள்ள அபிப்பிராயங்கள் கருத்துகளை அறிந்து புலிகள் அமைப்பின் அணுகுமுறைகளிலும் தேவையேற்படின் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
கருணா விவகாரம் கற்றுத்தந்த பாடத்தை புலிகள் அமைப்பு தக்கவாறு பயன்படுத்தி, தன்னை மேலும் புடம் போட்டு கொள்ளுமென நம்பலாம்.
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (18.04.04)

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>