Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
'சிறுவர் அமுதம்' அமரர் சின்ன இராஜேஸ்வரன்!
#2
திரு சே.மகேந்திரன், (இளைப்பாறிய தபால் அதிபர், சிவநெறிக்காவலர்), Bergisch-Gladbach, Germany
சிறுவர் அமுதம் சஞ்சிகையின் தந்தை அமரர் சின்ன இராஜேஸ்வரன் மறைந்து பத்தாண்டுகள் நிறைவுறுகிறது. எதிர்வரும் 19.04.2004 அன்று அன்னாரை நாமெல்லோரும் நினைவுகூரும் தினமாகும்.... எம்மனக்கண்ணில் மட்டுமல்ல, இன்றைய இளையதலைமுறையினரும் மறக்க முடியாத மறையாதிருக்கும் மாயவிம்பமாக அவரின் உருவம் பதிந்துவிட்டது வியப்பில்லை.
நாம் விரும்பியோ விரும்பாமலோ வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழமுற்பட்ட சூழ்நிலையில் எங்களின் வருங்காலச் சந்ததியினரின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்பதைச் சிந்தித்து செயலாற்றிய ஒரு மேதை என்றே அவரைச் சொல்லலாம்.
புலம்பெயர்ந்து வேற்றுமொழிச்சூழலில் வாழும்நிலையில் நம்மவர்கள் மத்தியில் தாய்மொழிக் கல்வியை வளர்த்தெடுக்கின்ற நோக்கத்திலே 1990ம் ஆண்டு தைமாதம் முதல் கையெழுத்துப் பிரதியாக ஆரம்பிக்கப்பட்டது. அவரின் தீவிர முயற்சியின் பயனாக நாளடைவிலே பல நூறு குழந்தை வாசகர்களின் வருகையால் அதே ஆண்டிலேயே தட்டச்சுப் பிரதியாகவும் பின்னர் கணனிப் பிரதியாகவும் பல வர்ணங்களிலே சிறுவர்களைக் கவரும்வண்ணம் கவர்ச்சிகரமான முகப்பு அட்டைகளுடன் வெளிவந்தது.
இதைத்தொடர்நஇது சிறுவர்களின் மிகப் பெரிய ஆர்வத்தைக் கண்ட இவர் 1992ம் ஆண்டு சிறுவர் கலைவிழா மிகப் பெரிய அளிவில் நடாத்தி பெரு வெற்றியும் கண்டார். .... 'தமிழீழம் எங்கள் நாடென்போம், இதற்கு ஏது இணையென்போம்' என்று தமிழ் முழக்கம் செய்து சிறுவர்களின் பிஞ்சு மனதிலே தேசபக்தியை ஊட்டிய இவர் 19.04.1994ல் சிற்றூர்தி விபத்தில் அகாலமரணமானார்...
.... அமரர் சின்ன இராஜேஸ்வரன் அவர்களின் பூதவுடல் பேழையில் வைக்கப்பட்டு கடைசிப் பயணத்திற்கு ஆயத்தமானவேளையில், அவரின் ஒரேயொரு மகள் சிறுமி பிங்கலை ஓடிவந்து அவரின் கையிலே பேனாவையும் சிறுவர் அமுதம் சஞ்சிகையையும் தாளையும் வைத்து அவரை வழியனுப்பிய காட்சி இன்றும் பசுமையாகத் தெரிகிறது...

அசோகன் நிர்மலராஜா, ஜேர்மனி பல்கலைக்கழகம்.
சின்ன இராஜேஸ்வரன் சிறப்புடைய நல்லாசிரியர். என்னை நான் அறிய முன்னர் அன்னைமொழியை ஆரம்பித்தார் எனக்கு.
நிலம் எது மொழி எது என தெரியாத பருவத்தில் புலம்பெயர் மொழியை வளமாக வளர்கையில் பலம் உன் தாய் மொழியென ஐந்து வயதில் பைந்தமிழ் பயிற்றுவித்த சின்ன இராஜேஸ்வரன் சிந்தனை கொண்டு சிறுவர்கள் ஒன்றாகக்கூட முற்றம் ஒன்று தேடி தமிழ்சுற்றம் அனைவரையும் அரவணைத்து இதய சுத்தமுள்ள தன் துணைவியுடன் ஆரம்பித்தார் ஓர் கலைக்கூடம்...........
சரிந்து வீழ்நதது அவர் பூதவுடல். தெரிந்து வாழ்வது அவர் தமிழ்த்தொண்டு. பத்தாண்டுகள் பறந்தோடிவிட்டாலும் வித்தாக்கிய தமிழுணர்வு பெரும் சொத்தாகி 'சிறுவர் அமுதம்' நூல்வடிவில் வாழும் எம் நினைவுகளுடன்...

(குறிபஇபுகள் தொடரும்....)
.
Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 04-18-2004, 01:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)